20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம் மாதிரி
நீங்கள் இந்த உலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்.
நீங்கள் இந்த உலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் சுவையை இழக்க நேரிட்டால், அதை மீண்டும் சுவை மிக்கதாக எப்படி மாற்றுவது? உண்மையில் அதன் பிறகு அது எதற்கும் பயன்படாது. மக்கள் அதைத் தூக்கி குப்பையில் எறிவார்கள். நீங்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலையின் மீது அமைந்துள்ள ஒரு நகரத்தை மறைக்க முடியாது.<em> விளக்கை ஏற்றி யாரும் ஒரு கூடையின் கீழ் அதை மறைத்து வைப்பதில்லை, மாறாக உயரமான இடத்தின் மேல் விளக்கை வைப்பார்கள். அதனால் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. -மத்தேயு 5:13-15 CSB
நான் ஒரு இளம் கல்லூரி மாணவனாக இருந்தபோது மதிப்பெண்கள், சாதனைகள், செல்வம் என அனைத்தையும் கொண்ட ஒரு அழகிய நண்பர் எனக்குக் கிடைத்தார். அவர் அடைந்திருந்த தகுதிகள் எதுவும் என்னிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் நெருங்கிப் பழகினோம். ஒரு முறை அவள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூன்று நாட்கள் மறைந்து போனாள். என் அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை. ஆகையால் நான் மிகவும் பயந்தேன். மூன்றாவது நாளில் அவள் ஆச்சரியமாகத் திரும்பி வந்த போது, அவள் ஒரு விருந்துக்குச் சென்று இருந்ததை அறிந்து கொண்டேன். அங்கு அவர்கள் அனைவரும் மகிழ்ந்திருக்கப் போதை மருந்துகளைச் சாப்பிட்டார்களாம். அவள் சொன்னாள், ‘அந்த விருந்து மிகவும் இன்பமாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நான் என்னையே மறக்கும் அளவுக்கு அமைதியை உணர்ந்தேன். அவள் ஒரு சிறிய பூவை வெளியே எடுத்தாள். ''கிறிஸ், நான் அந்த போதை உணர்வை மிகவும் அனுபவித்து நேசித்தேன், நான் அனுபவித்த அந்த இன்ப அனுபவத்தை நீ இழக்க விரும்பவில்லை, அதனால் உனக்காக அரை மாத்திரை சேமித்தேன். எடுத்துக் கொள்" எனச் சொன்னாள்.நான் தயவாக அவளுடைய வாய்ப்பை நிராகரித்தேன், ஆனால் அவளது செயலால் நான் வெட்கமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த பெண் என்னை மிகவும் நேசித்ததால்,அவள் தான் அனுபவித்த போதைப்பொருளின் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் நானும் அனுபவித்து மகிழ வேண்டும் என விரும்பினாள். அவளது அந்த அன்பை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என் வாழ்க்கையை முழுவதுமாக நான் இயேசுவுக்குக் கொடுத்திருந்தேன். எனது, அன்பிற்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் ஆதாரமான கடவுளின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உள்ளே வாழ்கிறார். ஆனால், இந்த அன்பின் கடவுளைப் பற்றிச் சொல்வதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன், ஏனென்றால் எனது நண்பருக்கு ஆண்டவர் தேவையில்லை என்று நான் தவறுதலாக நினைத்தேன். ஆனால் அவளுக்கு ஆண்டவர் மிகவும் தேவையான ஒன்று.
அவளுக்கு ஆண்டவரது அன்பைக் குறித்து அறிவிக்காததற்காக நான் மிகவும் அழுதேன். போதைப்பொருள், பணம், வெற்றி அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக ஆண்டவரது அன்பை விட்டு விலகச் செய்யும் அல்லது அவர் யார் என மற்றவருக்கு அறிவிக்கத் தடையாக எழும்பும் எந்த ஒரு நிர்ப்பந்தத்தையும் நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று அந்த நாளில் தானே கடவுளுக்கு நான் உறுதியளித்தேன்.
நாம் வாழ்க்கையில் குழப்பமடைந்தவர்களை எளிதில் அடையாளம் கண்டு, இவர்களுக்கு ஆண்டவர் தேவை என அறிந்து கொள்கிறோம், ஆனால் எல்லாவற்றையும் அடைந்து நிறைவாக வாழ்வதாகத் தோன்றுபவர்களுக்கும் கூட ஆண்டவரது இரட்சிப்பு தேவை என்பதை அடையாளம் காணத் தவறிவிடுகிறோம்?
காணாமல் போனவர்கள் எல்லா மக்கள் கூட்டத்திலும் இயல்பாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அந்த நாளிலிருந்து, ஒவ்வொரு மனித இதயத்திலும் ஒரு அன்பிற்காக ஏங்கும் ஒரு வெற்றிடம் இருப்பதை நான் ஒருபோதும் மறக்கவில்லை, அந்த வெற்றிடத்தை இயேசுவால் மட்டுமே நிரப்ப முடியும், அதற்கு அவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை
கடவுளே, நான் சந்திக்கும் அனைவரிடமும், நான் செல்லும் எல்லா இடங்களிலும் உப்பாகவும் வெளிச்சமாகவும் வாழ எனக்கு உதவி செய்யும் உடைந்த இருதயத்தையும், இழந்து தவிப்பவர்களையும்... அவர்கள் வெளிப்படையாக எப்படிக் காணப்பட்டாலும், அவர்களது உள்ளத்தைப் பார்க்கவும், உணரவும் எனக்கு அருள் புரியும். இன்று யாரையாவது நெருங்கி அவர்களை ஆண்டவருக்குள் வழி நடத்தத் தேவையான இரக்கத்தையும் தைரியத்தையும் எனக்குத் தாருங்கள். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
20/20 இருந்து; ‘’பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டேன்’’கிறிஸ்டின் கெய்ன். நூலிலிருந்து தழுவி எழுதப்பட்டது. பதிப்புரிமை © 2019 கிறிஸ்டின் கெய்ன். லைஃப்வே வுமன் அனுமதியுடன் மறுபதிப்பு செய்யப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.
More