மறுரூபமாக்க மறுரூபமாகுமாதிரி
![மறுரூபமாக்க மறுரூபமாகு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18414%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவனுடைய அழைப்பும் தனிப்பட்ட மறுரூபமாகுதலும்
“தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்;’ என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்" (எபே. 1:1)
தேவனுடைய அழைப்பைப் பெறுவதற்கு முன்னர் பவுல் சபையைத் துன்புறுத்தினவர். தேவனுடைய பிள்ளைகளை (கர்த்தருடைய சீஷரைப்) பயமுறுத்தி கொலை செய்யும்படி சீறிப் பாய்ந்தவர். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்களைத் துன்புறுத்தும்படி பிரதான ஆசாரியர்களிடத்திலிருந்து அதிகாரமும் பெற்றவர். ஆனால் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் தேவன் அவனைச் சந்தித்து, பவுல் எப்படியிருந்தான் எனவும் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தெளிவு படுத்தினார். அந்த எதிர் எதிர் சந்திப்பின்மூலம், தேவன் அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் மறுரூபத்தைக் கட்டளையிட்டார். அந்த சந்திப்பு அவனைக் தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியச்செய்து, மற்றவர்களை மதிக்கிறவனான். அதன்பிறகு அவன் பழைய மனிதன் அல்ல.
மறுரூபமாக்கப்பட்ட பவுல், கொரிந்து சபையாருக்கு எழுதின நிருபத்தில், தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களை, “கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும்,பரித்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாயிருக்கிற” என்று எழுதுகிறார்.(1கொரி.1:2). வேறுபாடுகளின் மத்தியிலும், திருச்சபை கிறிஸ்துவின் சரீரம் , அது தேவனுக்கே உரிமையானது, அந்தக் தேவன் யூதருக்கும், பிற இனத்தவருக்கும் ஒன்றாகவே இருக்கிறார் என்று கண்டுகொள்ள ஆரம்பித்தார் . தேவனுடைய கிருபையையும் சமாதானத்தையும் அனுபவித்த தேவனுடைய மக்கள் இருக்கிற இடமே திருச்சபை என்று பாராட்டுகின்றார். அவருடைய நிருபங்களில் எல்லாம் தேவனின் கிருபையும் சமாதானமும் திருச்சபையிலும் கிறிஸ்தவ விசுவாசிகளின் மத்தியிலும் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார். இந்த நவீன காலத் திருச்சபைகளும் இந்த ஜெபத்தை ஏறெடுத்துக்கொண்டே இருக்கின்றது.
தேவனுடன் எதிர் எதிர் சந்திப்பின்மூலம், திருச்சபையின் எதிரியாக இருந்து பின்னார் திருச்சபையை மிகவும் நேசிக்கும் பவுலின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. எந்தக் தேவனைத் துன்புறுத்தச் சொன்னாரோ அந்தக் தேவனுடைய நேருக்குநேர் சந்திப்பை மிகவும் அரிதானதாகவும் சிறப்பாகவும் உணர்ந்தார். அடிக்கடி நாம் தேவனுக்கு எதிராகக் கலகஞ்செய்கிறவர்களாகவே காணப்படுகிறோம். அங்கேதான் தேவன் நம்மைச் சந்திக்கிறார். நாம் யார் ? நாம் எப்படி இருக்க வேண்டும் என்று அவ்வப்பொழுது உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். அவருடைய கிருபையினால் நம்மைத் தகுதிப்படுத்தி மறுரூபமாக்குகிறார். நாம் செய்ய வேண்டியது, அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, பழைய வழிகளை விட்டு மனந்திரும்பி, மறுரூபமாகுதலுக்குத் தயாராக வேண்டும். நம்முடைய வாழ்வில் தேவன் செயல்பட அனுமதிக்கும்பொழுது, நம்முடைய பழைய சுபாவங்களைப் பின்னுக்குத்தள்ளி, புத்தம்புதிய ஆரம்பத்தைத் தருவதரற்கு அவர் நம்பத்தக்கவர். அவ்வாறு செய்யும்பொழுது அது நமக்கு மட்டுமல்ல, வரப்போகும் சந்ததியினருக்கும் அது ஆசீர்வாதமாக இருக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மறுரூபமாக்க மறுரூபமாகு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18414%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவன் நம்மை அழைத்ததின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பது, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது, பிறருக்கு அவருடைய இரட்சிப்பின் கிரியையை அறிவிப்பது, எதிர் கால நம்பிக்கையுடன் நிகழ்காலங்களைக் கடத்தல், தேவன் தெரிந்து கொண்ட தகுதியுள்ள பாத்திரமாக வாழ்வது, திருச்சபைகளில் ஐக்கியத்தை வளர்ப்பது, கிறிஸ்துவை மட்டுமே தலைவராகக் கொள்வது, தேவனுடைய வார்த்தையைப் போதித்து பிரகடனப்படுத்துவதாகும்.
More
ഈ പദ്ധതി നൽകിയതിന് സി ജെബരാജിന് നന്ദി പറയാൻ ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു. കൂടുതൽ വിവരങ്ങൾക്ക്, സന്ദർശിക്കുക: http://jebaraj1.blogspot.com/ |
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![நம்பிக்கையின் குரல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F19667%2F320x180.jpg&w=640&q=75)
நம்பிக்கையின் குரல்
![உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F20517%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்
![கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22146%2F320x180.jpg&w=640&q=75)
கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்
![உண்மைக் கர்த்தர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24467%2F320x180.jpg&w=640&q=75)
உண்மைக் கர்த்தர்
![சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22005%2F320x180.jpg&w=640&q=75)
சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F320x180.jpg&w=640&q=75)
BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்
![உண்மை ஆன்மீகம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24465%2F320x180.jpg&w=640&q=75)
உண்மை ஆன்மீகம்
![நான் புறம்பே தள்ளுவதில்லை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26850%2F320x180.jpg&w=640&q=75)
நான் புறம்பே தள்ளுவதில்லை
![தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F23038%2F320x180.jpg&w=640&q=75)
தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்
![இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26874%2F320x180.jpg&w=640&q=75)