தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்மாதிரி

Seeking Daily The Heart Of God - Wisdom

5 ல் 3 நாள்

தாழ்மையிலிருந்து ஞானம்

ஞானம் மனத்தாழ்மையுடன் பிணைந்த ஒன்று. இது மனத்தாழ்மையின் ஒரு நுண்ணியமான பகுதியாகும். மனத்தாழ்மையின் அதிக மதிப்புள்ளவற்றை உள்ளடக்கியது. உண்மையில், ஞானம் மனத்தாழ்மையின் மிகவும் மதிக்கப்படும் மூலதனங்களில் ஒன்றாகும். நீங்கள் ஞானத்தை விரும்பினால், உங்கள் இதயத்தில் மனத்தாழ்மையை அணிவீர்கள். ஒரு ஓட்டுநர் தன் சேவையுறுனரை கொண்டு சேர்ப்பது போல பணிவு ஞானத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. ஞானம் மனத்தாழ்மையுடன் பயணிக்கிறது. சில சமயங்களில், ஞானம் பணிவுக்கு பின்இருக்கையை எடுக்கும். தாழ்மையுள்ளவர்கள் கர்த்தரின் ஞானம் தங்களுக்குத் தேவை என்று புரிந்து கொள்வர். தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்று நினைப்பது ஒரு சுயநியமிக்கப்பட்ட குருவின் பாசாங்கு தான். கிறிஸ்துவின் எண்ணங்கள் தனது புத்திசாலித்தனத்தை ஊடுருவதற்கான தேவையை மனத்தாழ்மை தெளிவாக அறிந்துள்ளது. மனத்தாழ்மை தனக்குத் தெரியாததை தெரியாதென்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலி.

வாழ்க்கையின் அதிகமான பகுதிகள் மனிதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியாத அளவில் உள்ளது. மனிதனின் புரிதலை விட மேலானவை இருக்க வேண்டும். நமது சொந்த வரையறுக்கப்பட்ட புரிதலுடன் சிறந்த தேர்வைக் கண்டுபிடிப்பதற்கு நம்மிடம் புறநிலை இல்லை. நம் சிந்தனையைக் கழுவி அவரது நீதியின் முறையை விட்டுச் செல்ல நமக்கு கர்த்தரின் ஞானம் வேண்டும். தாழ்மையானது கர்த்தரிடமும் பிறரிடமும் இருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை நிலைவரப்படுத்தும். இது வளர்ச்சியின் ஒரு செயல்முறைப் படி. இயேசு கூட ஞானத்தில் வளர்ந்தார் ( லூக்கா 2:52).

ஞானத்தைப் பெறமுடியாத நிலைக்கு பெருமை உங்களைத் தள்ளுகிறது. இது பேஸ்பால் விளையாட்டின் இடதுகளத்தில் வரிசையாக நிற்கும் முதல் பேஸ்மேன் போன்றது. பந்து அடித்தவுடன் அவர் நிலைக்கு வெளியே தள்ளப்படுகிறார். பந்தைப் பெற யாரும் முதல் தளத்தில் இல்லை. மனத்தாழ்மை இல்லாமல், நீங்கள் ஞானத்தைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள். நீங்கள் ஞானத்தை விரும்பக் கூட செய்யலாம், ஆனால் மனத்தாழ்மை இல்லாமல், பரலோக போதனைகளில் நீங்கள் மிகவும் குறைவுள்ளவராகவே இருப்பீர்கள். பெருமைமிக்க ஒருவருக்கு கர்த்தர் தனது ஞானத்தை அளிப்பது அரிது, ஏனென்றால் அவரை நம்ப முடியாது என்று அவருக்குத் தெரியும். இத்தகைய மதிப்புமிக்க தகவல்களை கர்த்தர் ஏன் வீணடிக்கிறவரிடமோ, அல்லது அனைத்தையும் தனக்குத்தானே செலவிடுபவரிடமோ ஒப்புவிப்பார்? தாழ்மையான இதயம் உள்ளவர் ஞானத்தின் ஒரு நல்ல காரியகர்த்தாவாக இருப்பார் என்று கர்த்தருக்குத் தெரியும். உண்மையில், மனத்தாழ்மை ஞானத்திற்கான நாட்டத்தை இதயத்தில் வைக்கிறது. இது ஞானத்தின் துணுக்குகளுக்கான ஒரு பசியைத் தூண்டுகிறது.

ஞானத்தை உட்கொள்ள உங்கள் ஆன்மீக உணவு முறையை நீங்கள் சரிசெய்தவுடன், நீங்கள் ஒருபோதும் உலக ஞானத்தின் குப்பை உணவுக்கு திரும்பிச் செல்ல மாட்டீர்கள் (1 கொரிந்தியர் 1: 20-30). உலக ஞானம் பெருமையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. யார் புத்திசாலித்தனமாகவும் விரைவாகவும் தங்கள் எதிரியை முறியடிக்க முடியும் என்பதற்கான அதிகாரப் போராட்டமாகும். அனைத்துமே பெருமையுள்ளவர்களுக்கு எதிரான போட்டி தான். அவர் தனது சொந்த சக்தியின் மூலம் முட்டாள்தனமாக மட்டுமீறி பதவியை பிடிக்கிறார்கள். மறுபுறமாக, தாழ்மையானவர்களோ, நேரமெடுத்து கர்த்தருக்குக் காத்திருக்கிறார்கள். தாழ்மையுடன் கர்த்தரின்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து பிறந்த ஞானத்துக்கு விடாமுயற்சியும் மனவுறுதியும் இருக்கிறது. அவமானம் என்பது பெருமையின் பயண பங்காளி. பெருமை நீங்கள் விரும்புவதைப் பெற்றுத்தரக்கூடும், ஆனால் உங்கள் பின்பார்வை கண்ணாடியில் அவமானத்தை மட்டுமே காணமுடியும்.

தாழ்மையாக ஞானத்தின் வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. ஞானம் உங்களை நன்றாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது; ஞானம் அருளைக் கொடுக்கிறது; ஞானம் எந்த ஏக்கமும் இல்லாத முடிவுகளைப் பெற்றுத் தருகிறது. எனவே, கர்த்தரின் கிருபையுள்ள ஞானத்தை தாழ்மையுடன் வரவேற்று அழையுங்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking Daily The Heart Of God - Wisdom

நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், "உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்". வேதம் சொல்லுகிறது, "அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்". சங்கீதம் 119:2

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Wisdom Hunters நிறுவனம் மற்றும் பாய்டு பெய்லி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.wisdomhunters.com/ என்ற இணையதளத்தை அணுகவும்