குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி
"கிறிஸ்தவர்களோடு ஐக்கியம்"
ஊக்கமும், அன்பும், பலமும் மற்ற விசுவாசிகளுக்குக் கொடுப்பது நமது தலையாயக் கடமைகளில் ஒன்று. நாம் ஒருவருக்கொருவர் தேவை. அப்படித்தான் தேவன் வடிவமைத்துள்ளார். எவரும் 'தனியாய்' வேலை செய்வது தேவனுக்கு விருப்பம் கிடையாது.
நமது சொந்த வளர்ச்சிக்கு மற்ற கிறிஸ்தவர்களோடுள்ள உறவைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். நம்மால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஊக்கத்தையும், ஊழியத்தையும் பெற்றுக்கொள்ள அவசியம் உள்ளவர்களைத் தேவன் நம்மிடம் தெய்வாதீனமாக அனுப்பி வைப்பார்.
'அதிக எண்ணிக்கையில் அதிக பலம்' என்கிற கோட்பாடு கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்; சக கிறிஸ்தவர்களோடு கொண்டுள்ள உறுதியான உறவுகள் நாம் தேவனோடு நடக்கும் நடையில் வளர உதவும்.
ஸ்தல திருச்சபைகளைத் தேவன் ஏற்படுத்தியதற்குக் காரணமே நீங்கள் மற்ற விசுவாசிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே. ஈடுபாட்டுடன் கிறிஸ்துவுக்குள்ளான உடன் சகோதரரோடும், சகோதரிகளோடும் உறவுகொண்டு ஆசீர்வாதங்களைக் கொடுத்தும் பெற்றுக்கொண்டும் அதன் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்னும் கூர்மையாவதற்குக் கீழ்க்கண்ட வாசிப்புத்திட்டத்தைப் பின் இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2