20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம் மாதிரி

20/20: Seen. Chosen. Sent. By Christine Caine

7 ல் 7 நாள்

நாம் காணப்பட்டு, தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளோம். நாம் போவோமாக!

“நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”மாற்கு 16:15

முதல் தலைமுறை கிரேக்க குடியேறியவர்களின் மகளாக வளர்வது என்பது ஒரு கிரேக்க குமிழியில் வளர்வதை பொருள்படுகிறது. என் பெற்றோர்கள் - மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் - யாரும் இன்றி ஒருவரையொருவர் நம்பியே ஆஸ்திரேலியாவிற்கு வந்ததால், அவர்கள் ஒன்றாகக் குவிந்து, எண்ணிக்கையில் பாதுகாப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் உறுதியாக வேரூன்றினர். அதனால், என் குழந்தைப் பருவம், என் பெற்றோர், அத்தை, மாமா, உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் இயன்றவரை இறுக்கமான சமூகத்தில் தங்களுக்குள்ளேயே இருந்தார்கள், வெளியே சென்றால் என்ன நடக்கலாம் என்ற அச்சம் இருந்ததைப்போல. இது அவர்கள் ஆங்கிலம் பேசாததால் அல்ல. என் பெற்றோர் உண்மையில்: அரபு, கிரேக்கம், பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் பேசினர். அவர்கள் திறன்படைத்த மனிதர்கள்! நவீன சமுதாயத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் தாங்களே உருவாக்கிய ஒரு சிறிய உலகில் வாழத் தேர்ந்தெடுத்தனர்.

சில சமயங்களில், கிறிஸ்தவர்களாகிய நாமும் இதை போலவே நடந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன். நமது கிறிஸ்தவ குமிழ்களில், நம்முடைய கிறிஸ்தவ சமூகங்களுக்குள், நமது கிறிஸ்தவ நண்பர்களின் கூட்டுக்குள் வாழ்கிறோம், மேலும் நாம் அங்கேயே தங்கிவிடுகிறோம். ஒருவேளை, நாமே உருவாக்கிக் கொள்ளும் இந்த கிறிஸ்தவ துணைக் கலாச்சாரத்தில் கூட நாம் ஒளிந்து கொள்கிறோம். பூமியில் சொர்க்கம் என்று நாம் நினைப்பதை நாங்கள் வடிவமைக்கிறோம், மேலும் இந்த உலகை விட்டு வெளியேறும் வரை அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நம்புகிறோம். ஆயினும் இத்துணை நேரமும், இயேசு நம்மைக் கண்டார், நம்மைத் தேர்ந்தெடுத்தார் சிஷ்யர்களை உண்டாக்க உலகெங்கும் நம்மை அனுப்பினார். நாம் குமிழியிலிருந்து வெளியேறாவிட்டால், அவருடைய பரகட்டளையை நம் முதல் முன்னுரிமையாக ஆக்க முடியாது. 

கிறிஸ்தவ துணை கலாச்சாரத்தை உருவாக்க இயேசு நம்மை காப்பாற்றவில்லை. நம்மைப் போல தோற்றமளிக்காத, நம்மைப் போலவே செயல்படும், நம்மைப் போல சிந்திக்கும் அல்லது நம்மைப் போல் நம்பும் நபர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க. உலகத்திலிருந்து மறைக்கவோ, உலகத்தைத் தவிர்க்கவோ, உலகைப் புறக்கணிக்கவோ, உலகைப் பயப்படவோ, உலகத்தை வெறுக்கவோ, உலகைக் கண்டிக்கவோ, உலகத்தை நியாயந்தீர்க்கவோ அவர் நம்மைக் காப்பாற்றவில்லை. அவர் உண்மையில் நம்மை உலகிற்கு அனுப்பினார்...சீடர்களை உருவாக்குவதற்காக...அவர் உருவாக்கிய மற்றும் மிகவும் மென்மையாகவும், மிகவும் தீவிரமாக நேசிக்கும் உலகத்தை நாம் நேசிப்பதற்காக.

“உலகமெங்கும் சென்று, எல்லா படைப்புகளுக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.”

இந்த வசனத்தில் மிக முக்கியமான வார்த்தை? செல்லுங்கள.

உலகமெங்கும் செல்லுங்கள்.

சென்று தொலைந்தவர்களை நேசியும்.

சென்று தொலைந்தவர்களை புரிந்துகொள்ளும்.

சென்று தொலைந்தவர்களின்பால் இரக்கம் கொள்ளும்.

சென்று தொலைந்தவர்களின்பால் இயேசு பற்றி சொல்லுங்கள்.

சென்று, சீஷராக்குங்கள்.

பிரார்த்தனை

பரலோக பிதாவே, நீர் என்னைப் பார்த்து, தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் சொல்லும் இடத்திற்குச் செல்லவும், நீங்கள் என்னைச் செய்ய அழைத்ததைச் செய்யவும் எனக்கு வலிமையும் தைரியமும் இருக்க உதவுங்கள். ஆமென்.

இதை பற்றி மேலும் விவரங்களுக்கு செல்லவும்www.christinecaine.com/2020study  

இருந்து தழுவப்பட்டது 20/20: கண்டது.தேர்வுசெய்யபட்டது.செலுத்தபட்டது கிறிஸ்டீன் கேஐன் அவரது. பதிப்புரிமை 2019 கிறிஸ்டீன் கேஐன். லைஃப வே வுமென் ஒப்புதல் உடன் மறுஅச்சிடபட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

20/20: Seen. Chosen. Sent. By Christine Caine

தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Caine - A21, Propel, CCMக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.christinecaine.com/2020study