இங்கே துவங்குங்கள் | இயேசுவோடு முதல் படிகள்மாதிரி
மாற்கு 2-3 | மன்னிக்கப்பட்டோர் & தெரிந்தெடுக்கப்பட்டோர்
தொடக்கத்திற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சம்பவத்தோடு,இன்று நாம் மாற்கு 2ல் இருக்கிறோம். வேதத்தில், இயேசு சில பெரிய காரியங்களை கூறுகின்றார் - அவரைக் கொல்வதற்கு போதுமான அளவு பெரிய காரியங்கள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்வதாகக் கூறலாம். கேள்வி என்னவென்றால் - இயேசு அதை நிரூபித்தாரா?மாற்கு 2ல், இயேசு கப்பர்நகூமில் போதிப்பதைக் காண்கிறோம், வார்த்தை பரவுகிறது. வசனம் 2:
“உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.”
அங்கே பெரிய நெருக்கடியான கூட்டம், இயேசு வார்த்தையை போதிக்கிறார் - வேதத்தை போதிக்கிறார். இயேசு எப்போதும் தேவ வார்த்தையின் மீதே கவனமாக இருப்பார். அவர் அற்புதங்களையும் செய்தார், ஆனால் இயேசு அதை அற்புதங்கள் என்று சொன்னார் signs, அடையாளம் என்பது வேறொன்றை குறிக்கிறது. சிறந்த உதாரணம்: இன்றைய சம்பவம். வசனம் 3:
“அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.’”
சற்றுப் பொறுங்கள். சற்று பின்னே வாருங்கள். இயேசு, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றா சொன்னார்? அந்த மனிதன் சுகம் பெற வந்தான், மன்னிப்பு பெற அல்ல. ஆனால் இயேசுவுக்கு ஒன்று தெரியும்: வாழ்க்கையில் பாவம் மற்றும் மன்னிப்பை விட பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்.அங்கே சில யூத ரபீக்கள் இருந்தனர், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.” ( மாற்கு 2:7).
ஒருபுறம், அவர்கள் நினைத்தது சரியே. பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக கூறுவது தேவத்துவ அதிகாரம் தனக்கிருப்பதாக கூறுவதே. அது உண்மை இல்லை எனில், தேவ தூஷணமே - மிகப் பெரிய பாவம். இயேசு அவர்களுடைய சிந்தனையை அறிந்து, அவர்களிடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். வசனம் 9:
“‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?’”
எனக்கு இந்த கேள்வி மிகவும் பிடித்துள்ளது. சற்று சிந்தியுங்கள். எது சொல்வதுற்குஎளிது?“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.” இது சொல்வதற்கு எளிது ஏனெனில் அதை ஒருவரும் பார்க்கக்கூடாது. ஆனால் அதனை செய்வது மிகவும் கடினம்! தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கக்கூடும்!ஆனால் ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி, “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்று சொல்வது - எல்லாவற்றையும் பந்தயம் கட்டுவதைப் போல. எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.எனவே 10ம் வசனத்தில் இயேசு தொடர்கிறார்,
“‘பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”
இங்கு நடந்த அற்புதம் மிகச்சிறந்தது: ஒரு திமிர்வாதக்காரன் நடக்கிறான்! ஆனால் அடையாளத்தை தவற விட்டுவிடாதீர்கள், அது இயேசுவின் அதிகாரத்தை குறிக்கிறது. பாவங்களை மன்னிக்கிறதற்கான தேவனுடைய அதிகாரத்தை உடையவர் இயேசு, அதை அவர் நிரூபித்தார். 13ம் வசனத்தில், கடலருகே இயேசு பிரசங்கித்துக் கொண்டிருந்தார், அங்கே லேவி வரி வசூலிப்பவனாக வேலை செய்வதைப் பார்த்தார். அந்நேரத்திலே வரி வசூலிப்பவர்கள் அருவெறுக்கப்பட்டார்கள், அவர்கள் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியதை விட அதிகமாக தங்கள் பைகளில் போட்டு ஊழல் செய்தவர்கள். பேராசை பிடித்தவர்கள். ஆனாலும் இயேசு லேவியை அனுகினார்,
“‘எனக்குப் பின்சென்று வா,’ என்று இயேசு அவனிடம் சொன்னார், அவன் எழுந்து அவருக்குப் பின் சென்றான்” (2:14).
திரும்பவும் அதே வார்த்தைகள், அதே அழைப்பு. ஆனால் இம்முறை இயேசு ஒரு பாவியை அழைத்தார்- மிகவும் கெட்டவன். லேவி இயேசுவுக்குப் பின்சென்றான்! மாத்திரமல்ல லேவி இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் விருந்துக்கு அழைத்த போது, அங்கே இன்னும் அநேக பாவிகள் வந்தனர்.இப்போது இதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்தது. பரிசேயர்கள் மதத்தலைவர்கள் - சுய நீதியுடையவர்கள் நியாயந்தீர்க்கிறவர்கள் - அவர்களால் சற்றும் புரிந்து கொள்ள இயலவில்லை. இயேசு நல்ல போதகரென்றால்,
“அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.” (2:16).
17ம் வசனம் அழுத்தமான வரிகளை உள்ளடக்கியது:
“இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.’”
இதை தவற விடாதீர்கள். இயேசு பாவிகளை தெரிந்தெடுத்தார். லேவி ஒரு பாவி. அவனுடைய நண்பர்களும் பாவிகள். ஆனால் ஒரு மருத்துவர் பிணியாளியை சுகமாக்க வருவது போல, இயேசு பாவிகளை மன்னிக்கவும் மீட்கவும் வந்தார் - அவர்களை நீதிமானாக்க வந்தார். நீதிமான் என்றால் தேவனோடு சரியாக இருப்பது. இது ஒரு முக்கியமான வார்த்தை. இரு நபர்களுக்கு இடையேயான உறவு சரியாக - இருக்கும் உணர்வை, உங்கள் நடுவே தடையாக எதுவுமே இல்லை என்கிற உணர்வை அறிவீர்கள்? அதே போல ஒரு உறவு சரி இல்லாததையும் அறிவீர்கள் - நீீங்கள் செய்த தவற்றினால் உங்கள் நடுவாக சுவர் எழுப்பப்பட்டதையும் அறிவீர்கள். நல்லது, அப்படிப்பட்ட இடத்தில் தான் நாம் கர்த்தரோடு இருக்கிறோம். பாவம் நம்மை பிரிக்கிறது. நாம் தவறிழைத்தோம். ஆனால் நற்செய்தி - மகிழ்ச்சியான செய்தி - என்னவென்றால் இயேசு நம்மை மீண்டும் சரிபடுத்தவே வந்திருக்கிறார். அவர் நம் பாவங்களை மன்னித்தார், நம்மை நீதிமான் என்றழைக்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் விசுவாசம் தான். விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். அதை விட சிறந்த காரியம், இயேசு பாவிகளை தெரிந்தெடுத்து, அவர்களை சீர்படுத்தி, தேவனுக்கு பணி செய்ய அவர்களை அனுப்புகிறார். 3ம் அதிகாரத்தில், இயேசு 12 பேரை அழைத்து, அப்போஸ்தலராக நியமித்ததை வாசிக்கிறோம். சீஷன் பின்பற்றுபவன், அப்போஸ்தலன் அனுப்பப்படுபவன் - பிரதிநிதி போல. அந்த பன்னிரண்டு பேரில் லேவியும் ஒருவன், அவன் ஒருவனுடைய பெயர் மாத்திரம் மத்தேயு என்று மாற்றப்பட்டது. இயேசு பாவிகளை தேர்ந்தெடுக்கிறார், அவர்களை மன்னிக்கிறார், சுகமளித்து அவர்களை மாற்றுகிறார், பின்பு மற்ற பாவிகளுக்கு நற்செய்தியை சொல்ல அவர்களை அனுப்புகிறார்: கர்த்தர் உங்களை நேசிக்கிறார். சிறப்பு. இன்றும் அவ்வாறே செய்கிறார். மாற்கு 2 மற்றும் 3ம் அதிகாரங்களை வாசியுங்கள். உங்களுக்கு நேரமிருந்தால், இப்பகுதியை முழுமையாக அறிந்து கொள்ள“முழு அதிகாரத்தை வாசிக்க” என்னும் பொத்தானை அழுத்துங்கள். மீண்டும் 4ம் அதிகாரத்தில் உங்களை சந்திக்கிறேன்.
விவாதம் & பிரதிபலிப்பிற்கு:
- இயேசு பாவிகளோடு அமர்ந்து உண்டதை ஏற்றுக் கொளவது ஏன் மதத் தலைவர்களுக்கு கடினமாயிருந்தது?
- மாற் 2:17ல் இயேசு அழுத்தமானதொரு கருத்தைக் கூறகிறார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.” நீங்கள் இதிலிருந்து என்ன அறிந்து கொண்டீர்கள்?
- மன்னிப்பு உங்கள் வாழ்க்கையில் எத்தகைய பங்கு வகிக்கிறது? உங்கள் சாட்சியைப் பகிருங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருவேளை நீங்கள் இயேசுவையோ அல்லது வேதத்தையோ புதிதாக அறிந்திருந்தால், அல்லது புதிதாக அறிந்திருக்கும் நண்பருக்கு உதவ நேர்ந்தால் - இங்கே துவங்கவும். அடுத்த 15 நாட்களுக்கு, இந்த 5 நிமிட ஒலி வழிகாட்டிகள் உங்களை: மாற்கு மற்றும் கொலோசெயர் எனும் இரண்டு அடிப்படையான வேத புத்தகங்களுக்கு நேராக நடத்தி செல்லும். இயேசுவின் கதையை பின்தொடர்ந்து, தனி நபர் வெளிப்பாடுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள்யோடு சேர்ந்து அவரை பின்தொடரும் அடிப்படையான காரியங்களை கண்டறியுங்கள். இந்த துவக்கத்திற்கு இதை பின்தொடருங்கள், பின் உங்கள் நண்பரை வரவேற்று மீண்டும் பின்தொடருங்கள்!
More