கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி
“உனக்கு என்ன வேண்டும்?” என்ற கேள்வியை எங்கள் திருமணம் வீழ்ந்துகொண்டிருக்கும்போது என்னுடைய முன்னாள் கணவர் கேட்டார். “இது வரை எந்த மனிதனும் செய்யத ஒன்றை நீ செய்யவேண்டும்… எனக்காக நீ போராட வேண்டும்.” என அழுகையின் மத்தியில் என் குரல் தழுதழுத்தது.
பின்னாட்களில், நான் ஒற்றைத் தாயாக சவால்நிறைந்ததும் மிகவும் தனிமையானதுமான பாதையில் நடந்தபோது, "உனக்கு என்ன வேண்டும்?" என்னும் அதே கேள்வியை, ஆண்டவர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். பல வருடங்கள், அதற்கு பதில் கூற என்னிடம் எதுவும் இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்பது உண்மையில் அவசியமானதா? என்று ஆச்சரியப்பட்டேன்.
என்னுடைய எல்லா ஏக்கங்களையும் ஆசைகளையும் வெகுவாக சொல்லப்படும், கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும், "உம்முடைய சித்தம், என்னுடையது அல்ல" எனும் மந்திரத்தின் பின் ஒளித்துவைத்தேன்..
ஆண்டவரின் சித்தத்திற்கு சரணடைவது நல்ல விஷயமாக இருந்தாலும், ஆண்டவருக்கு என்னுடைய செயலில்லாத வெறும் ஒப்புக்கொடுத்தல் தேவை இல்லை - அவருக்கு என்னுடைய இருதயமே தேவை என்பதை அறிந்து கொள்ள எனக்கு வெகு காலம் ஆகிற்று. கடமைக்காகவும் ஒடுக்கப்பட்டதால் வரும் விருப்பத்திற்காகவும் கட்டளைகளை பின்பற்றும் அடிமைகளை அவர் தேடவில்லை, மாறாக நெருக்கத்தாலும் உறவாலும் அவருக்கு செவிசாய்த்து நடக்கும் மகள்களையும் மகன்களையும் தான் அவர் தேடுகிறார்.
“ஏக்கங்கள் நன்மையானது. அவை வரப்போகும் அற்புதங்களின் எதிரொலி.”என்று சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்.
ஆண்டவர் நமது கனவுகளில் அக்கறையுடையவர். நமது இதயங்களின் ஏக்கங்களில் அக்கறையுடையவர். நாம் அவரை அனுமதித்தால், அவர் நமது விசுவாசத்தைக் கட்டவும் நம்முடைய ஏக்கங்களை அவரிடம் பகிர்ந்துகொள்ளும்போது நம்மை நெருங்கி சேர்த்துக்கொள்வதற்கும் நமது காத்திருப்பின் காலங்களை பயன்படுத்துகிறார். ஆண்டவரிடம் நம் கனவுகளை பகிர்ந்துகொள்வதால் நாம் நினைப்பவை அனைத்தும் கிடைக்கும் என்று அர்த்தமில்லை. அவர் ஒன்றும் விளக்கிலிருந்து வந்த பூதம் அல்ல. மாறாக நமது கனவுகளை அவரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் நாம் அவரிடம் நெருங்கிச்சேர வழிவகுக்கும்.
அவர்களுடைய கனவுகளையும் ஆசைகளையும் உங்களிடம் என்றுமே சொல்லியிராத நெருங்கிய நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையை உங்களால் நினைத்துப்பார்க்க முடியுமா? அத்தகையவரிடம் நாம் தொடர்பற்றுப்போய் அந்த உறவானது மிகவும் ஆழமற்றதாக தோன்றும் என்று நான் நினைக்கிறேன். நம்முடைய தேவைகளையும் ஆசைகளையும் பகிர்ந்து கொள்ளும் இந்த தாக்கம்நிறைந்த பழக்கம்தான் தேவனிடமும் மற்றவர்களிடமும் நெருக்கமான உறவுகொள்ளும் நம்முடைய திறனை ஆழப்படுத்தும்.
நானோ, என்னுடைய சொந்த குடும்பம் ஒன்றோடு உணவருந்தும் மேசையில் தினமும் உட்காரவேண்டும் என்னும் என் கனவை பல வருடங்களாக மறுக்க முயற்சிசெய்ததன் பின், இறுதியில் எனக்கு என்ன வேண்டுமென்பதை ஆண்டவரிடம் கூறிவிட்டேன். நான் மீண்டும் திருமணம் செய்ய வேண்டுமென்றேன். என்னுடைய கனவுகளையும் தொலைநோக்கத்தையும், பொறுப்புகளையும் சவால்களையும், சிரிப்பையும்,என்னுடைய கண்ணீரையும் பகிர்ந்துகொள்ள எனக்கு ஒருவர் தேவைப்பட்டார்.
காத்திருப்பின் காலம் தொடர்ந்தது. அதில், தேவன் ஆழ்ந்த குணமாக்குதலை என்னுள் தொடர்ந்தார். பரஸ்பர நடப்பைப் பற்றியும் பாதுகாப்பான நபர்களுடன் உண்மையான உணர்ச்சிமிக்க நெருக்கம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியும் எனக்குக் கற்றுக்கொடுக்க அந்த காத்திருப்பை அவர் பயன்படுத்தினார். தேவனுடைய தன்மை நம்பிக்கைக்குரியது. அவருடைய திட்டங்கள் அருமையானவை. தேவன் உண்மையிலேயே நல்லவர், எனும் என்னுடைய விசுவாசத்திலும் நான் வளர்ந்தேன். இந்த உண்மைகளை என்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் என்றும் மாற்ற முடியாது என்பதை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கான ஆதாரங்கள் எதையும் நான் பார்க்கவில்லை என்று நினைத்தாலும் இந்த உண்மைகளில், நான் நிலைத்துநிற்க எனக்கு அவர் கற்றுக்கொடுத்தார்.
உங்களுக்கு என்ன வேண்டும்?
வேதத்தின் முழுமையிலும், இந்த கேள்வியின் பல மாதிரிகளை இயேசு அவர் சந்திக்கும் மக்களிடம் கேட்டுள்ளார். உங்களிடமும் அதை கேட்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் ஆராய்ந்து அவரிடம் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறேன். உங்களுடைய இருதயத்தின் ஏக்கங்களை அவரிடம் நம்பிக்கையோடு கூறலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.
More