இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி
மரணத்தின் மீது ஜெயம்
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்முடைய பாவமன்னிப்பை சம்பாதித்தபோது, தேவனுடனான நித்திய பிரிவிலிருந்து நம்மைக் காப்பாற்றினார். அவர் மரணத்தின் நம்பிக்கையின்மையை தேவனோடுள்ள ஒரு நித்திய எதிர்காலத்தைக் குறித்ததான உயிருள்ள நம்பிக்கையாக மாற்றினார். மேலும் அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, மரணத்தின் மேல் தன்னுடைய இறுதி வெற்றியை இயேசு வெளிப்படுத்தி, மரணத்திற்குத் தம்மேல் அதிகாரம் ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். வெளி 1:18 இல், அவர், “மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” என்று உறுதிபடக் கூறினார்.
நமக்கு நெருக்கமானவர்களை இழப்பதால் ஏற்படும் வேதனையை அனுபவித்தல் மற்றும் இறுதியில் நம்முடைய இவ்வுலக மரணத்தோடு போராடவேண்டியிருத்தல் போன்றவைகளால், இவ்வுலக வாழ்வில் மரணம் நமக்கு ஒரு கடினமான உண்மையாக இருக்கும்போது, இயேசு மரணத்தின் திறவுகோல்களை உடையவராக, நித்திய வாழ்வுக்கு வேறொரு வழியை அவர் நமக்கு உண்டாக்கியிருக்கிறார் என்ற சத்தியத்தில் நம்மால் இப்பொழுது உறுதியாயிருக்க முடிகிறது. பூமியின் மரணம் என்பது கதையின் முடிவு அல்ல. இன்னும் எவ்வளவோ வரவிருக்கின்றது! இயேசு யோவான் 11: 25 இல், “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.
இயேசு நிச்சயமான மரணத்திலிருந்து நம்மை இரட்சித்திருப்பதால், நம்முடைய வாழ்க்கையை நாம் பயத்தோடு வாழவேண்டியதில்லை. இவ்வுலகத்தில் என்னநேர்ந்தாலும், தேவனுடைய சந்நிதியில் அவருடைய குடும்ப ஐக்கியத்தில் என்றென்றும் வாழ்வோம் என்பதை அறிந்ததால், தைரியமான, அபரிமிதமான வாழ்வு வாழ நாம் விடுதலையாயிருக்கிறோம். அன்புக்குரியவர்களுக்காக நாம் துக்கிக்கும் நேரங்களில்கூட, அவர்கள் இயேசுவை விசுவாசித்தால், நாம் அவர்களோடு மறுபடியும் இணைந்து தேவமகிமையை ஒருமிக்க அனுபவிப்போம் என்பதை அறிந்தவர்களாய், நாம் நம்பிக்கையுடன் துக்கிக்கிறோம்.
இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமையில், இயேசுவின் மரணத்தின் மீதான வெற்றியின் உள்அர்த்தங்கள் உங்கள் இருதயத்திற்குள்ளாக அழுந்தி உங்கள் கண்ணோட்டத்தை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையிலிருந்து பரலோகத்தின் நித்திய பாதுகாப்பிற்கு நேராக திசைதிருப்பட்டும். மரணத்திற்கு உண்மையிலேயே கூர் இல்லை! அவருடைய வெற்றியைக் கொண்டாடுங்கள், நன்றியுணர்வினால் நிறைந்திருங்கள், உங்களுக்கிருக்கின்ற பரலோகத்தைப் பற்றிய நம்பிக்கை பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையாயிருக்கிறது என்ற உங்கள் திடநம்பிக்கையில் வளருங்கள். நம்மில் ஒருவர் கூட அவரைப் பிரிந்து நித்தியத்தைக் கழிக்கக்கூடாது என்பதே மனுகுலமனைத்தின் பாவங்களுக்காக மரித்த அவரின் இதயவாஞ்சையாகும். அவர் உங்களுக்கு செய்த நன்மைக்கான உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்த, அவர் அவர்கள் மேல் வைத்த அன்பை உலகத்திற்கு எடுத்துக்கூறுவதைக் காட்டிலும் மேலான வழி எதுவுமில்லை. இப்படித்தான் நாம் இந்த வாழ்க்கையை மிகச் சிறந்ததாக்க வேண்டும். ஆகையால் புறப்பட்டுப்போய் வாழ்க்கையை நிறைவுடன் வாழ்வோம் - ஏனென்றால் அவர் உயிரோடிருக்கிறார்!
இன்றைய படத்தை பதிவிறக்கம் செய்ய செல்லவும்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
More