தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்மாதிரி

Seeking Daily The Heart Of God - Wisdom

5 ல் 4 நாள்

ஞானம் ஒரு செல்வம்

ஞானம் பணம் போன்றது. காலப்போக்கில் அதன் மதிப்பு ஏறிக் கொண்டே செல்லும். நீங்கள் கிரமமாக ஞானத்தை சேர்த்தீர்களானால் உங்கள் வாழ்க்கை கர்த்தரின் வழிகளில் மதிப்புள்ளதாகும். அதனாலேயே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மற்ற எதைக்காட்டிலும் ஞானத்தை பெற்றுக் கொள்வது இன்றியமையாதது. ஞானம் சரியானது அல்லது தவறானது என்று பிரித்தறிந்து, உண்மை மற்றும் நீடித்தவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் உள்ளது. எதிரியைத் தோற்கடிக்க உங்களுக்கு உதவும் உங்கள் கூட்டாளி தான் ஞானம் என்பது. கர்த்தரின் ஞானத்துக்கு முன் சாத்தான் சிறிதும் அதிகாரமற்றவன். உங்கள் சொந்த வரையறுக்கப்பட்ட புரிதலுடன் பிசாசை தோற்கடிக்க முயற்சிக்காதீர்கள். மாறாக, ஞானமென்னும் ஆயுதத்தால் அவனை நசுக்குங்கள். ஞானத்தின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கை காற்றின் சீரலையும், துன்ப அலைகளையும் தாங்கும். (நீதிமொழிகள் 28:26). ஞானம் கர்த்தரின் கண்ணோட்டத்தை உங்களுக்கு காட்டும். ஞானம் நீரில் மூழ்குபவருக்கு ஒரு வாழ்க்கை பாதுகாப்பு, திசை இழந்த ஆராய்ச்சி பயணிகளுக்கு ஒரு திசைகாட்டி, மற்றும் இருண்ட குழப்பமான சூழ்நிலையில் அது ஒளி.

ஞானம் தங்கம் போன்றது, தங்கம் எளிதாக கண்டுபிடிக்கத் தக்க ஒன்றல்ல. எதற்கும் ஒரு விலைக்கிரயம் உள்ளது. அதைக் கண்டுபிடிப்பதற்கும் அடைவதற்கும் செலுத்த வேண்டிய ஒரு விலையுண்டு. நீதிமொழிகள்(16:16).

நரை முடி ஞானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது, ஆனால் பரிசோதிக்கப்பட்ட அனுபவம் ஞானத்தைப் பெற உங்களை நிலைநிறுத்துகிறது. ஒரு வயதான முட்டாள் அல்லது வயதுக்கு அதிகமான ஞானியாகவும் நீங்கள் இருக்க முடியும். இளைஞனோ அல்லது வயதானவரோ, புத்திசாலியோ, அல்லது சராசரி நுண்ணறிவுடையவரோ நீங்கள் யாரானாலும் ஞானத்தைப் பெறலாம்.

ஞானம் கர்த்தரின் பயத்தோடு ஆரம்பிக்கவும் முடிவுறவும் செய்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது அவருடைய போதனையில் உங்கள் இருதயத்தோடும் மனத்தோடும் ஈடுபடுவதாகும் (நீதிமொழிகள் 15:33). கர்த்தருடன் ஒரு செயல்பாடற்ற உறவை ஞானம் எதிர்க்கிறது. அவரது வழிகளையும் உண்மையையும் தியானிப்பதே ஞானம். ஜெபம் மற்றும் மரியாதையுடன் அவரை ஏன், என்ன, எப்படி ஞானமானது அவரது வழி விஷயங்களில் தொடர்புடையது என்று அவரிடமே கேளுங்கள். கர்த்தரைப் பின்பற்றுபவர்களாகிய நமக்கு கிறிஸ்துவின் மனம் இருக்கிறது. அவருடைய வார்த்தையைப் பற்றி சிந்தித்து, அவருடைய சத்தியத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், ஞானம் நம் அன்றாட வாழ்க்கையில் ஆட்சி செய்யத் தொடங்கும். கர்த்தர் அருளால், பல தெரிவுகள் இருந்தாலும் சிறந்ததை செயல்படுத்த ஞானம் உதவும்.

ஞானம் ஒரு சிக்கலான நிலைமைக்கு எளிய தீர்வுகளை வழங்கும். அடுக்கான செயல் திட்டங்களையும் நோக்கங்களையும் குறைத்து, உண்மையான சிக்கலை எதிர்கொள்ளும் வினோதமான திறனை ஞானம் கொண்டுள்ளது. ஞானம் என்பது பகுத்தறிவு மற்றும் சத்தியத்தின் மடத்தனமான பாதுகாவலர். இது மிகவும் நடைமுறைக்குரிய ஒன்று.

ஞானம் கர்த்தரிடமிருந்து தோன்றி அவரோடு வாழ்கிறது. அவரிடம் வர்த்தக முத்திரையும் காப்புரிமையும் உள்ளது. அதன் செயல்திறனுக்கான புகழை தாம் எடுத்துகொள்ள முயற்சிக்கும் எவரும் அதைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை இழக்க நேரிடும். ஞானத்தோடு மென்மையாக இணைந்த மனத்தாழ்மையே புத்திசாலித்தனமான முடிவெடுப்பிற்கு வழிவகுக்கிறது. ஞானிகளுடன் கேட்டறிய நேரம் செலவிட வேண்டும். இது சொந்தபந்தத்துக்கு வரக்கூடிய ஆபத்தில் இருந்து அல்லது மோசமான நிதி முடிவால் பணத்தை இழப்பதால் வரும் மனவேதனையில் இருந்து உங்களைக் காப்பாற்றக்கூடும். புத்திசாலியாக இரு; கர்த்தர் மற்றும் அவரது வாரியாக வழிகாட்டும் ஞானவான்களுக்கு செவிமடு.

நீங்கள் ஞானம் கொடுக்கத்தக்கதாகவே ஞானம் பெறுகிறீர்கள். ஞானத்தை நன்றாக நிர்வாகிக்கும் யாருடனும் அந்த செல்வத்தை பகிர்ந்தளியுங்கள்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking Daily The Heart Of God - Wisdom

நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், "உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்". வேதம் சொல்லுகிறது, "அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்". சங்கீதம் 119:2

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Wisdom Hunters நிறுவனம் மற்றும் பாய்டு பெய்லி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.wisdomhunters.com/ என்ற இணையதளத்தை அணுகவும்