கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 4 நாள்

ஏமாற்றமும் வலியும் சோதனைகளை தூண்டும் வழிகளை கொண்டுள்ளன. அவை நம்முடைய வாழ்வின் பலவீனமான பகுதிகளில் நம்மை மேலும் பாதிப்படையச் செய்யும். தனிமைப்படுத்திக்கொள்வது, அதிகம்-சாப்பிடுவது, சாதாரணமாக பாலுறவுகொள்வது, அல்லது அதிகமாக மதுஅருந்துவது, போன்ற எதையும் பயன்படுத்தி வலியை தவிர்க்கவோ அல்லது அதிலிருந்து தப்பிக்கவோ ஆசைப்படுவது பாவத்துடனான சமரசத்தை நோக்கி நம்மை நகர்த்தும். நாம் நன்றாக உணர்வதற்கு நமக்கு தகுதி உண்டு என்று நமக்குள் நாமே சொல்லிக்கொள்கிறோம்.

நமக்கு வலிக்கும்போது, ​​தற்காலிகமான ஆறுதலுக்காக கனவை தியாகம் செய்ய நாம் அதிக முனைப்பு காட்டுகிறோம். நம்முடைய தீமைகள் கொண்டு வரும் ஆறுதல் விரைவாக நீங்குபவை மற்றும் மிகவும் மேலோட்டமானவை, மோசமான நிலையிலும் மிக மோசமானவை.

லா போஹெமி என்னும் புகழ்பெற்ற ஒரு இசை நாடகத்தில் ஒரு காட்சி வரும், அதில் பாரிஸ் நகரத்தின் கடுமையான குளிர்காலத்தை இரண்டு ஆண்கள் அனுபவிக்கின்றனர். அதில் ஒருவரான, எழுத்தாளர், ஒரு படைப்பின் வேலையில் பலமணிநேரங்களை செலவுசெய்திருந்தார். அவர் இனி தனது எழுத்தில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு குளிரடைகிறார்.

நெருப்பில் எரிக்கக் கரியோ அல்லது விறகோ வாங்கப் பணம் இல்லாத நிலையில், ஒரு கண வெறுப்பில், அவருடைய முழு எழுத்துப்பிரதியையும் நெருப்பிற்குள் வீசுகிறார். நொடிகளில், அவருடைய எழுத்துக்களுடைய அந்த காகிதக்கட்டு சாம்பலாக எறிந்துவிடுகிறது.

இந்த எழுத்தாளர் தனது கனவையும், அவர் உழைப்பு அனைத்தையும், ஒரு விரைவாக கடந்துபோகும் ஆறுதலுக்காக தியாகம் செய்தார். அவர் விட்டுக்கொடுத்துவிட்டார். 

ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட ஏசாவின் கதையிலும் இதே மாதிரியைக் காண்கிறோம். களைத்துப்போய் பசியுடன் இருந்த அவன், வீட்டிற்குத் திரும்பியபோது சூடான கூழின் வாசனை அவனை வரவேற்த்தது. வாழ்வாதாரத்திற்காக ஆசைப்பட்ட ஏசா, முதற்பிறந்தவனாக அவனுக்கு இருந்த தனது பிறப்புரிமை, எல்லா சலுகைகள், அதிகாரம் மற்றும் மரபுரிமை, ஆகியவற்றை கொஞ்சம் கூழிற்காக விட்டுக்கொடுக்கிறான். வயிற்றின் தற்காலிக திருப்திக்காக அவர் தனது எதிர்காலத்தை தியாகம் செய்தார்.

கேளுங்கள், எனக்கு புரிகிறது. 

நான் துக்கப்படுகையில் என் உணர்வுகளை சாப்பிட்டுத் திருப்திப்படுத்த ஆசைப்படுகிறேன் (நான் பல முறை விட்டுக்கொடுத்துள்ளேன்!).  என்னுடைய விவாகரத்திற்குப் பிறகு, தனிமை என்னுடைய தரத்தைக் குறைத்துக்கொண்டு பிறருடன் சரியான முறையில் பழகுவதில் என் கவனத்தை விட்டுக்கொடுக்கத் தூண்டியது. நல்லவேளையாக, இந்த சோதனையில் நான் விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால் தூண்டுதல் இருந்தது உண்மை.

நான் திவால்நிலையின் விளிம்பில், என் வீட்டை இழந்ந்துகொண்டு இருந்தபோது, அருகாமையில் குடியிருந்த ஒருவர் மருந்து விற்பனையில் 6-இலக்க சம்பளம் கிடைக்கும் வேலையை எனக்கு வழங்கினார். அந்த வேலையை ஏற்றுக்கொள்ள நான் மனதில் தூண்டப்பட்டேன். ஆனால் அப்படி செய்திருந்தால் Treasures(புதையல்)இன் வேலையை நெருப்பில் போட்டதுபோல் ஆகியிருக்கும். அதிக நிதி நிலையின் தற்காலிக ஆறுதலுக்காக கடவுள் என்னை அழைத்த நோக்கத்தை விட்டுக்கொடுப்பது மதிப்புக்குரியதல்ல.  

சில நேரங்களில் தேவ கனவுக்கு தியாகம் தேவை. இவ்வாறாக பார்த்தால், நம்முடைய வசதியான நிலையை விட நம்முடைய குணத்திலேயே கர்த்தர் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

கடினப்பாடுகள் நம்முடைய குணத்தை வளர்க்கவோ அல்லது தகர்க்கவோ நாமே அனுமதிக்கிறோம். தற்காலிகமானவற்றிற்காக நம் கனவை நாம் தியாகம் செய்யலாம், அல்லது விடாமுயற்சி செய்து அந்த விடாமுயற்சி நம்முடைய குணத்தை வலுப்படுத்தவும் முதிர்ச்சியான நிலையை நம்மில் கட்டமைக்கவும் அனுமதிக்கலாம்.

தற்காலிகமானவற்றிற்காக உங்கள் தேவ கனவை விட்டுவிடாதீர்கள். விரைவான வழிகள் மற்றும் தற்காலிக இன்பங்களுக்காக உங்கள் கனவுகளை இழக்கச் செய்யும் வலிகள் அல்லது ஏமாற்றங்களை அனுமதிக்காதிருங்கள். விட்டுக்கொடுக்காதீர்கள். அதிகமானவை பாதிப்படையும்.

உங்கள் விசுவாசத்தின் மறுமுனையில் விடுதலைவாழ்வு உள்ளது.  உங்களுக்காகவும், நீங்கள் உங்களுக்கான தேவ நோக்கத்தை முழுமையாக வாழ்வதன் மூலம் பயனடையும் மக்களுக்காகவும்!

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்