போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி
தேவனாகிய இயேசு கிறிஸ்துவே உம்மிடம் சரணடைகிறேன்
சரணடைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வார்த்தை. சரணடைவது என்பது தோற்பதை போன்று தோன்றுகிறது. ஆனால் ஒருவரும் தோற்பதை விரும்புவதில்லை. ஆச்சரியமே இல்லை தேவனிடத்தில் சரண் அடைவது மிகவும் கடினமானது. நம்முடைய மனித சுபாவம் நம்மை தேவனிடத்தில் சரணடைவது நமக்கு சாதகமாக இருக்காது என்று நமக்கு சொல்கிறது. ஒருவேளை அவர் ஆளுமையோடு இருக்கலாம் அல்லது நாம் நமக்கு என்ன தேவை என்பதில் நாம் நம்முடைய கட்டுப்பாட்டை இழந்து விடலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்துவிடம் சரணடைவது என்பது நம்முடைய சிறந்த முடிவாகும்.
இயேசு கிறிஸ்துவிடம் தேவன் எல்லா படைப்பின் மேலும் முழுமையான மற்றும் மென்மையான அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். முழங்கால் படி இடுவது என்பது அற்பணிப்பு மற்றும் நன்றியோடு இருப்பதன் ஒரு குறியாகும். இதுவே இப்பிரபஞ்சத்தை படைத்த சர்வ வல்லமை உடையவருக்கு நாம் செய்யத் தகும் செயலாகும். இதை நாம் ஒரு ராஜா ராணி மற்றும் பிரஜைகளுக்கு இடையேயான உறவில் காணலாம். ஆனால் இயேசுகிறிஸ்து நம்முடைய ராஜாவாக இருந்து நம்மை பரிபூரண அன்பில் நடத்துகிறார். மற்றும் நம்முடைய வாழ்க்கையில், கடினமான மற்றும் வேதனைக்குரிய சூழ்நிலைகளிலும் கூட இந்தத் திட்டம் மற்றும் அதன் நோக்கம் எப்பொழுதும் நன்மை பயக்க கூடியதாய் இருக்கும்.
தேவன் நம்மை படைத்தார், பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மற்றும் தண்டனையிலிருந்து நம்மை விடுதலை ஆக்கினார். அவர் நமக்கு விடுதலையான ஒரு வாழ்க்கையும் கனி கொடுக்கிற வாழ்க்கையையும் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். அவரிடத்தில் நம்மை சரண் அடைவது நமக்கு என்ன கொண்டு வருமோ என்று பயத்தில் முடங்கி இருப்பதற்குரிய காரணம் ஒன்றும் நம்மிடத்தில் இல்லை. நம் வாழ்க்கையை சோகத்திற்கு உள் ஆக்குவதில் அவருக்கு எந்த விருப்பமும் கிடையாது, ஆனால் அன்பில் அவருடைய ராஜ்யத்தை நாம் உணர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இயேசு கிறிஸ்துவை முழுமனதோடு பின்பற்றுவதற்கு நாம் அவரிடத்தில் சரணடைவது அவசியமாயிருக்கிறது. நாம் நம்முடைய சொந்த விருப்பத்தின்படி வாழ்ந்து கொண்டு அதேநேரத்தில் அவரைப் பின்பற்றுவது இயலாத காரியம். இரண்டையுமே செய்ய வேண்டுமென்று நினைப்பது நமக்கு மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கும். அவர் நம்மை எங்கே நடத்த போகிறார் என்று நமக்கு தெரியாது ஆனால் அவர் நல்லவர் என்றும் நம்பிக்கைக்குரியவர் என்று நாம் அறிவோம். அவர் நம்மை ஏற்கனவே தயார் படுத்தப்பட்ட நல்ல செயல்களை செய்யும் படி படைத்துள்ளார்.
இந்த தருணம் நாம் நம்மை சிரம் தாழ்த்தி நம் வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு போவதற்காக அவர் நம்மை வழிநடத்தும் படி நம்முடைய வாழ்க்கையை அவரிடத்தில் கொடுக்கும் நேரம்.
அடுத்த ஆறு நாட்களில், தேவனிடத்தில் சரண் அடைவதற்கான தின ஜெபத்தில் ஒவ்வொரு வாக்கியமாக நாம் ஆராய்ந்து பார்க்க போகிறோம். அது தேவன் உடனான உங்களுடைய பயணத்தை பெரிதளவில் மாற்றப் போகிறது.
தேவனாகிய இயேசு கிறிஸ்துவே நான் உம்மிடத்தில் சரணடைகிறேன்.
உம்முடைய ஆவியின் வல்லமையினால்.…
நீர் எங்கே நான் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீரோ அங்கே செல்ல,
என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீரோ அதை செய்ய,
என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீரோ அதை சொல்ல, மற்றும்
எதைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீரோ அதை கொடுக்க,
உம்முடைய கணம் மற்றும் மகிமைக்காக. ஆமென்.
முழங்கால் படியிட்டு தேவனாகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய ரட்சகர் மற்றும் தேவன் என்று ஏற்றுக்கொண்டு சரணடைவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? ஏதாவது உங்களை தடுக்கும் ஆனால் அதை அவரிடத்தில் ஜெபத்தில் தெரியப்படுத்துங்கள், இல்லாவிட்டால், உங்களுக்கு கடினமான காரியத்தை ஒரு கடிதமாக எழுதி தெரியப்படுத்துங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். "போ செய் சொல் கொடு" என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள்
More