கிறிஸ்து பிறப்பின் காட்சிமாதிரி
இயேசுவின் பிறப்பு காட்சியில் இடம்பெறும் இறுதி கதாபாத்திரங்கள் யாரெனில் ஞானிகள் அல்லது சாஸ்திரிகள். இயேசு பிறந்த ராத்திரி வேளையில் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்ட இவர்கள் அநேகமாக யூத மதத்தினரல்லாத வானவியல் வல்லுநர்களாக இருந்திருக்கக்கூடும். உலக வரலாற்றில் ஏற்படப்போகும் மிகப்பெரும் மாற்றத்தை இந்நிகழ்வு முன்னறிவிக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த நிகழ்வு நடந்த இடத்தை அறியும்படிக்கு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள், மேலும் அவர்கள் இயேசு பிறப்பின் செய்தியை அநேகமாகக் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆகவே அவர்கள் ஏரோது ராஜாவிடம் சென்றனர், ஏனெனில் அவர்கள் அந்த புதிய ராஜாவைப் பார்க்கவும், அவரை உயர்த்தவும், அவரைப் பணிந்துகொள்ளவும் விரும்பினார்கள்.
ஏரோது, ரோமப்பேரரசினால் நியமிக்கப்பட்டிருந்த அப்போதைய இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தபடியினால், தன்னுடைய ஆட்சிக்கு வரவிருந்த இந்த ஆபத்தைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவன் அதிகமாக மகிழ்ச்சியடையவில்லை. ஏரோது ராஜாவுக்கும், ஞானிகளுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவேயாகும்: ஏரோது அச்சுறுத்தலாகப் பார்த்ததை, ஞானிகள் நம்பிக்கையுடன் பார்த்தார்கள். ஏரோது இயேசுவை, தன்னை மீட்க வந்த இரட்சகராகப் பார்க்கவில்லை, மாறாக இஸ்ரவேல் தேசத்தின் மீதான தன்னுடைய அதிகாரம், மற்றும் தன்னுடைய சொந்த சட்டத்திட்டங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒருவராகவேப் பார்த்தான். கட்டளைகளைப் பிறப்பிக்கும், மற்றும் சட்டங்களை உருவாக்கும் ஒருவனாகவே இருந்து ஏரோது பழக்கப்பட்டுவிட்டான். தேவனுடைய குமாரனுக்குக் கீழ்ப்படிவதை அவன் விரும்பவில்லை. ஆனால் தேவனைப் பணிந்துகொள்ளும்படியாக ஞானிகள் வளர்க்கப்படாவிட்டாலும், இயேசுவின் பிறப்பானது வலிமைமிக்க, மற்றும் ஆச்சரியத்திலாழ்த்தும் ஏதோவொரு நிகழ்வுக்கு அடையாளமாயிருக்கிறதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசு பிறப்பின் செய்தியைக் கேள்விபட்டதும் அவர்கள் நம்பிக்கையடைந்தவர்களாய், ஆனந்த சந்தோஷமடைந்தனர்.
நம்முடைய சொந்த வாழ்விலும்கூட இவ்விதமாகவே நடக்கிறது. இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்கும்போது, அவர் நம்முடைய இரட்சகர் மற்றும் நம்முடைய ராஜாவாகிறார். அதாவது நம் வாழ்வின் தீர்மானத்தை நாமே எடுக்கும் அதிகாரத்தை நாம் விட்டுக்கொடுக்கிறோம். நாம் இப்பொழுது நம்மையல்ல, நம்முடைய ராஜாவை மையப்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழுகிறோம். ஆகையால் கேள்வி என்னவென்றால், இயேசுவை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்த ஏரோதைப் போல் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது, இயேசுவைத் தங்கள் வாழ்வின் நம்பிக்கையாகப் பார்த்த ஞானிகளைப் போல் நீங்கள் இருக்கிறீர்களா?
சிந்தனைக்கான கேள்விகள்:
இயேசுவைக் காணும்படிக்கு வெகுதூரம் போக ஞானிகள் விரும்பியது ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
இயேசுவோடுகூட நடக்க உங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்குப்படி நீங்கள் தடுமாறும் உங்கள் வாழ்க்கையின் பகுதிகள் என்னென்ன?
நீங்கள் இயேசுவை, ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்வின் நம்பிக்கையாகப் பார்க்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவ குடும்பங்கள் அநேகர் இயேசுவின் பிறப்பை சித்தரிக்க கிறிஸ்து பிறப்பின் காட்சியை வீடுகளில் அமைப்பதுண்டு. பெரும்பாலும் நாம் மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், ஆடுகள் மற்றும் ஞானிகள் அந்த தொழுவத்தின் முன்னணையில் உள்ள சிறு பாலகனை சுற்றி நிக்க காண்போம். அது மிக அழகான ஒரு காட்சி, நம்மை இயேசுவின் பிறப்பை நினைவுகூர வைக்கும் காட்சி. ஆனால் நாம் அதை கண்டு பழகிவிட்டால், அந்த விசேஷித்த இரவில் இருந்த ஒவ்வொரு நபரின் மனிதத்துவத்தை மறக்க செய்துவிடும்.
More