போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

7 ல் 2 நாள்

பரிசுத்த ஆவியின் வல்லமையில்

உங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட பயணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், ஆனால் அந்த பயணத்தில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். பேச யாரும் இல்லை, உங்களுக்கு உதவ யாரும் இல்லை, உங்களுடன் அதை அனுபவிக்க யாரும் இல்லை. இது ஒரு சோகமான மற்றும் நம்பமுடியாத கடினமான பயணமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இது போலவே பல கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட வல்லமையையும் ஆறுதலையும் அனுபவிக்காமல் இந்த வழியில் வாழ்கின்றனர். எல்லா நடைமுறை நோக்கங்களுக்காகவும், இயேசு அவர்களுடன் இல்லை என்பது போல பலர் தங்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இதன் விளைவாக, நாம் நிறைய சுய முயற்சியுடன் நமது பயணத்தை பயணிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய அர்ப்பணிப்பு சுழற்சிகள் மற்றும் இயேசுவைப் போல இருக்க கடினமாக உழைத்தது எல்லாம் ஊக்கமிண்மையில் முடிகிறது. இந்த வழியில் வாழும் தேவனிடம் சரணடைந்த ஒரு வாழ்க்கையானது, விரக்திக்கும் தோல்விக்கும் விழுந்த வாழ்க்கை போல உணரப்படும்.

யோவான் 13-17-ல், தம்முடைய சீஷர்களுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மூன்று வருடங்கள் கழித்த பின், இயேசு தம்முடைய இருப்பு இல்லாமல் அவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்துகிறார் - இதுதான் இன்று நாம் அவரைப் பின்பற்றுபவர்களாக அனுபவிக்கிறோம். அவர் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அவர்களிடம் பலமுறை பேசுகிறார். ஆவியானவர் ஜீவனுள்ளவர், அவர் என்றென்றும் நம்மோடு இருப்பார். மேலும் இயேசு பரிசுத்த ஆவியானவரை சத்திய ஆவியானவர், உதவியாளர், இயேசுவைப் பற்றிப் பேசுபவர், பாவத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துபவர், அவர்களை சத்தியத்திற்கு நேராய் வழிநடத்துபவர் என்றும் அழைக்கிறார்.

யோவான் 15-ல், திராட்சைக் கொடி மற்றும் கிளைகளின் மூலம் இயேசு இதை விளக்குகிறார். அவருடனான இந்த தினசரி தொடர்பை அவர் "நிலைத்திருத்தல்" என்று அழைக்கிறார். அவர் கொடியே, நாம் கிளைகள். அவருடன் நாம் நிலைத்திருக்க வேண்டுமானால் நமது பாவத்தை ஒப்புக்கொண்டு, அவருடனும் அவரது வாழ்க்கை மற்றும் சக்தியுடனும் மீண்டும் இணையலாம். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிப்பதால் இது சாத்தியமாகும். திராட்சைக் கொடியின் கிளைகள் வழியாகப் ஜீவன் பாய்வது போல, அவருடன் நாம் இணைந்திருக்கும்போது அவருடைய ஜீவன் நம் வாழ்க்கைக்குள்ளும் பாய்கிறது. நமது பயணத்தில் நாம் தனியாக இல்லை.

பரிசுத்த ஆவியின் வல்லமை நம் தன்மையை மாற்ற நம் மூலமாக செயல்படுகிறது. கிளைகளைப் போலவே, திராட்சைக் கொடியான இயேசுவோடு நாம் இணைந்திருக்கும்போது, ​​இயேசுவின் வாழ்க்கைக்கு ஏற்ப வெளிப்புற பலனை நம் வாழ்விலும் தருவோம். நாம் நிலைத்திருப்பதில் கவனம் செலுத்தும் போது, கிறிஸ்தவ குணத்தின் பலனைத் தரத் தொடங்குகிறோம். வெளிப்புறப் பழங்களைத் தயாரிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்தும்போது நாம் விரக்தியடைவோம்.

முதிர்ச்சி என்றும் அழைக்கப்படும் நிறைய பழங்களை தரிக்கும் தருவாய்க்கு நேரம் எடுக்கும்.பயணத்தில் உங்களிடமும் மற்றவர்களிடமும் பொறுமையாக இருங்கள் - பலன் கொடுப்பீர்கள்.

இன்று உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் நிரப்ப ஆவியின் சக்தியை விசுவாசத்தினால் பெறுவீர்களா?

இப்போதே சில தருணங்களை எடுத்து, உங்கள் வாழ்வில் தெரிந்த எந்த பாவத்தையும் ஒப்புக்கொள்ளுங்கள்; இயேசுவை அவருடைய ஆவியால் உங்களுடைய புதிய வாழ்வில் வெள்ளம் போல் வரச் சொல்லுங்கள்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். "போ செய் சொல் கொடு" என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள்

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Cruக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://keithbubalo.com ஐ பார்வையிடுங்கள்