இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி
குற்ற உணர்வின் மீது ஜெயம்
நாம் நம்முடைய முற்கால குற்ற உணர்வுகளின் இருளில் வாழ வேண்டும் என்பது சாத்தானுடைய ஒரு நோக்கமாயிருக்கிறது. இயேசுவானவர் நம் பாவங்களுக்காக மரித்தார் என்பதை நாம் விசுவாசித்தும், குற்ற உணர்வின் பழியை இன்றும் சுமந்து கொண்டிருந்தால், மெய்யாகவே ஆசீர்வாதங்களையும் அவருடைய பாவமன்னிப்பின் விடுதலையையும் பெறமுடியாது என்பதை சாத்தான் அறிவான். நாம் நமது மிகக் கொடிய பாவத்தின் நிழலில் வாழ்ந்துகொண்டிருப்போம். யோவான் 9:5 ல், உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று தன்னைக் குறித்து இயேசு தானே விவரிக்கிறார். ஆனால் மத்தேயு 5:14 இலும் 16 இலும், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது...இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது" என்று இயேசு கூறியிருக்கிறார். குற்ற உணர்வின் இருளில் இருந்து வெளிவர ஒரு வழியை இயேசு உருவாக்காமல் அவருடைய மகிமைக்கான ஒரு வெளிச்சமாக திகழ அவர் நம்மை என்றுமே எதிர்பார்க்கமாட்டார்.
சங்கீதம் 103:10-12 தேவனுடைய அன்பு நம் மீது நாம் நினைக்கக்கூடிய எல்லாவற்றுக்கும் மேலானது என்றும், அவர் நம்மால் முழுமையாக உணர்ந்துகொள்ளவே முடியாத அசாதாரணமான தூரத்திற்கு நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் என்றும் கூறுகிறது. இயேசுவானவர் சிலுவையில் மரித்தபோதோ, அவர் பாவத்தின் சுமையை விசுவாசிக்கிறவர்கள் மீதிருந்து என்றுமிராதபடி எடுத்துப்போட்டார். அவருடைய மன்னிப்பை இப்போது நாம் இலவசமாக பெற்று, குற்ற உணர்வின்றி வாழ்ந்து, தேவனுடைய சமூகத்தில் வரவேற்பையும் அரவணைப்பையும் உணரலாம்.
நாம் இயேசுவானவரின் உயிர்த்தெழுதலைக் கொண்டாட நெருங்கும் நிலையில், அவருடைய மரணம் நமக்கு பாவத்திலிருந்து மன்னிப்பை மட்டுமின்றி, குற்ற உணர்வின் சுமையை தூக்கி எரியும் அதிகாரத்தையும் கிரயம் செலுத்தி பெற்றிருக்கிறது என்பதை நாம் நினைவுகூறலாம். உன் பாவத்தின், ஏன் உன் கொடிய பாவத்தின் கடன் கூட, இயேசுவின் இரத்தத்தால் தீர்க்கப்பட்டது. அவருடைய விடுதலையில் இன்று நடந்திடுங்கள்!
இன்றைய படத்தை இல் தரவிறக்கலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
More