சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 4 நாள்

சமாதான மனநிலைக்கு தேவையான 5 முக்கிய நம்பிக்கைகள் >

நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், தேவன் மாத்திரமே உங்கள் வாழ்வின் மீது ஆளுமையுடையவர். அவரே உங்கள் பாதுகாப்பு. உலகம் உண்டான நாள் முதலாய் ஒருபோதும் அவர் தமது ஆளுமையில் தவறியதே இல்லை. அவர் வல்லமையிலும் அவர் ஒருநாளும் குறைவுற்றதே இல்லை. அவர் இன்றும் என்றும் எப்பொழுதும் சர்வ வல்லவர், சர்வமும் அறிந்தவர், சர்வவியாபி.

அவருடைய நோக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவருடைய வழிகளை நாம் அறிந்துகொண்டோமானால், அவர் நம் வாழ்வில் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார் என்ற விசுவாசம் நமக்குள் வளரும். என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட 5 முக்கிய தேவனை குறித்த நம்பிக்கைகளை நான் உங்களோடு கூட பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தேவனை குறித்த உங்களது புரிந்துகொள்ளுதலுக்கு சவாலாக இவை அமையும் என்று விசுவாசிக்கிறேன். நீங்கள் எந்த அளவிற்கு இந்த நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறீர்களோ, அதை பொறுத்ததே உங்கள் மனதின் சமாதானம்.

நம்பிக்கை 1: கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறவர் .
கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறவர். அவருடைய ஆளுமைக்கு மிஞ்சினது ஒன்றுமில்லை என்ற சத்தியத்தை நீங்கள் என்றைக்கு உணர்ந்துகொண்டு விசுவாசிக்கிறீர்களோ, அன்றைக்கு தான் உங்களால் தேவ சமாதானத்தை அனுபவிக்க முடியும். சகலமும் அவரது கண்களுக்கும் பாசத்திற்கும் உட்பட்டே இருக்கிறது. (கொலோசெயர் 1:17)
நம்பிக்கை 2: கர்த்தர் உங்கள் தேவைகளை சந்திக்கிறவர்.
வேதாகமத்தின் அனைத்து பக்கங்களும், சரித்திரங்களை ஒருசேர நமக்கு சொல்லும் ஒரு காரியம்: தேவன் நம் தேவைகளை சந்திப்பதில் வல்லவர். எந்த ஒரு தேவையும் அவரது சக்திக்கு மிஞ்சினது இல்லை. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவுபடாது என்று வசனமே சொல்கிறது. (சங்கீதம் 34:10).
நம்பிக்கை 3: தேவன் ஒரு நோக்கத்திற்காகவே உங்களை படைத்திருக்கிறார்.
நம் கட்டுப்பாட்டை மிஞ்சின சில காரியங்கள் நம் வாழ்க்கையில் உண்டு. அவைகள், ஏதோ ஒரு நோக்கத்திற்காக தேவன் அவைகளை நியமித்திருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் பிறந்த நாடு, நம் கலாச்சாரம், நம் பெற்றோர், நம் பாலினம் - இவைகள் எதையுமே நாம் தெரிந்தெடுக்கவில்லை. தெரிந்தெடுக்கவும் முடியாது. இவைகளெல்லாம் நம்மை குறித்த தேவனுடைய தெரிந்தெடுப்புகள். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கிருபைகள், தாலந்துகள், குணங்கள் இவைகளிலெல்லாம் இணைந்தே நம்மை தனித்தன்மை உடையவர்களாக நம்மை மாற்றுகிறது. இவைகள் அனைத்திற்கும் ஒரு காரணம், நோக்கம் தேவனுக்கு உண்டு. (சங்கீதம் 139:13-16)
நம்பிக்கை 4: உங்களுக்கென்று ஒரு இடத்தையும் தேவன் வைத்திருக்கிறார்.
தேவன் உங்களை அவருடனும் மற்றவர்களுடனும் ஐக்கியப்படும்படியாகவே உங்களை படைத்திருக்கிறார். நீங்கள் அவருக்கு சொந்தமானவர்கள் என்ற வலிமையான உணர்வை அவர் உங்களுக்கு தருவதற்கு இதனை விசுவாசியுங்கள். விசுவாச பிள்ளைகள் நிறைந்த ஒரு "குடும்பத்தை" தேவன் உங்களுக்கு ஏற்படுத்தி தருவார். அவருக்குள் நீங்கள் வளர வளர, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாறுவீர்கள். (1 பேதுரு 2:9)
நம்பிக்கை 5: உங்கள் நிறைவைக்குறித்து தேவனுக்கு ஒரு திட்டமுண்டு.
நீங்கள் சமாதானத்தை அனுபவிப்பதற்கு - நீங்கள் தகுதியுள்ளவர்கள், திறமையுடையவர்கள், உங்களால் ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை மனதினுள் அவசியம். ஒரு காரியத்தை உங்களால் நேர்த்தியை செய்ய முடியும் என்ற எண்ணமே உங்களுக்கு சமாதானமுள்ள ஒரு அருமையான உணர்வை தரும். (எபேசியர் 2:10)

இந்த 5 காரியங்களையும் உங்கள் வாழ்வில் நீங்கள் முழுமையாக நம்பும்போது, தேவனுடைய ஆளுமையின், உங்கள் மீது அவர் கொண்டிருக்கிற அன்பின் மேலும், உங்கள் பட்சமாக அவர் செயலாற்றுவர் என்ற எண்ணத்திலும் உங்கள் விசுவாச அதிகரிக்கும். தேவ சமாதானம் உங்களுடையதாகும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv