கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவதுமாதிரி
எல்லோரும் என்னைப்போலவே தனிமையாயிருக்கிறார்களா?
இந்நாட்களில் தகவல்கள் நமக்கு 24/7 என எந்நேரமும் கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நீ்ங்கள் கூகுள் செய்யமுடியும். காற்றிறங்கிய வாகனச்சக்கரத்தை எப்படி சரிசெய்வது, வரவுசெலவை எப்படி திட்டமிடுவது, அல்லது ரேமன் நூடுல்ஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றிக்கூட பிரயோஜனமான வலையொளி நிகழ்படங்களை (YouTube) நீங்கள் கண்டறிய முடியும். இது போன்ற அறிவு பயனுள்ளதாக இருக்கும் அதேநேரத்தில், தனிமையில் இருந்தவாறே மிக ஏராளமான விஷயங்களை உட்கொள்வது எளிதாக உள்ளது— அனால் இதற்காக நாம் உருவாக்கப்படவில்லை.
சமுதாயத்தில் வாழும்படியே தேவன் நம்மை உருவாக்கியிருக்கிறார். சபையில் நாம் மிக அதிகமாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை அதுவேயாகும், நமக்கு நல்ல நண்பர்கள் தேவை என்பதே அதன் அடிப்படை அர்த்தமாகும். ஏன்? ஏனென்றால் தனிமையில் இருந்தவாறே தகவல்களை அறிந்துகொள்வது மிக அரிதாகவே மனமாறுதலுக்குள்ளாக வழிநடத்துகிறது. நமக்கு ஞானம் தேவைப்படுகிறது, ஞானம் சமுதாயத்தில்தான் மிகநன்றாக விருத்தியடைகிறது.
துவாக்கத்திற்கு இதை நாம் எடுத்துச் செல்வோம். தேவன் சொன்ன முதல் விஷயமே மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்பதுதான். மக்களின் தேவைக்காகவே நாம் உருவாக்கப் பட்டோம். இயேசு பூமியில் தம்முடைய வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் இதை நமக்கு மாதிரியாக்கினார்.
இயேசு பூரணரல்லாத 12 பேரைத் தம்மோடு வாழும்படி தெரிந்தெடுத்தார். அவர்கள் சேர்ந்தே சாப்பிட்டனர், சேர்ந்தே ஜெபித்தனர், சேர்ந்தே ஊழியம் செய்தனர். ஏன் அவர் இப்படி செய்தார்? இயேசுவுக்கு மக்கள் தேவையில்லை. ஏனெனில் அவர் இயேசுவானவர். ஒருவேளை தம்முடைய பரிபூரணமான நோக்கத்திற்காக குறைவுள்ள மனிதரில் எப்படி அன்புகூறுவது என்பதை நமக்குக் காட்டுவதற்காக அப்படி செய்திருக்கலாம்.
சிறந்த நண்பர்களைப் பெற்றிருப்பது எப்படியிருக்கும் என்பதை இயேசு நமக்குக் காட்டியுள்ளார். அது தனக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதும் அவருக்குத் தெரியும். யூதாஸ் தன்னை மறுதலிப்பான் என்பது அவருக்குத் தெரியும். உண்மையை சொல்வதானால், பேதுரு சிலநேரங்களில் கொஞ்சம் கூடுதல்தான். பேதுரு தன்னை மறுதலிப்பான், தன்னைக் கைவிடுவான் என்பதும் அவருக்குத் தெரியும், ஆனால் எப்படியிருப்பினும் இயேசு எல்லோரிலும் அன்புகூர்ந்தார்.
அத்தகையதான அன்பிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அநேக நேரங்களில் நாம் நமக்கு முன்பிருக்கும் நண்பராகும் சாத்தியமுள்ளவர்களை, குறைவுகள் எதுவுமில்லாத பூரண நண்பரைப் பெறும்படிக்கு மிகவும் போராடிக் கொண்டிருப்பதால் இழக்கிறோம். நம்முடையவர்களை நாம் காணும்பொழுது, நாம் அவர்களில் அன்புகூற வேண்டும்—குறைவுகள் மற்றும் எல்லாவற்றிலும்—இயேசு நம்மில் அன்புகூறுவது போலவே.
சமுதாயத்தின் இன்னொரு முக்கிய நன்மை என்னவென்றால் இயேசு அதை நமக்காக மாதிரியாக்கினது மட்டுமல்ல அதன் மத்தியில் தாம் இருப்பதாகவும் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் தம்முடைய நாமத்தில் கூடுகிறார்களோ அங்கே அவர்கள் மத்தியில் தாம் இருப்பதாக இயேசு சொல்கிறார். நாம் மற்றவர்களோடு நேரத்தை செலவழிக்க வேண்டியதின் மிக வலுவான காரணம் அதுவேயாகும்.
ஆகவே உங்களைச் சுற்றி யாருமே இல்லாமல் உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை நீங்கள் கண்டுபிடிக்க முயலுவீர்களானால், ஒருவேளை அது நீங்கள் எதிர்பார்க்கும் அளவில் செயலாக்கம் பெறாது. நமது திட்டத்தை வாய்க்கச்செய்ய மக்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். நாம் யாரென்று கண்டறிய மக்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். நம்மை உற்சாகப்படுத்த, நம்மை பலப்படுத்த, நம்மோடு ஜெபிக்க, நமக்கு சவாலைக் கொடுக்க, நாம் இடறிவிழுந்து, தோல்வியுறும் சமயங்களில் நமக்கு உதவிசெய்ய மக்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
இது குழப்பத்தை உண்டாக்கலாம். மேலும் இதை எப்பொழுதும் புரிந்துகொள்ள இயலாது. ஆனால் நீங்கள் இயேசுவைப் போல் இருப்பதை மற்றும் அவரைப் போல் அன்புகூறுவதை தெரிந்துகொள்ளும் போது—நாம் முதல் நாளில் பேசியதைப் போல் நீங்கள் ஒரு மேன்மையான வழியில் சென்று கொண்டிருப்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
கருத்தில் கொள்ளுங்கள்:குறைவில்லாத பூரணமான நண்பர்களை நீங்கள் தேடுவதால் எந்த சாத்தியமான நண்பர்களை நீங்கள் இழக்கிறீர்கள்?
ஜெபம் பண்ணுங்கள்: இயேசுவே, சமுதாயத்தோடு இருந்தால் எப்படி இருக்கும் என்று எங்களுக்குக் காட்டியதற்காகவும், நாங்கள் ஒன்றாகக் கூடும்பொழுது நீர் எங்களோடு இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணியதற்காகவும் உமக்கு நன்றி. உம்மையும், என்னுடைய வாழ்க்கையில் நீர் எனக்குத் தந்த மற்றவர்களையும் நான் அதிகமாக சார்ந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். உம்மைப்போல் அன்புகூற உதவிசெய்யும். உம்முடைய நாமத்தில், ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய "கூட்டாக" என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம்.
More