குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!மாதிரி
"வெற்றியுள்ள உறவுகளுக்கான இரகசியம்"
நண்பருடனோ, குடும்பத்தினரோடோ, வாழ்க்கைத் துணையோடோ அல்லது கடவுளோடோ உள்ள உறவு வெற்றிகரமாக விளங்க வேண்டுமானால், இரண்டு அடிப்படை அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்று, அவர்களுக்கிடையில் அன்பும், நேசமும் பகிரப்பட வேண்டும்; இரண்டு, அந்த அன்பு செயலில் காட்டப்படவேண்டும்.
உண்மையான அன்பு செயலில் காட்டப்படும் என்பது உண்மை. உண்மையான நண்பன் மற்றவனை ஒரு தேவையுள்ளவனாய்ப் பார்க்கும்போது, நிச்சயம் உதவி செய்வான். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவுக்கும் இது பொருந்தும். தேவன் மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், அது செயலில் வெளிப்படும்; அந்த அன்பின் வெளிப்பாடாக நம்மைச்சுற்றியுள்ள மற்றவர்களின் வாழ்வை நாம் தொடுவது தேவனுடைய இருதயத்தையும் தொடும்.
மற்றவர்களோடு நாம் கொண்டுள்ள உறவுகள் பலப்படுவது நாம் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தே இருக்கிறது. உண்மையில், மற்றவர்களோடு நாம் கொண்டுள்ள உறவு தேவனோடு கொண்டுள்ள உறவின் நீட்சியாகத்தான் இருக்க வேண்டும் என தேவன் ஆசிக்கிறார்.
விசுவாசிகளாகிய நம்மைப்பொறுத்தவரை, தேவனுடனுள்ள 'செங்குத்தான' உறவு, பிறமனிதரோடு கொண்டுள்ள 'கிடைமட்ட' உறவு இரண்டுமே தேவனுக்கு முக்கியமானவை. - அவரையும் பிறரையும் நேசித்தல்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்னும் கூர்மையாவதற்குக் கீழ்க்கண்ட வாசிப்புத்திட்டத்தைப் பின் இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2