கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி
உஙகள் வாழ்க்கை சரியான திசையில்தான் செல்கிறதா என்று குழம்புகிறீர்களா?
உங்களுக்கு 18 வயது ஆனதும், நீங்கள் திடீரென பெரியவரானது போலவும், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தவேண்டும் என்பது போலவும் உணர்வு வரும். ஆனால் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே உங்களுக்கு அதிகமாக இருக்கும்போது என்ன செய்வது? உங்களுக்கென நீங்களோ அல்லது மற்றவர்களோ வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்யாததைப்போல் உணரும்பொழுது என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நினைத்தீர்களோ அங்கே நீங்கள் இப்பொழுது இல்லாதபோது, மற்றும் அடுத்து நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதைக் குறித்ததான நிச்சயம் இல்லாதபோது என்ன செய்வது?
நிதானமாய் யோசியுங்கள். யாருமே உண்மையில் தங்கள் வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொண்டதில்லை, ஆனால் அதுவே உண்மை. நாம் யாவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் எடுத்து வைப்பதற்கு தேவனையும் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களையும் சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இயேசு நாளைக்காக கவலைப்படாதிருங்கள், அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்றே கூறியிருக்கிறார்.
அது உண்மை, சரிதானே? நம்முடைய பொருளாதாரம், நம்முடைய எதிர்காலம், நம்முடைய வாழ்க்கைப்பணிகள், மற்றும் உறவுகள் குறித்து நாம் யோசிக்க ஆரம்பிக்கும்போது, அது நம்மை நிலைகுலைய வைக்கிறது. ஆனால் நாம் சற்று நிறுத்தி, அந்தந்த நாளை மட்டும் பார்க்கும்போது, நாம் அழுத்தத்தை நம்மை விட்டு அகற்றத் தொடங்கி அதற்குப் பதிலாக தேவனை நோக்கிப் பார்க்க ஆரம்பிப்போம்.
வாழ்க்கையைப் பற்றிய உண்மை இதுதான். இது உண்மையிலேயே மிகக் குறுகியது. அது ஏதோ மனசோர்வளிப்பதாய் தோன்றுகிறது, ஆனால் சங்கீதம் 90:12 சொல்கிறது நம்முடைய நாட்களை எண்ணும் அறிவே ஞானம் என்று. குழப்பமாய் இருக்கிறதா? அவ்வளவாக இல்லை. நாளைய தினம் நமக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, ஒவ்வொரு நாளையும் தேவனிடமிருந்து வந்த ஈவாக நாம் கருதுவோம். ஒவ்வொரு நாளும் புது இரக்கத்தினால் நிறைந்த ஒரு பரிசு. புதிய கிருபை. மேலும் கற்கவும், வளரவும் கிடைத்த அதிகத் தருணங்கள்.
ஆகவே, உங்கள் வாழ்க்கை சரியான திசையில்தான் செல்கிறதா என நீங்கள் குழம்பிக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் மட்டும் அப்படி சிந்திக்கவில்லை. மனிதர்களாகிய நமக்கு, தேவன் உண்மையிலேயே அதிகம் தேவைப்படும் நேரங்களில் மட்டுமே, அதிக பதில்களைத் தேடும் மனப்பான்மை இருக்கிறது.
ஆனால் இது ஒரு சரியான கேள்வி. இயேசுவின் நாட்களில் கூட, மக்கள் பெரிய கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவன் ஒருமுறை அவரிடம் மிகப் பிரதானமான கட்டளை என்ன என்று கேட்டான்.
இயேசு சொன்ன பதில் மிகவும் எளிதானது ஆனால் மிகவும் கடினமானது. தேவனில் அன்புகூறுவதும், மக்களில் அன்புகூறுவதுமே நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று அவர் சொன்னார். மற்றொரு வேளையில், மற்றவர்களிடம் அன்புகூறும் விதத்தை வைத்தே உலகம் தம்முடைய சீஷர்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்று மெய்யாகவே இயேசு சொன்னார்.
அப்படியானால், நீங்கள் தேவனையும் உங்களை சுற்றியிருக்கிறவர்களையும் நேசித்தால், அநேகமாக நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்ற விதமாக சொல்வது சரியாயிருக்கும்.
அடுத்து வரும் சில நாட்களில், நம் எல்லோருக்கும் அவ்வப்போது எழக்கூடிய 'பொறுப்புள்ள பெரியவராகுதல்' குறித்ததான சில கேள்விகளை நாம் ஆராய்வோம், மேலும் நம்முடைய சாதாரண வாழ்வில் அசாதாரணமான வழிகளின் மூலமாக எப்படி இயேசு நம்மை சந்திக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
நினைவில் கொள்ள:தேவனையும், என்னை சுற்றியுள்ள மக்களையும் நான் நேசிப்பதற்கான சில வழிமுறைகள் எவை?
ஜெபம்: தேவனே, நீர் சர்வ வல்லமையுள்ளவராய் இருப்பதற்காகவும், எதிர்காலத்தைக் குறித்த என்னுடைய கவலைகளையெல்லாம் உம்மீது வைக்க முடிவதற்காகவும் உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய கிருபை, இரக்கம் மற்றும் அன்பிற்காக நன்றி. என்னுடைய சொந்த முயற்சியை சார்ந்திராமல் உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவுசெய்யும். என்னுடைய நாட்களை எண்ணும் அறிவை எனக்கு தந்து பூமியில் என்னுடைய குறுகிய வாழ்நாளை முழுமையாக பயன்படுத்த உதவிசெய்யும். ஒவ்வொரு நாளும் உம்மையும் மற்றவர்களையும் அதிகமாய் நேசிக்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
இளம் வயதினராய் இருப்பதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள ஆர்வமா? இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 5-பகுதி வேதபாட காணொளியைப் பாருங்கள், Collective.
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய "கூட்டாக" என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம்.
More