பயத்தை நீக்குங்கள்மாதிரி

Get Rid Of Fear

3 ல் 2 நாள்

உங்கள் எண்ணங்களை பயம் உட்கொள்ள ஆரம்பித்து உங்களை விடாமல் துரத்தும்போது என்ன செய்வீர்கள்? 

பயத்திற்கும் பதற்றத்திறகும் சிறந்த மருந்து ஜெபம் என வசனம் சொல்கிறது. ஜெபத்தில் என்னவெல்லாம் இருக்கிறது ஜெபம் உங்கள் பயத்திற்கு என்ன செய்யக்கூடும் என்பதைக்காண, பிலிப்பியர் 4:6-7 வசனங்களை வாசியுங்கள் 6ம் வசனம் சொல்கிறது, “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்."

பயம் உங்களை பற்றி பிடிக்கும்போது, அதை தேவ சத்தியத்தால் எதிர்கொள்ளுங்கள். தேவன் சொல்லுகிறார் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள் ஏனெனில் எது அல்லது யார் உங்கள் எண்ணத்தை ஆளுகிறார்களோ, அவர்கள் உங்களையும் ஆளுகிறார்கள். தேவன் நீங்கள் பயத்தில் கவனத்தை செலுத்துவதை பயம் உங்களை ஆளுவதை தேவன் விரும்பவில்லை. அதைவிட, நீங்கள் தேவன் மேல் கவனத்தை செலுத்த வேண்டும் என விரும்புகிறார் அவருடைய வார்த்தையும் ஆவியும் உங்களை ஆளுகை செய்ய நீங்கள் இடமளிக்க வேண்டும் என விரும்புகிறார். எனவே தான் உங்கள் ஜெபம் மிக முக்கியமானது. இந்த சூத்திரம் மிக எளிமையானது. எதற்கும் பயப்படாதேயுங்கள், ஆனால் எல்லாவற்றிற்காகவும் ஜெபியுங்கள்.

பிலிப்பியர் 4:6ல் ஜெபம் என்ற பொதுவான வார்த்தையை பயன்படுத்தினாலும் குறிப்பாக "வேண்டுதல்" என்ற வார்த்தையும் பயன்படுத்தபட்டிருக்கிறது, அது ஒரு குறிப்பிட்ட தேவைக்கான பதிலை கேட்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை. அது பொதுவான ஜெபமோ அல்லது குறிப்பிட்ட வேண்டுதலோ, அடிப்படையில் நீங்கள் எல்லாவற்றிற்காகவும் ஜெபிக்க வேண்டும். என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு பயம் உள்ளத்திற்குள் உறுத்திக் கொண்டே இருந்தால், தேவனிடம் அதை தெரிவியுங்கள்—அது என்னவென்று அவர் அறிவார். அல்லது உங்கள் மனதில் தெளிவாக இது தான் என காரணமறிந்த பயமாக இருந்தாலும், அதையும் அவரிடம் கூறுங்கள். உங்கள் பயங்களை நீக்கி அங்கே தேவ சத்தியத்தை நிரப்ப கர்த்தரிடம் கேளுங்கள், பின்பு அப்படி அவர் செய்ததற்காக விசுவாசத்தில் நன்றி செலுத்துங்கள்.

கிருபையுள்ள கர்த்தாவே, ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகள் விற்கப்படுகிறதல்லவா? அவைகளுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். என் தலைமயிர் எல்லாம் உம்மால் எண்ணப்பட்டிருக்கிறதே. நீர் என்னை எவ்வளவாய் அறிந்திருக்கிறீர் எவ்வளவு நேசிக்கிறீர் என்பதை நான் அறிந்து கொள்ள எனக்கு கிருபை செய்தருளும். நான் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று எனக்கு நினைவுபடுத்தும், ஏனெனில் எல்லாம் உம் ஆளுகையின் கீழ் உள்ளது, நீர் என்னை மறப்பதில்லை கைவிடுவதில்லை என வாக்குரைத்துள்ளீர். எனக்கு சமாதானமளிக்கும் உம் வாக்குத்தத்தங்களுக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Get Rid Of Fear

நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் போது நீங்கள் விரும்பிய மகிழ்ச்சி நிறைந்த சமாதானம் நிறைந்த வாழ்வைக் கண்டடையலாம் 

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஹார்வஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: http://go.tonyevans.org/addiction க்கு செல்லவும்