சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி
விசனமில்லா வாழ்வு
அன்றைய நாள் என்னால் மறக்க முடியாது. ஒலித்த தொலைபேசியை எடுத்து, பெருமூச்சு விட்டு, "சரி, பரவாயில்லை" என்று சொல்லி இணைப்பை துண்டித்த அந்த தருணம்.
தொலைபேசியின் மறுமுனையிலிருந்த ஒரு வழக்கறிஞரிடம் இருந்து எனக்கு வந்த அந்த சோகமான செய்தி, "உங்கள் மனைவி விவாகரத்து பெற வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்" என்பதே.
விவாகரத்து என்ற வார்த்தை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே பல முறை என் மனைவி என்னை மிரட்ட பயன்படுத்திய வார்த்தை தான். ஆனாலும், அன்று என்னவோ என் மனம் மிகவும் சோர்வுக்குள்ளானது.
அடுத்த பல நாட்களுக்கு பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளானேன். நான் விவாகரத்தை விரும்பவில்லை. ஆனாலும் இந்த சூழலை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. என்ன பேசவேண்டும் என்றோ, எப்படி பேசவேண்டும் என்றோ எனக்கு தெளிவில்லை. நான் போதகராயிருந்த என் சபை மக்களுக்கு இதை எப்படி சொல்வது, அவர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று பல சிந்தனைகள். என்னுடைய அப்போதைய பெரிய அழுத்தமே, அடுத்த ஞாயிறு ஆராதனையில் நான் எப்படி பிரசங்கிக்க போகிறேன் என்பது தான்.
காலங்கள் கடந்த என் சிந்தனைகள் பலவற்றின் நடுவிலும் என் ஆழ்மனது சில காரியங்களில் தெளிவாக இருந்தது. அவைகள்:
· எனக்கெதிரான இந்த காரியம், தேவனுக்கு எதிர்பாராத ஒன்றல்ல
· தேவனுடைய கட்டுப்பாட்டிலேயே என் வாழ்க்கை இருக்கிறது. அவர் அனுமதியாமல் என் வாழ்வில் எதுவும் நடக்க போவதில்லை.
· ஒருபோதும் என்னை விட்டு அவர் விலகுவதுமில்லை, என்னை கைவிடுவதும் இல்லை என்று அவர் எனக்கு வாக்கு தந்திருக்கிறார். எனவே என் வாழ்வில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என்னோடு இருந்து அவர் என்னை நடத்துகிறார். எனவே சகலமும் எனக்கு நன்மையாகவே மாற்றப்படும்.
தற்காலிக நிகழ்வுகள் எனக்கு வருத்தத்தை கொடுத்தாலும், தேவன் மீது நான் கொண்டிருந்த அந்த மாறாத விசுவாசம் எனக்கு மனஅமைதியை கொடுத்தது.
அந்த வழக்கறிஞரின் தொலைபேசி அழைப்பிலிருந்து 8 வருடங்களுக்குள்ளாக என் மனைவி என்னிடமிருந்து பெற விரும்பிய விவாகரத்து அவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட்டது.
விவாகரத்து தொடர்பான வழக்கில் நான் போராடி தோற்றதை குறித்து, மீண்டும் இணையும் நோக்கில் நான் மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றது தொடர்பாக நான் விசனப்படுகிறேனா, வருந்துகிறேனா என்று அநேகர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார்கள்.
அமைதி மட்டுமே எனது வெளியரங்கமான பதிலாக இருக்கும். ஆனால், என் ஆழ்மனதினுள், "சோகம் தான். ஆனாலும், நான் விசனப்படவில்லை" என்பதே எனது பதிலாக இருந்தது.
என் விவாகம் தோல்வியில் முடிந்தது எனக்கு சோகத்தை கொடுத்தது, உண்மை தான். ஆனால், குற்றமனசாட்சியின் வருத்தம் என்னை சிறிதும் ஆட்கொள்ள நான் இடம்கொடுக்கவில்லை. தேவனுடைய சமாதானம் என்னில் நிலைகொண்டிருந்ததால், குற்றமனசாட்சிக்கு என் மனதில் இடமில்லாமல் போனது.
குற்றமனசாட்சியின்றி வாழ்வதற்கு தேவை சுத்தமான மனசாட்சி என்பதை நான் நன்கு புரிந்துகொண்டிருந்தேன். அந்த வகையில், என் உறவுகளில், எனது ஒவ்வொரு செயலிலும் என்னால் இயன்றமட்டும் தேவனுக்கு பயந்து உண்மையாக நடந்துகொள்வதில் என்னாலானமட்டும் கவனமாய் இருந்தேன். எளிதான பாதைகளில் மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவரை விசுவாசித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். அவர் வசனங்களுக்கு கீழ்ப்படிந்து அவர் வார்த்தைகளின்படி நடப்பதையே தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களை மன்னிப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் நடப்பதற்கென்று தேவன் நியமித்த பாதையையே தெரிந்துகொள்ளுங்கள்.
இவைகளில் ஒன்றையாகிலும் நமது சொந்த பெலத்தில் நம் ஒருவராலும் செய்துவிட முடியாது. அதற்காக தான் நமக்கு உதவி செய்ய நமக்கொரு துணையாளர் கொடுக்கப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு இவைகள் அனைத்திலும் நம்மால் வெற்றிக்காண முடியும். அவரை சார்ந்துகொண்டு நமது வாழ்வில் நாம் சந்திக்கும் சகல போராட்டங்களிலும், சோதனைகளிலும் ஜெயித்து, நமக்கென்று அவர் தரிசனத்தை உத்தமமாய் நிறைவேற்றுவோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
More