தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்மாதிரி
ஞானமுள்ள பயம்
அநேக நல்ல பயங்கள் உள்ளன. தேவனுக்குப் பயப்படுதல் அவைகளில் ஒன்று. இதுவே அஸ்திபாரமானது. இது மற்ற நல்ல பயங்களை ஊட்டுகிறதாய் இருக்கிறது. கர்த்தருக்கு முதலாவது பயப்படுகிறவர்களே ஞானமுள்ள மனுஷன் அல்லது மனுஷி ஆவார்கள். உங்கள் விசுவாசப் பாதையின் தொடக்கத்தில் தேவ பயம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இது கிறிஸ்துவோடு கூடிய உங்கள் திருமணத்தின் தேனிலவு காலம். எதிர்பார்க்கிறதை செய்வதை விட வேறொன்றும் உங்களுக்குத் தெரியாது. ஆனால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை விட்டு விட்டால், நீங்கள் கீழ்ப்படியாமைக்குள்ளே வழி விலகி சென்று விடுவீர்கள்(சங் 36:1). எந்த ஒரு நம்பிக்கை அல்லது ஒழுங்கைப் போல, தேவ பயமும் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலினால் வளர்க்கப்பட வேண்டும். தேவபயம் தேவனுக்கும், உங்களுக்கும் நீங்கள் உண்மையாயிருக்கும்படி செய்கிறது. இதுவே பொறுப்புணர்ச்சியின் தொடக்கமாகும். தேவபயமில்லாத தேவ கிருபை என்பது இல்லாத ஒன்று. தேவகிருபை இல்லாத தேவபயம் இல்லாதது போல தேவபயமில்லாத தேவகிருபையும் இருக்க முடியாது. கர்த்தருக்குப் பயப்படாதவன் மூடனாயிருக்கிறான். தேவபயமில்லாததின் விளைவு முட்டாள்தனமான முடிவு எடுத்தல் மற்றும் ஒழுங்கீனமான வாழ்க்கை வாழ்வதாகும்.
மேலும், வெற்றியானது தேவனுக்குப் பயப்படுதலுக்கு எதிரியாகும். வெற்றியை அதிகமாகப் பெறும் போது, நீங்கள் தேவ பயம் இல்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால், இதை மாற்றி சொல்வோமானால் அது உண்மை. நீங்கள் வெற்றியை அதிகமாக பெறும்போது, தேவபயம் மற்றும் பாவத்தின் விளைவு பற்றிய பயம் உங்களுக்கு அதிகமாக தேவைப் படுகிறது. வெற்றி, அநேக நேரங்களில், சுய உரிமையைக் கொடுக்கிறது. இந்த நேரங்களில் நீங்கள் உங்கள் பொறுப்புணர்ச்சியின் அளவை அதிகரிப்பதற்கு ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு தீவிர உண்மையுள்ளவர்களாய் இருங்கள். பொறுப்புணர்வு இல்லாமல் உங்களால் சுயத்தைக் கையாள முடியாது. தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன், அவனால் முடியவில்லை (அப் 13:22). பொறுப்புணர்வு இல்லாத சுய உரிமை தொடர்ந்து தவறான தீர்மானங்களுக்கு வழி வகுக்கிறது, மேலும் அது திருத்தப் படாவிட்டால் ஒழுக்கக் கேடான நடக்கையில் கொண்டு போய் விடுகிறது. சட்டத்திற்கு மேலானவன் ஒருவனுமில்லை, பொறுப்புணர்வுக்கு மேலானவனும் ஒருவனுமில்லை.
பொறுப்புணர்வைத் தன்னுடைய விசுவாசம், நிதி நிலைமை, குடும்பம், வேலை மற்றும் ஓய்வு நேரங்கள் இவைகளில் செயலாக்குகிறவனே ஞானமுள்ள தலைவன். தனக்கு இது தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கே இது அதிகம் தேவைப்படுகிறது. நீங்கள் இந்த விதமாக செய்ய ஆரம்பிக்கலாம்; உங்களது வேலை மற்றும் வேலை சம்பந்தப்பட்ட பயணங்களில் உங்களோடு கூட இருக்கக் கூ டிய ஒரே பாலினத்தில் உள்ள ஒரு தனி உதவியாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஒரு இளம் வருங்கால தலைவனை உருவாக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு, மேலும் இது அந்த இளைஞனுக்கோ அல்லது இளைஞிக்கோ அவர்கள் உங்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. மற்றவர்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் போது நாம் எல்லோருமே சிறப்பாக செயல்படுவோம். கர்த்தருக்குப் பயப்படும் பயமானது பாவம் செய்யாதபடிக்கு உங்களைக் காக்கிறது (யாத் 20:20). பொறுப்புணர்வை உங்கள் வாழ்க்கைத் துணை, உயர் மட்டக் குழு, முதலாளி, மற்றும் உங்களுக்கு கண்காணிகளாக வைக்கப்பட்ட குழு இவர்களிடமிருந்து வரவழையுங்கள். உங்கள் தொழில் நிமித்தமான மற்றும் தனிப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட காரியங்களில் உண்மையுள்ளவர்களாயிருங்கள். யாரிடமாவது நீங்கள் அதிக உணர்வு சார்ந்த பழகும் போது அதை உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் தனிமை நேரத்தைக் குறித்து அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். வேலையில்லாமல் சும்மாவே இருப்பது விவேகமின்மைக்கு வழிவகுக்கும். தனிமையை உங்கள் இரட்சகராகிய தேவன், உங்கள் வாழ்க்கை் துணை மற்றும் விசேஷித்த நண்பர்களுக்காக ஒதுக்குவதில் நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருங்கள். தேவபயம் உங்கள் சிநேகிதன். பாவத்தின் விளைவைக் குறித்த பயத்தோடிருப்பது புத்திசாலித்தனம். பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்வதைக் குறித்த பயத்தோடிருப்பது ஞானம். கர்த்தருக்குப் பயப்படும் பயம் விடுதலையளிக்கிறது. ஆகையினாலே, கர்த்தருக்குப் பயந்திருங்கள், பாவத்தை வெறுத்து விடுங்கள், கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.
கர்த்தரின் இதயத்தை தினமும் தேடுங்கள் என்ற தியானத்திலிருந்து வாசிக்க:
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், "உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்". வேதம் சொல்லுகிறது, "அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்". சங்கீதம் 119:2
More