பயத்தை நீக்குங்கள்மாதிரி
கடும் புயலினூடாக விமானத்தில் பயணித்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில் சிறிது கட்டுப்பாட்டை இழந்தது போல இருக்கும் நாமும் சிறிது பதற்றப்பட்டிருக்கலாம். இருக்கை பட்டையை ஏற்கனவே அணிந்திருந்தால், நீங்கள் அதை கூட கொஞ்சம் இறுக்கம் செய்திருப்பீர்கள். கைத்தாங்கலைச் சிறிது இறுக்கமாக பிடித்திருப்பீர்கள். தற்போது காற்றில் அந்தரத்தில் இருப்பதால் சற்று அமைதியற்ற இருப்பீர்கள். புயலில் அலைப்புறுவதால் உங்கள் புத்தகத்தை மறுபடி மறுபடி வாசிப்பீர்கள்.
பிற்பாடு விமானி இவ்வாறாக அறிவிப்பு வெளியிட்டிருப்பார்: “நாம் புயலை எதிர்கொண்டுள்ளோம், எனவே உயரத்தை மாற்றி சுமூகமான பாதையில் செல்ல முயற்சிக்கிறோம்.” இப்போதும், உங்கள் பிரச்சனை மறையவில்லை. புயல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீங்கள் பெருமூச்சு விட்டு, இளைப்பாறி, புத்தக வாசிப்பிற்கு திரும்புவீர்கள் இயல்பாக நிம்மதியாக உணர்வீர்கள் ஏனெனில் புயலை கவனத்தை செலுத்தாமல் விமானியின் அறிவிப்பில் நம்பிக்கை கொள்வதால்.
உங்கள் பயத்தில் இருந்து கவனத்தை தேவன் பக்கமாக—நம் வாழ்வை நிச்சயத்தோடு வழிநடத்துகிற விமானியின் பக்கமாக திருப்பும்போது —உங்கள் பயம் குறைவதை உணர்வீர்கள்.
கிருபையுள்ள கர்த்தாவே, நான் பயப்படும் வேளையில், உம்மீது என் நம்பிக்கையை வைக்க விரும்பகிறேன். அதைச் செய்ய எனக்குத் தேவையான—எண்ணங்கள்,வசனங்கள், ஊக்கம் எல்லாவற்றையும் தருவீரா? நீர் குழப்பத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்தின் தேவனாயிருக்கிறீர். நான் சமாதானக் குறைவை உணரும்போது, உம்மை விட்டு தூரம் போனேன். உம்மிலும், உம் வார்த்தையிலும் நிலைத்திருக்க உதவும், அப்போது உம் சமாதானத்தை உணர்வேன். இயேசுவின் நிலத்தில், ஆமேன்.
இந்த வாசிப்புத் திட்டமும் ஜெபமும் பிடித்திருந்ததா? இதே தலைப்பில் ஆழமாக கற்றுக்கொள்ள டோனி இவான்ஸ் அவர்களின் தரவிறக்கம் செய்யக்கூடிய 3 mp3 செய்திகளை பரிசளித்து உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் போது நீங்கள் விரும்பிய மகிழ்ச்சி நிறைந்த சமாதானம் நிறைந்த வாழ்வைக் கண்டடையலாம்
More