திட்ட விவரம்

இங்கே துவங்குங்கள் | இயேசுவோடு முதல் படிகள்மாதிரி

Start Here | First Steps With Jesus

15 ல் 3 நாள்

மாற்கு 4-5 | நல்ல விதைகள் & நல்ல நிலம்

இயேசு சிறப்பாக கதை சொல்பவர். மாற்கு 4ம் மற்றும் 5ம் அதிகாரத்தில், இயேசு உவமானங்களை - கூறுகிறார், வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரும் உவமானங்கள். இயேசு சொன்ன முதல் உவமானம் இரண்டு அத்தியாவசியக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது: வேதாகமம் என்றால் என்ன, நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும்?


மாற்கு 4ம் அதிகாரம், 3ம் வசனத்தில் இருந்து தொடங்குவோம்:


“‘அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.’
பின்பு இயேசு சொன்னார், ‘கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.’”

இது ஒரு விவசாயக் கதை. ஒரு விவசாயி விதை விதைக்கிறான்; சில விதைகள் வளரும் மற்றும் சிலது வளராது, அது நிலத்தை பொறுத்தது. மனக்கிளர்ச்சியூட்டும் கதை அல்ல தான், ஆனால் இயேசு இந்த உவமானத்திற்கான திறவுகோலை 14ம் வசனத்தில் கொடுக்கிறார்:


“விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.” 

லூக்கா 8ல் இயேசு சொல்கிறார்: 


“ விதை தேவனுடைய வசனம்.”� (லூக்கா 8:11).

இயேசு தேவனுடைய வார்த்தையை விதைக்கு ஒப்பிடுகிறார். விதையைப் பற்றி சிந்தியுங்கள். அவைகளில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. கனி அப்படியல்ல அது நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. ஆனால் உள்ளே உள்ள அந்த விதை, நாம் ஊகிக்க முடியாத அந்த சிறு புள்ளி,மண்ணில் இருந்து - அந்தப் புதர், செடி அல்லது மரம் - வேரிலிருந்து, கிளைகள், காய் கனிகள் வரை வளரத் தேவையான வரைபடங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை உள்ளடக்கி உள்ளது. ஒரு விதை என்பது மிகவும் அற்புதமானது: நீங்கள் அதனை புதைத்தால் அது புதியதாய் துளிர் விடும். 


இயேசு சொல்கிறார்: தேவ வார்த்தை என்பது ஒரு விதை. பார்த்தால் பெரிதாகத் தெரியாது, ஆனால் வாழ்வின் செயல் திட்டங்கள் அதனுள் இருக்கிறது. தேவையெல்லாம் நல்ல நிலம் மாத்திரமே.


வேதாகமம் ஒரு புத்தகம் என்பதை விட மேலானது. இது 66 புத்தகங்கள்.ஆனால் அதை விட மேன்மை என்னவெனில், வேதாகமம் என்பது தேவ வார்த்தை. 2 தீமோத்தேயு சொல்கிறது, 


“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோ 3:16). 

இதன் அர்த்தம் என்னவெனில் வேதாகமம் கர்த்தருடைய வார்த்தை என்பதே. 


சரி, வார்த்தை விதையென்றால் எது நல்ல நிலம்? இக்கேள்வி நம்மை மீண்டும் அந்த உவமானத்திற்கு கொண்டு வருகிறது.


இயேசு, வார்த்தையைக் கேட்பவனே நிலம் என்று விளக்குகிறார். நீங்களும் நானுமே அந்த நிலம். நம் இருதயம், நான்கு விதமான நிலங்கள் இருக்கிறது - தேவ வார்த்தையைக் கேட்பதில் நான்கு வித இதயங்கள் இருக்கிறது.


சில இருதயங்கள் வழியருகே உள்ள நிலம் போன்றது. வார்த்தை அங்கே விழும் ஆனால் உள்ளிறங்கும் முன் பிசாசு பறவை போல அதை மறக்கச் செய்திடுவான். சில இதயங்கள் பாறை போன்றவை. விதை சிறிது முளைக்கும், ஆனால் மண் இல்லாததால் ஆழமாக வேர் விட இயலாது. சில பிரச்சனைகள் வரும்போது, அவர்கள் விசுவாசத்தை விட்டு விடுவார்கள். சில இதயங்கள் களைகள், முட்கள் நிறைந்தவை, அவர்கள் வாழ்வின் சிற்றின்பங்கள் மற்றும் பாரங்களில் சிக்கிக் கொள்பவர்கள், அங்கே விசுவாசம் வளர்வதற்கான இடம் இல்லை. ஆனால் இன்னொரு விதமான இதயம் இருக்கிறது… சரி, நீங்கள் வெறும் புழுதி நிறைந்த நிலம் அழகான தோட்டமாக உருவானதை பார்த்திருக்கிறீர்களா? அது வியத்தகு காரியம்.


நமது இதயம் விதை வளரும் நிலம் தான் என்று எப்படி உறுதி செய்வது? கண்டுபிடிக்க, மாற்கு 4 வாசியுங்கள். என்னுடைய வார்த்தையில் அல்ல, தேவ வார்த்தையில் தான் வல்லமை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை தொடங்கச் செய்வது மாத்திரமே எனது வேலை, ஆனால் எனது முக்கிய குறிக்கோள் நீங்களாக வேதத்தை திறந்து வாசிப்பதே. 


உங்களுக்கு ஆரோக்கியமான வேத வாசிப்பு பழக்கம் வரவேண்டும் என்பதே எனது நம்பிக்கை. இயேசுவை பின் தொடர்வதில் இது ஒரு முக்கியப் பகுதி. தினமும் வேதம் வாசியுங்கள். நல்ல விதைகளை நல்ல நிலத்தில் விதைத்து நல்ல கனிகளை கொடுங்கள்.


மாற்கு 4  மற்றும் 5ம் அதிகாரங்களை வாசியுங்கள், எப்படிப்பட்ட நிலமாக இருக்க வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை நிர்ணயம் செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, முழு அதிகாரத்தையும் வாசியுங்கள், மேலும் இயேசு சொல்லும் அநேக உவமானங்களை தொடர்ந்து வாசியுங்கள். அவர் பெரிய புயலை அடக்குவதையும், பிசாசுகளை துரத்துவதையும், பிணியாளிகளை சுகமாக்குவதையும், மரித்தோரை உயிரோடு எழுப்புவதையும் பாருங்கள். இவை எல்லாவற்றையும், அவர் செய்தது தனது வார்த்தையால். இயேசுவின் வார்த்தைகள் இதையெல்லாம் செய்யக்கூடுமானால், அவைகள் உங்கள் வாழ்வில் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று சிந்தியுங்கள். அதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது - நல்ல நிலம் மாத்திரமே. 


பிரதிபலிக்கவும் & விவாதிக்கவும்:

  • ஏன் இயேசு தேவ வார்த்தையை விதையாக சித்தரிக்க வேண்டும்? எவ்வகையில் அவை ஒன்று போல இருக்கின்றது?
  • நிலம் நமது இதயத்திற்கு ஒப்புமை என்றால், விதையானது நல்ல நிலத்தில் விதைக்கப்படுவதற்கும் வளர்ந்து கனி கொடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
  • உங்கள் வாழ்விலும் உங்கள் உற்றார் வாழ்விலும் தேவ வார்த்தை ஏற்படுத்திய தாக்கம் எப்படிப்பட்டது? சாட்சி பகருங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Start Here | First Steps With Jesus

ஒருவேளை நீங்கள் இயேசுவையோ அல்லது வேதத்தையோ புதிதாக அறிந்திருந்தால், அல்லது புதிதாக அறிந்திருக்கும் நண்பருக்கு உதவ நேர்ந்தால் - இங்கே துவங்கவும். அடுத்த 15 நாட்களுக்கு, இந்த 5 நிமிட ஒலி வழிகாட்டிகள் உங்களை: மாற்கு மற்றும்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Through The Word அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, http://throughtheword.org என்ற இணையத்தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்