குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி
"பிறருக்கு ஊழியம் செய்யுங்கள்"
'ஊழியம்' என்பதன் அர்த்தம், பிறருக்குத் தேவைகள் உள்ள வேளைகளில் அவர்களுக்குதவ ஆயத்தமாயிருப்பதே. நமது நேரத்தையும், திறமைகளையும், ஆதாரங்களையும், உழைப்பையும் செலவழிக்க வேண்டியதாக இருக்கலாம்; ஆனால், தேவன் மீதும், மற்றவர்கள் மீதும் நமக்கிருக்கும் அன்பின் நிமித்தமாக பிறருக்கு உதவுவது வாழ்வின் மிகச் சந்தோஷமான, பலனளிக்கும் தருணங்கள்.
பல வடிவங்களில் இந்தத் தருணங்கள் வரும்; கிறிஸ்தவர்க்கோ அல்லது கிறிஸ்தவரல்லாதோருக்கோ அவர்களது தேவைகளை மையப்படுத்திச் செய்ய வேண்டியதிருக்கும். தனிப்பட்ட முறையிலோ, குழுவில் இணைந்தோ நமது திருச்சபைக்குள் செய்வதற்கே பல சந்தர்ப்பங்கள் உண்டு. மற்றவர்க்குக் கொடுக்க உங்களிடத்தில் விலைமதிப்பற்ற ஏதோ ஒன்று இருக்கும்!
இந்தச் சந்தர்ப்பங்கள், முகமுகமாய்க் கொள்ளும் அறிமுகத்திலோ, இன்னொருவர் தேவையை நாம் உணர்வதிலோ, நம்மிடம் கேட்காமலே நாமாகச் சென்று உதவும் சூழ்நிலைகளிலோ கிடைக்கலாம்.
நீங்கள் பிறரின் தேவைநேரத்தில் அவர்களுக்களிக்கும் பதிற்செயல் - நேரம், ஆதாரம், திறமையைச் செலவழிப்பது, ஓர் ஆறுதல் வார்த்தை சொல்வது, - ஊழியமே. ஆனால், நமது சத்துவத்தின் அளவு தேவனுக்குத் தெரியுமாதலால், நாம் செய்யும் உதவிகளில் உக்கிராணத்துவத்தையும், பொறுப்பையும் உணர்ந்து நமக்கு இயன்றவகையில் மட்டுமே வேலைகளை ஒப்புக்கொள்ளுங்கள்.
நாம் மகிழ்ச்சியோடு உதவி செய்ய வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நம்மிடம் உதவி கேட்டு வருவோரிடம் சிலவேளை 'இயலாது' என்று சொல்ல வேண்டிவரும்; உண்மை என்னவெனில், நமது சக்திக்கு மீறி உதவிகள் செய்யும்போது, சலிப்படைந்து நாம் உதவுவதின் மகிழ்ச்சியை இழந்துவிடுவது தேவனின் சித்தமல்ல.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்னும் கூர்மையாவதற்குக் கீழ்க்கண்ட வாசிப்புத்திட்டத்தைப் பின் இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2