கிறிஸ்து பிறப்பின் காட்சிமாதிரி
நீங்கள் சிறு பிள்ளையாய் இருந்த நாட்களை நினைவுகூர்ந்து பாருங்கள். இப்போது இருக்கக்கூடிய வயதை எட்டும்போது என்னவாக இருக்கவேண்டும் என்று அன்று நீங்கள் கற்பனை செய்தீர்கள்? இன்னும் 5, 10 அல்லது 25 வருடத்தில் உங்கள் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
வரும்காலத்தை குறித்து யூகிக்கும்பொழுது அநேக மக்களுக்கு அநேக விதமான உணர்வுகளை கொண்டுவரும். உங்கள் வாழ்வில் நீங்கள் அடுத்தது என்ன செய்யப்போகிறீர்கள் என்று அறியாமல் இருந்தால் அதை குறித்து யோசிக்கும்பொழுதே பயமுறுத்தும். உங்கள் மனதை எதோ ஒரு இலக்கின்மீது வைத்திருப்பீர்களென்றால், அப்போது உங்கள் இலக்கை நோக்கி செல்வதென்பது ஒரு இன்பத்தைக்கொடுக்கும் உணர்வாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை எடுத்தால் என்ன செய்வது?
யோசேப்பு தன்னிடம் தேவதூதன் வந்து தனக்கு நியமிக்கப்பட்ட பெண் ஒரு குமாரனை பெறப்போகிறாள் என்று சொன்னபோது அந்த நிலையில் தான் இருந்தார். யோசேப்பு மரியாளை திருமணம்செய்து தேவனுடைய குமாரனை தன் சொந்த குமாரனாக வளர்க்கும் பொறுப்பை பெற்றுக்கொள்வார் என்று நினைத்திருக்கவே மாட்டார்.
அது நிச்சயமாக ஒரு பெரிய பொறுப்பு தான்! ஆனால் யோசேப்பு ஒரு நீதிமானாக இருந்தார், அவரைப்பற்றி வேதத்தில் அதற்குமேல் அதிகமாக நாம் பார்க்காவிட்டாலும்கூட, அவர் மரியாளை திருமணம் செய்துகொள்ளவும், இயேசுவை தன் மகனாக வளர்க்கவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.
இயேசுவின் பிறப்பை சுற்றி நடந்த சம்பவங்கள் அவருடைய பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்கூட, தேவனுக்கு அது அதிர்ச்சியாக இல்லை. நம்முடைய சொந்த ஜீவியங்களில், நம்முடைய திட்டங்களை தடுக்கும் காரியங்கள் வரத்தான் செய்யும். சூழ்நிலைகள் நாம் எதிர்பார்க்காத வண்ணம் மாறும், அவைகள் நம்மை அதிர்ச்சியுற செய்யும், ஆனால் தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் அதிர்ச்சி அடைவதில்லை என்று நினைவில் கொள்ள வேண்டும்.
அவர் நாம் நடந்து செல்லும் வண்ணம் நமக்காக எல்லாவற்றையும் அவருடைய திட்டத்தின்படி செய்திருக்கிறார். அவர் மரியாளையும் யோசேப்பையும் இயேசுவின் பூலோக பெற்றோராக எதோ திடீரென்று ஏற்படுத்தவில்லை. நீ எதிர்பாராத திட்டங்களாக இருந்தாலும்கூட உன்னை அவர் தெரிந்தெடுத்திருக்கிறார்.
பிரதிபலிக்கும் கேள்விகள்:
நாம் இயேசுவை ஒரு சிறு குழந்தையாக, பின்னர் ஒரு மிகபெரிய ரபியாக பார்க்கிறோம், ஆனால் இயேசுவின் பெற்றோராக இருப்பது எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறீர்கள்? அது அதிக சந்தோஷத்தோடுகூட வந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?
நீ எதிர்பார்க்காத வண்ணம் அதிர்ச்சியூட்டும் சூழ்நிலைகளைக்கொண்டு தேவன் உன்னை சந்தித்த நிகழ்வுகள் என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவ குடும்பங்கள் அநேகர் இயேசுவின் பிறப்பை சித்தரிக்க கிறிஸ்து பிறப்பின் காட்சியை வீடுகளில் அமைப்பதுண்டு. பெரும்பாலும் நாம் மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், ஆடுகள் மற்றும் ஞானிகள் அந்த தொழுவத்தின் முன்னணையில் உள்ள சிறு பாலகனை சுற்றி நிக்க காண்போம். அது மிக அழகான ஒரு காட்சி, நம்மை இயேசுவின் பிறப்பை நினைவுகூர வைக்கும் காட்சி. ஆனால் நாம் அதை கண்டு பழகிவிட்டால், அந்த விசேஷித்த இரவில் இருந்த ஒவ்வொரு நபரின் மனிதத்துவத்தை மறக்க செய்துவிடும்.
More