இங்கே துவங்குங்கள் | இயேசுவோடு முதல் படிகள்மாதிரி
கொலோசெயர் 4:17 | நீங்கள் தொடங்கியதை முடித்திடுங்கள்
வணக்கம் நண்பர்களே. இன்று நம்முடைய கடைசி நாள். வாழ்த்துகள்! நீங்கள் தொடங்கியதை முடித்துவிட்டீர்கள் - இது நல்ல குணத்திற்கான அடையாளம். மெய்யாகவே. அடுத்து என்ன என்று நீங்கள் அதிசயிக்கலாம் - அடுத்தது என்ன? இன்று நாம் கற்றவைகளை திரும்பி பார்க்கப்போகிறோம், மேலும் உங்கள் அடுத்த அடிகளை திட்டம் பண்ணலாம்.
கொலோசெயர் நான்காம் அதிகாரத்தில் கடைசி வசனம் இதற்கு நன்றாய் பொருந்தும். வசனம் 17:
"அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.'"
கவனிக்க வேண்டிய வார்த்தைகள். நமக்கு அர்க்கிப்பை தெரியாது, அவனுடைய ஊழியத்தைப் பற்றியும் தெரியாது. ஆனால் அவன் ஊழியம் குறிப்பிடத்தக்கது. தனி ஒரு நபரானாலும் தேவனுக்கு மிகவும் முக்கியம், அந்த தனி நபர் அழைப்பு அவர்களுடைய உலகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே பவுல் அர்க்கிப்புக்கு சொல்கிறார், "ஊழியத்தை நிறைவேற்று." தொடங்கியதை முடி.
இது தான் உங்களுக்கான என்னுடைய செய்தி. உங்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது, ஆனால் நீங்கள் தேவனுக்கு முக்கியமானவர்கள் என்பதை அறிவேன், உங்கள் ஊழியம் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கும் என்பதை அறிவேன். உங்களுக்கு ஒரு நோக்கமும் அழைப்பும் இருக்கிறது - எனவே தொடங்கியதை முடியுங்கள். முதலாவது, மறு ஆய்வு செய்வோம்.
நமது பயணம் எளிதான இரு வார்த்தைகளில் தொடங்கிற்று: "என்னை பின்பற்றுங்கள்." தொடக்கத்திலிருந்து முடிவு வரை அதுவே நமது மையப்புள்ளி -இயேசுவைப் பின்பற்றுவோம். பயணத்தின் பாதையிலே, இயேசு பிணியாளிகளை சுகமாக்குவதையும், காற்றையும் கடலையும் அடக்கியதையும், கொடூரப் பாவிகளை மன்னித்ததையும் மெய்யாகவே மக்களை சீரமைத்ததையும் பார்த்தோம். சீஷர்கள் இந்த மகத்தான வேலையில் பங்கு வகித்ததைப் போல, நீங்களும் ஆத்தும மீட்பு என்னும் வேலையில் பங்கு வகிக்கிறீர்கள்.
மாற்கு 8ல், இயேசு தனது சீஷர்களை ஒரு செயல்பாட்டுக்கு அழைக்கிறார்:
"ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (மாற்கு 8:34).
அப்படியே சீஷர்கள் பின்பற்றினர். ஐஸ்வரியவானான வாலிபனிடத்தில் இயேசு சொன்னதைக் கொண்டு, இயேசுவை பின்பற்றுதல் என்றால் பணம் மற்றும் பெருமை போன்ற விக்கிரகாரதனைகளை விட வேண்டும் என்று அறிந்து கொள்கிறோம். மேலும் நாம் தேவனுடைய மகத்தான கட்டளைகளைக் கற்றிருக்கிறோம்: தேவனை நேசியுங்கள் பிறரையும் நேசியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக,தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டோம். இயேசு நம்மைக் காக்கும்படி தனது சொந்த ஜீவனையே கொடுத்தார்.
நினைவில் கொள்ளுங்கள் - நாம் இதற்கு பாத்திரர்கள் அல்ல. நம்முடைய பாவங்களுக்கான பரிகாரத்தை நாம் செலுத்துகிறதில்லை, மேலும் நம்மை நாமே நல்லவர்களாக்க முடியாது. இயேசு நம் பாவத்தின் முழுப் பரிகாரமாக சிலுவையிலே மரித்தார், நமக்கு புது வாழ்வு அளிக்கும்படியாக மீண்டும் உயிர்த்தெழுந்தார். கிருபை. நமது வேலை வாழ்க்கையை அவர் நம்மை அழைத்த அழைப்புக்கு ஏற்றபடி வாழ்வதே.
இது நம்மை கொலோசெயரில் கொண்டுவிடுகிறது. நாம் எப்படி வாழ்வது? இரண்டு எளிதான வார்த்தைகள்: இயேசுவைப் பின்பற்றுங்கள். ஆனால் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்கு பதிலாக, உங்களுக்குள் இருக்கும் இயேசுவை பின்பற்றுகிறீர்கள். நீங்கள் பழைய மனிதனைக் களைந்து புதிய மனிதனாகும்போது, ஆவியானவர் நீங்கள் வாழ வேண்டிய விதத்தை காண்பித்து வழிநடத்துவார்.
மேலும் ஆவியானவர் உங்களுக்கு புதிய பழக்கங்களைத் தருவார். நினைவில் கொள்ளுங்கள் - இது செய்தேன் என்பதல்ல, இவை செய்கிறேன் என்பது. இது உங்கள் அடுத்தப் பழக்கத்தை தொடங்குவதற்கு சிறந்த இடம் உங்களது அடுத்த அடிகள்:
வேதம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்குங்கள். வேதத்தை திறந்து வாசிப்பதற்கு ஒரு நேரத்தை நிர்ணயம் செய்யுங்கள். இந்த வேத செயலியில் நீங்கள் தொடர்ந்து வாசிப்பதற்கு அநேக திட்டங்கள் உள்ளன, ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தின் ஊடாய் நடத்தும் திட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அல்லது இதே திட்டத்தை நீங்கள் மீண்டும் தொடங்குங்கள். இம்முறை உங்கள் நண்பரை உங்களோடு வாசிக்க அழையுங்கள. இது எனக்கு அடுத்த பழக்கத்தை நினைவூட்டுகிறது…
ஐக்கியம் என்னும் பழக்கத்தை தொடங்குங்கள். மற்ற விசுவாசிகளோடு தொடர்பில் இருங்கள். நாம் நேசிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம், அதற்கு ஒன்றிணைந்து பழக நேரம் தேவை. அதற்குத்தான் சபை. மறந்துவிடாதீர்கள், சபை நீங்கள் வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வு அல்ல, இது ஒரு ஐக்கியம். எனவே ஈடுபாடு காட்டுங்கள். இறங்கி செயல்படுங்கள், மனம் திறந்து பேசுங்கள், பாவங்களை அறிக்கையிடுங்கள், இணைந்து ஜெபியுங்கள் சுகமடையுங்கள். அடுத்த பழக்கத்தை தொடங்குவதற்கான சிறந்த இடம் இது…
சேவை என்னும் பழக்கத்தை தொடங்குங்கள். அது ஒரு ஊழியம். எளிதான உதவி மற்றவர்களுக்கு செய்ய வாய்ப்பு கிடைக்கிறதா என்று பாருங்கள். உதவுவதற்கான ஒரு சிறந்த வழி…
ஜெபிக்கும் பழக்கத்தை தொடங்குங்கள். ஜெபம் என்பது நாம் வேண்டுவதை பெற்றுக்கொள்வது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஜெபம் என்பது தேவனிடத்தில் நெருங்குவது. எனவே மனம் திறவுங்கள், உள்ளம் திறந்து தேவனிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் தேவைகளை சொல்லுங்கள், மற்றோருக்காகவும் ஜெபியுங்கள்.
மேலும் நிறைய புதுப்பழக்கங்கள் இருக்கின்றன: பாவ அறிக்கை பழக்கம், சீஷர்களை உருவாக்கும் பழக்கம். ஆனால் இது செய்ய வேண்டிய பணிகள் பட்டியல் போல தோன்ற ஆரம்பித்து விட்டால், சற்று நிதானியங்கள். மறந்துவிடாதீர்கள் - இது ஏதோ விதிகளை பின்பற்றுவதல்ல, இது இயேசுவைப் பின்பற்றுவது. எனவே இதனை எளிதாக்கிக் கொள்ளுங்கள், இயேசுவை கவனத்தில் கொள்ளுங்கள், உங்களை ஆவியானவர் வழிநடத்துவார்.
மேலும் நினைவு கொள்ளுங்கள் நீங்கள் ஏதோ ரொட்டி நறுக்கும் கிறிஸ்தவனாக இணங்கவில்லை.நீங்கள் உங்கள் உள்ளான மனிதனிலிருந்து- படைப்பின் நோக்கத்தின்படியே தேவ சாயலாக உருமாற்றப்படுகிறீர்கள். உதாரணமாக: உங்களுடைய புது பழக்கங்களில் ஒன்று கொடுப்பது. ஆனால் நீங்கள் பணம் கொடுப்பது தேவனிடம் மதிப்பெண் பெறுவதற்கல்ல. தேவன் கொடுக்கிறவர் எனவே நீங்கள் கொடுக்கிறீர்கள், நீங்கள் அவரைப் போல உதாரத்துவம் உள்ளவராக இருக்க கற்றுக்கொள்கிறீர்கள்.
எனவே, தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. அங்கே சாகசம் காத்திருக்கிறது. வாழ்க்கையில் பயணங்கள் உண்டு மேலும் வேதத்தின் மூலம் பயணங்கள் உண்டு. தேவன் உங்களுக்கு ஒரு வேலையை வைத்திருக்கிறார், எனவே தொடங்கியதை முடித்திடுங்கள். ஆனால் இது உங்களுடைய வேலை மாத்திரம் அல்ல, இது அவருடைய வேலை, மேலும்:
"உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடியநடத்துவார்" (பிலிப்பியர் 1:5).
இது உங்கள் வேலையை நீங்கள் முடிப்பது அல்ல, இது கர்த்தர் தன்னுடைய வேலையை உங்களில் முடிப்பது. எனவே இயேசுவின் மேல் உங்கள் கண்களை பதிய வையுங்கள், அவர்தான் நம் விசுவாசத்தை "துவக்குகிறவரும் முடிக்கிறவரும்" (எபிரேயர் 12:2). அவரே இதை தொடங்கினார் - அவரே இதை முடித்திடுவார். மேலும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தனிமை அல்ல. அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை (எபிரேயர் 13:5). மத்தேயு சுவிசேஷத்தில் சீஷர்களுக்கான இயேசுவினுடைய கடைசி வார்த்தை:
"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்." (மத்தேயு 28:20).
விவாதம் மற்றும் பிரதிபலிப்பிற்கு
- "தொடங்கியதை முடித்திடுங்கள்" என்னும் வாசகம் உங்கள் வாழ்க்கையில் எவ்வகை அர்த்தம் கொண்டது?
- பிலிப்பியர் 1:5 நமக்கு சொல்கிறது "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடியநடத்துவார்." இது உங்கள் வாழ்வில் எத்தகைய அர்த்தம் கொண்டது?
- இன்றைய திட்டம் உங்களது அடுத்த அடிகளுக்கான வழிகளைப் பரிந்துரைக்கிறது. உங்களுடைய அடுத்த அடிகள் என்ன?
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருவேளை நீங்கள் இயேசுவையோ அல்லது வேதத்தையோ புதிதாக அறிந்திருந்தால், அல்லது புதிதாக அறிந்திருக்கும் நண்பருக்கு உதவ நேர்ந்தால் - இங்கே துவங்கவும். அடுத்த 15 நாட்களுக்கு, இந்த 5 நிமிட ஒலி வழிகாட்டிகள் உங்களை: மாற்கு மற்றும் கொலோசெயர் எனும் இரண்டு அடிப்படையான வேத புத்தகங்களுக்கு நேராக நடத்தி செல்லும். இயேசுவின் கதையை பின்தொடர்ந்து, தனி நபர் வெளிப்பாடுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள்யோடு சேர்ந்து அவரை பின்தொடரும் அடிப்படையான காரியங்களை கண்டறியுங்கள். இந்த துவக்கத்திற்கு இதை பின்தொடருங்கள், பின் உங்கள் நண்பரை வரவேற்று மீண்டும் பின்தொடருங்கள்!
More