கனவுகள் மீட்கப்பட்டனமாதிரி

Dreams Redeemed

7 ல் 5 நாள்

ஒரு அழகான சனிக்கிழமை காலை வேளையில், என் 3 வயது செல்ல மகள் நிம்மதியாக தூங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் எழுந்திருப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன், ஏனென்றால் அவளுக்குப் பிடித்த காலை உணவைக் கொண்டு அவளை ஆச்சரியப்படுத்தவும் அந்த நாளில் அவளை திரைப்படத்திற்கு அழைத்துச்செல்லவும் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுக்கவும் திட்டமிட்டிருந்தேன்.   

நான் மெதுவாக அவள் நெற்றியில் இருந்த முடியைக் கோதி அவள் கன்னத்தை ஸ்பரிசிக்க ஆரம்பித்தேன். “எழுந்திரு குட்டித் தூங்குமூஞ்சி," என அவள் காதில் மெல்ல பேசினேன்.   

திடீரென்று, அவள் சண்டைபோடுவதுபோல் பொங்கி எழ அவளுடைய கைகளும் கால்களும் அங்குமிங்கும் படர்ந்தன. “இல்லை! நான் எழ மாட்டேன்,” என பயங்கரமாக கத்தினாள். அவளுடைய குட்டி, தேவதை முகம் கோபத்தில் திருகி சிவப்பு முள்ளங்கி நிறத்திற்கு மாறியது. 

என் இதயம் மூழ்கியது. அவளுடைய திடீர் எதிர்வினையால் பதைபதைப்பு அடைந்தது மட்டுமின்றி, நான் அவளுக்காக கனவு கண்ட சிறப்பான நாளை எங்களால் பெறமுடியாது என்று நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். 

என் மகள் படுக்கையிலேயே, அவள் இருந்த இடத்திலேயே இருக்க விரும்பினாள். அவள் கனவு காணும் தூக்கத்தில் வசதியாக இருந்தாள். அவளுடைய பயங்கரமான எதிர்ப்பால் அவள் மிகவும் பெரிய ஒன்றை இழக்க நேரிட்டது. அவளுடைய கோபத்திற்கு பரிசாக அவளை இந்த சிறப்பான நாளிற்கு அழைத்துச் சென்று வெகுமதி அளிக்க வாய்ப்பே இல்லை. நான் அவளுக்காக திட்டமிட்டு வைத்திருப்பதை அவள் அறிந்திருந்தால், அவள் வித்தியாசமாக நடந்து கொண்டிருப்பாளா? அவள் என் திட்டத்தை நம்பினால், அவள் என்னைநம்பியிருந்தால், அவளிடமிருந்து வேறு பதில் கிடைத்திருக்குமா? 

நான் விரும்பியவற்றில் அதிக கவனம் செலுத்தியதால். இருக்கும் இடத்திலேயே வசதியாக இருப்பதில் மிகவும் கவனம் செலுத்தி, கடவுள் எனக்காக திட்டமிட்டு வைத்திருப்பதை நான் எப்போதாவது தவறவிட்டிருக்கிறேனா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  

சில நேரங்களில், நாம் விரும்புவதையே நாம் அடைய விரும்புகிறோம், அதுவே நமக்குத் தேவை என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் கடவுள் நல்லவர், அவருடைய திட்டம் நல்லது என்று நாம் உண்மையிலேயே நம்பினால், நாம் அவர் சொல்வதை கவனிப்போம். இது நம் சொந்த திட்டங்களை தடங்கல் செய்து நம்முடைய வசதியின் வட்டத்தை விட்டு நம்மை வெளியே கொண்டு சென்றாலும்—நாம் அவரைப் பின்பற்றுவோம். நம்மை தடுத்து நிறுத்தும் உறவுகள், பழக்கவழக்கங்கள் அல்லது வலியை விட்டுவிட வேண்டிய நேரம் இது என்றாலும் கூட பின்பற்றுவோம்.   

நம்பிக்கையே விசுவாசத்தின் அடித்தளமாக இருக்கிறது—கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பது, அவருடைய திட்டத்தை நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் அவரை நம்புவதே. இது நம் வாழ்க்கைக்கான தேவ கனவின் அடித்தளமுமாகும். எனக்குத் தெரிந்த வாழ்க்கை முற்றிலும் வீழ்ச்சியடைந்து வருவதைப் போல நான் உணர்ந்த காலங்களில், கடவுள்மீதான நம்பிக்கை எனக்கு நிற்க ஒரு உறுதியான இடத்தைக் கொடுத்தது. 

"எழுந்திரு, அன்பே. கண்களைத் திற. என்னுடன் வா. உனக்காக அற்புதமான ஒன்றை நான் திட்டமிட்டுள்ளேன். உனக்காக நான் வைத்திருப்பதை நீ அனுபவிக்க, நீ இருக்கும் இடத்திலேயே நீ இருக்க முடியாது. என் அன்பே, முன்னேற வேண்டிய நேரம் இது." 

நம்முடைய கற்பனைகள் புரிந்துகொள்ளக்கூடியதை விட ஆச்சரியமான ஒரு திட்டத்திற்கு கடவுள் உங்களையும் என்னையும் அழைக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம் இழந்த மற்றும் நம்மிடம் திருடப்பட்ட அனைத்தையும் திரும்பப்பெறுவது மற்றும் மீட்பது ஆகியவை அடங்கும் ஒரு திட்டத்திற்கு அழைக்கிறார் என்று நான் நம்புகிறேன். கேள்வி என்னவென்றால், அவரைப் பின்பற்றும் அளவிற்கு நாம் விசுவாசம் கொள்வோமா?  

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Dreams Redeemed

நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஹார்மொனி கிரில்லோ (நான் ஒரு பொக்கிஷம்) அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://harmonygrillo.com க்கு செல்லவும்