போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி
நான் என்ன பேச வேண்டும் என்று நீர் சித்தாமாயிருக்கிறீரோ அதையே பேசுவேன்
புகை கரடி கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு நினைவூட்டும் ஒரே விஷயம், "நம்மால் மட்டுமே காட்டுத் தீயைத் தடுக்க முடியும்." ஒரு சிறிய தீப்பொறியிலிருந்து ஏற்படும் சேதம் ஒரு அழகான முழுக்காட்டையும் கழிவுகளாக மாற்றி ஒரு முழு சமூகத்தையேஅழிக்கக்கூடும். நம்முடைய சொற்களினால் ஏற்படும் அழிவையும் விவரிக்க வேதாகமம் இதே சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்துகிறது:"அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!" (யாக்கோபு 3:5)
இத்தகைய அழிவுக்கான மற்றும் நன்மைக்கான சாத்தியக்கூறுகள் நம் பேச்சுக்கு இருக்கிறபடியால், நாம் என்ன சொல்ல வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதைக் கூறுவது மிக முக்கியம், நம் கலாச்சாரத்தின் மதிப்புகளை மட்டும் வெளிக்காட்டுவதாக நம் பேச்சு இருக்கக்கூடாது. வெறுப்பு, பொறாமை, கண்டனம் மற்றும் கோபத்தால் வகைப்படுத்தப்பட்ட பேச்சால் நம் உலகம் நிறைந்துள்ளது. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" என்று ஒரு கொள்கையை இயேசு கொடுத்தார். நம்மால் உண்மையைத் தவிர்க்க முடியாது; நம் பேச்சானது நமக்குள் ஆழமாக இருப்பதை வெளிப்படுத்தும்.
இயேசுவை நாம் பின்பற்றுவதால் ஒவ்வொரு நாளும் நாம் பேசும் பேச்சானது, எவ்வாறு மாறுபடுகிறது? அவரே வார்த்தையாக விளக்கப்பட்டுள்ளார் பின்னும் "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;" என்றும் விவரிக்கப்படுகிறார் (யோவான் 1:14). இயேசுவானவரே தேனின் படைப்புக்கிடையேயான இறுதி தொடர்பு. "கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்தது" என்று நமக்குக் கூறப்படுகிறது. அவர் நம்மில் இருக்கும் போது, கிருபையுடனும் உண்மையுடனும் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். இயேசுவினுடனான வாழ்க்கை அன்பான மற்றும் கிருபையான வார்த்தைகளால் மட்டுமல்ல, தன்னைப் பற்றியும் அவரைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் உண்மையை பிரதிபலிக்கும் நேர்மையான வார்த்தைகளால் நிரம்பி இருக்கும்.
அப்போஸ்தலர் 1: 8 ல், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். அவருடைய கட்டுப்பாட்டிற்கு நாம் கீழ்ப்படியும்போது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல விரும்புவோம். சிலரின் பயங்களைப் போல, நாம் மற்றவர்களுக்கு அருவருப்பானவர்களாகவோ அல்லது கீழ்த்தரமானவர்களாகவோ இருப்போம் என்று அர்த்தமல்ல. உண்மை, இதற்கு நேர்மாறானது: நாம் தயவுள்ளவர்களாக இரக்கமுள்ளவர்களாக இருப்போம், இயேசு யார் என்பதையும் அவர் நம் வாழ்வில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதையும் மக்களுக்குச் சொல்லுகிறவர்களாகவும் இருப்போம்.
ஆனால், தேவன் என்ன சொல்ல விரும்புகிறார் என்று சொல்வது இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது மட்டுமல்ல. இயேசு விரும்பும் விதத்தில் மற்றவர்களுடன் பேசுவதற்கு நம் வார்த்தைகளை பயன்படுத்துவதையும் உள்ளடக்கும்: அதாவது கருணை மற்றும் மன்னிப்பை வெளிப்படுத்துதல், மற்றவர்கள் அவர்கள் யார் என்பதையும் அவர்கள் சிறப்பாகச் செய்கிற காரியங்களையும் அவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்தல் போன்றவை. அவ்வாறு செய்யும்போது, நாம் அவர்களை ஆசீர்வதித்து அவர்களின் ஆன்மீக பயணத்தில் அவர்களை ஊக்குவிக்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒருவரிடம் நீங்கள் பேச வேண்டிய விதத்தை மாற்ற வேண்டுமா? குறைந்தபட்சம் ஒரு நபரைப் பற்றி யோசித்துப் பாருங்கள், அடுத்த முறை நீங்கள் அவர்களுடன் பேசும் போது அவர்களிடம் எப்படி வித்தியாசமாகப் பேசுவீர்கள்.
இன்று தேவன் உங்கள் மூலம் என்ன சொல்ல சித்தமாயிருக்கிறாரோ அதையே பேசுவீர்களா?
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். "போ செய் சொல் கொடு" என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள்
More