கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி

Collective: Finding Life Together

7 ல் 6 நாள்

ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வதற்காக உடன்சென்று பழகுவது (டேட்டிங்) மற்றும் நோக்கங்கள் பற்றியும் அவை இரண்டும் எவ்வாறு ஒன்றாகச் செல்கின்றன என்பதைப் பற்றியும் பேசலாம்.

உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் பேசியிருக்கிறோம், ஆனால் இப்போது டேட்டிங் பற்றி பேசலாம். ஒரு கிறிஸ்தவராக, டேட்டிங் ஒரு சங்கடமான-ஏன் மிகவும் பகடைத்தனமான தலைப்பாக இருக்கலாம். அநேகமாக அதன் காரணம் உதவக்கூடிய வகையில் இல்லாத வேறுபட்ட ஆலோசனைகள் நிறைய வெளியில் இருக்கிறது.

தொடக்கக்காரர்களுக்கு, டேட்டிங் உறவுகளில் ஏற்படும் சில தேவையற்ற அழுத்தங்களை நீங்கள் எடுத்து போடலாம். மக்கள் பெரும்பாலும் “சரியான ஒருவரை” கண்டுபிடிப்பதைப் பற்றி பேசுகிறார்கள், அது நிதர்சனம் இல்லை. எந்த ஒரு நபரும் உங்களை முழுமையடைய செய்வதில்லை. நீங்கள் அப்படியே நீங்களாகவே பிறரால் அறியப்படவும், காணப்படவும், நேசிக்கப்பட்டவும் வேண்டும் என்கிற ஆழ்ந்த ஆசைகளை இயேசுவால் மட்டுமே நிறைவேற்றமுடியும். அதற்கு பதிலாக, நீங்கள் இயேசுவை தீவிரமாக பின்தொடர்கிற மற்றும் உங்களை இன்னும் அதிகமாக கிறிஸ்துவை பின்பற்றுகிறவராக உதவி செய்யக்கூடிய வேறொருவரை தேடுகிறீர்கள்.

நீங்கள் செல்லும் ஒவ்வொரு காபி டேட்டிங்கும்: “இந்த நபர்' திருமணத்திற்கு உகந்தவரா’?” என்ற கேள்விக்கு பதிலளிக்க ஒரு வெறித்தனமான தேடலாக இருக்க வேண்டும் என்பதையும் இது அர்த்தப்படுத்துவதில்லை, நீங்கள் மக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் மற்றும் அவர்களின் கதைகளைக் கேட்கலாம். நட்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள், மேலும் நீங்கள் வெளியே ஒன்றாக செல்லும் ஒவ்வொருவருடனும் உங்கள் எதிர்காலத்தை சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம்.

இருப்பினும், ஆரோக்கியமான உறவைப் ஏற்படுத்துவதற்கு நீங்கள் எல்லைகளை அமைக்கலாம், அமைக்க வேண்டும். நீங்கள் எப்படி ஒருவரை டேட்டிங் செய்ய போகிறீர்கள் என்பதை இப்போது முடிவு செய்யுங்கள். உடல்ரீதியாக, ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிரீதியான கோட்டை எங்கே ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான வரம்புகளை அமைக்கவும்.

இருப்பினும், இந்த எல்லையை பற்றிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை தாண்டிச் செல்வதில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் குறிக்கோள்-இந்த எல்லை மீறாதபடி நான் என்ன செய்ய முடியும்? என்று இல்லாமல் அது-இந்த உறவு மூலம் எவ்வாறு கடவுளுக்கு அதிக மரியாதை செலுத்தலாம்? என்றிருக்க வேண்டும், இது உங்கள் குறிக்கோளாக இருக்கும்போது, ​​பின்னர் நிகழக்கூடிய மனக்காயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான எல்லைகளை அமைப்பது மிகவும் எளிதாகிவிடும்.

உறவுகளை வைத்திருப்பதற்கும் உங்கள் நோக்கத்தைத் தொடர்வதற்கும் இடையே ஒரு பதற்றமான எண்ணம் இருக்கக்கூடும், ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. உங்கள் நோக்கத்தைத் செயல்படுத்த ஒரு உறவில் இருக்கவேண்டும் என்பது வரை காத்திருக்க வேண்டாம், ஏனென்றால் மீண்டும் யாரும் உங்களை முழுமையாக்க போவதில்லை.

அதற்கு பதிலாக, உங்கள் சரியான அடுத்த படி என்ன என்று கடவுளிடம் கேளுங்கள் - அதைச் செய்யுங்கள். உங்கள் நோக்கத்திற்காக வாழ்வதன் மூலம் நோக்கத்துடனான உறவுகளுக்காக காத்திருங்கள்.

கல்லூரிக்குச் செல்வதிலும், உறவைக் கண்டுபிடிப்பதிலும், நிச்சயதார்த்தம் செய்வதிலும், திருமணம் செய்து கொள்வதிலும் நிறைய அழுத்தம் உள்ளது. இது சிலருக்கு சிறக்கிறது, ஆனால் இது ஒரு உலகளாவிய கதை அல்ல. அது பரவாயில்லை! என்ன நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளை முறித்துக் கொண்டு, கடவுள் உங்களை வைத்திருக்கும் பருவத்தை அனுபவிக்கவும்.

நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் அல்லது தனியாக இருந்தாலும், கடவுள் உங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், எனவே அடுத்த சரியான காரியத்தைச் செய்வதிலும், இயேசுவின் மீது மேலும் அதிக அன்பை செலுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள். மீதமுள்ள காரியம் தானாக அதன் இடம் வந்து சேரும்.

இதை கருத்தில் கொள்ளுங்கள்: "இந்த எல்லை மீறாதபடி நான் என்ன செய்ய முடியும்?" என்று இல்லாமல் இந்த உறவு மூலம் எவ்வாறு கடவுளுக்கு அதிக மரியாதை செலுத்தலாம்?“ என்று உங்கள் குறிக்கோள் மாறும்போது உங்கள் அடுத்த உறவு (அல்லது தற்போதைய உறவு) எப்படி வித்தியாசமாக இருக்கும்.

ஜெபம்: தேவனே, என் வாழ்க்கை உம்மை கனப்படுத்த வேண்டும். அதில் எனது டேட்டிங் வாழ்க்கையும் அடங்கும்! நான் யார் என்பதிலும் நான் தனிமையாக இருந்தாலும் அல்லது ஒருவரைப் பற்றி நான் தீவிரமாக இருந்தாலும் சரி எனது நோக்கத்தை நான் முழுமையாக வாழும்படி நீங்கள் என்னை எப்படி உருவாக்கினீர்கள் என்பதிலும் நம்பிக்கையுடன் இருக்க உதவிடும். என்னோடு உறவில் இருப்பவர்களை உங்களுடன் மேலும் மேலும் நெருக்கமாக வழிநடத்தும் ஒருவராக மாற எனக்கு உதவுங்கள். இயேசுவின் பெயறாலே. ஆமென்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Collective: Finding Life Together

நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய "கூட்டாக" என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.