கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல்மாதிரி
அச்சமின்றி இருப்பது எப்படி (உங்கள் வலியின் மத்தியில்)
நமக்குள் வாசம் செய்யும் ஆவியானவரிடமிருந்து, நாங்கள் கேட்ட செய்தி இதுதான்:
நீ கேட்ட கடினமான வார்த்தைகள், அதன் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதைக் கேட்டவுடன் உனது மனம் காயப்பட்டு அழுத்தைப் பார்த்தேன். உனது இதயத்தை மென்மையானதாகப் படைத்தேன். அது கடினமான வார்த்தைகளைக் கேட்டால் காயப்பட்டு வலியால் துடிக்கும். அதுவே அதன் இயல்பு. அது உன் இதயம் மரத்துப்போகவில்லை என்பதைக் காண்பிக்கிறது; நீ என்னை உனது இதயத்திற்கு உள்ளே அனுமதியளித்தாய் என்பதைக் காண்பிக்கிறது; நீ உனது இதயத்தில் நான் தங்க இடம் கொடுத்தாய் என்பதைக் காண்பிக்கிறது.
நான் உனக்குள்ளாக வசிக்கட்டும்.
ஆனால் அந்த வலிக்கு என்ன செய்வது? இதே நிலை திரும்பத் திரும்ப நிகழும் போது அதை எப்படிக் கையாள்வது? எதுவுமே சரியாகவில்லை என உணரும்போது என்ன செய்வது? நீ இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டதை போல உணர்கிறாய், சூழ்நிலை மாறுவது போலவும் தெரியவில்லை, இப்பொழுது என்ன செய்வது? நான் எப்படித் தொடர்ந்து இதைச் சமாளிப்பது எனத் தவிக்கிறாயா? ஜெபி, மன்றாடு.
நீ விரக்தியின் விளிம்பில் இருப்பது எனக்குப் புரிகிறது. இந்த சூழ்நிலை சரியாக வேண்டும் என விரும்புகிறாய் - நீ என்னிடம் வந்தது மிக நல்ல விஷயம். எனது உதவியைக் கேட்பது நல்லது. எனது குழந்தையே, கொஞ்சம் கவணி, உனக்கு வலி ஏற்படும் போதெல்லாம், என் கரத்தை உறுதியாகப் பிடித்துக் கொள். எந்த வழியில் முன் செல்வது எனத் தெரியாத சூழலில், நினைவில் கொள், கர்த்தருக்குக் காத்திரு. அறியாத வழியில் சென்று மூழ்கத் தேவையில்லை.
திரும்பு. எனது குழந்தையே, என்னை நோக்கித் திரும்பு. நான் இங்கே இருக்கிறேன்.
திரும்பு. எனது குழந்தையே, என்னை நோக்கித் திரும்பு. நான் இங்கே இருக்கிறேன்.
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். அந்த பேரன்புதான், உனது கண்கள் என் மீது வைத்திருக்க உனக்கு உதவும். இங்கே எந்தவொரு சிக்கலுக்கும் எளிதான தீர்வு இருக்காது. உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? சூழ்நிலைகள் சடாரென மாறிவிடப் போவதில்லை. அது உண்மையில் நல்லதுதான்.
இதுஉனக்குஏற்புடையதா
உனது மனம் காயப்பட்டு இருப்பதற்காக, நான் வருந்துகிறேன். ஆனால், நான் உன் இதயத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நான்உனது இதயத்தைக் கவனித்துக் கொள்ளட்டும். உனது இதயத்தை என்னிடம் தா. அந்த நபருடனான பிரச்சனையின் தீர்வைக் குறித்துக் கவலைப்படாமல், அடுத்த சண்டை வரும்போது, அதை எப்படி எதிர் கொள்வது என்பதில் கவனம் செலுத்தவும். அந்த நபருடன் மீண்டும் பேசுவதற்கு முன்னர், எப்போதும் என்னைக் கவனிக்கப் பழகவும். பின்னர் அல்ல, இப்போதே அதைப் பயிற்சி செய். அடுத்த முறை, அந்த நபருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் யோசிக்கும் போது, நான் சொல்வதைக் கேட்டுப் பழகிக் கொள். நீ மீண்டும் மோதல் எதிர் கொள்ளும் தருணங்களில், அதைக் கடைப்பிடி. நான் உன்னோடு இருக்கிறேன். தூய ஆவியானவர் உனக்குள்ளே இருக்கிறார்.
நான் உன்னை நேசிக்கிறேன். அச்சமற்ற விசுவாசியே.
பயிற்சி
நாம் எப்படித் தொடர்ந்து செல்வது? மனதில் வலியுடன்? ஒரு விவாதம், மிகப் பெரும் சண்டையாக உருவெடுக்கும் போது... நம்மை ஒருவர் பேசிக் காயப்படுத்தும் போது...நாம் சொல்லாத ஒன்றை, சொன்னதாகக் கூறும்போது...அல்லது வாய் தவறிப் பேசி அதற்காக வருத்தப்படும்போது... கடுமையான வார்த்தைகளினால் மணம் ரணமாகித் தவிக்கும்போது....மன்னிக்க மனம் மறுத்துப் போராடும்போது....நம் அல்லது பிறர் தவறுகளால் வாதிக்கப்படும்போது....
நாம் அடுத்து என்ன செய்வது என்று எப்படித் தெரியும்...என்ன சொல்வது
நாம் விரக்தியும், எரிச்சலுடன் இருக்கும்போது, எப்படி உறவைப் பேணுவது - எப்படி அவர்களை நேசிக்கும் வழிகளைக் கண்டறிவது - நாம் மன உளைச்சலில் இருக்கும் போது.... சோர்ந்து தவிக்கும்போது.... அடுத்து என்ன நடக்குமோ, எனும் அச்சத்தில் இருக்கும்போது...
இவை நல்ல கேள்விகள்...முக்கியமானதும் கூட. ஆனால் மிகப் பெரிய கேள்வி இதுதான்: நம் இதயம் உணர்வற்றுப் போகாது பாதுகாப்பது எப்படி? ஏனெனில், நாம் தப்பிப் பிழைக்க, சூழ்நிலைகளை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நம் மனம் காயப்படாமல் பாதுகாத்திட, கர்த்தரிடம் இருந்து நமது உணர்வுகள மறைப்பது எளிதானது.
ஆனால், இப்போது தான் அவரது தேவை மிக மதிப்புமிக்கது, அத்தியாவசியமானதும் ஆகும்.
இப்போதே, கர்த்தரிடம் திரும்புவோம். அவரது நற்குணம், வல்லமை, திறன், நம்மீதான பேரன்பு, அவரது விருப்பம் ஆகியவற்றை முழுமையாக நம்புவோம். நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மைக் காயப்படுத்தியவர்களுக்காக ஜெபிப்போம். நம்மைப் பாதுகாப்பதற்கு அல்ல, கர்த்தர் அவர்களைப் பாதுகாக்க மன்றாடுவோம். இந்த சூழலை அவரது கரங்களில் ஒப்படைப்போம். முழுமையாக அர்ப்பணிப்போம் - நமது காயங்கள், வலி, விரக்தி, குழப்பம், சோர்வு, அனைத்து வேதனைகளையும்.
அவரது கரத்தில் கொடுத்து விடுங்கள். காத்திருங்கள். அவருடைய பதிலுக்காக்க் காத்திருங்கள். இயேசு என்ன செய்கிறார் என்பதைக் கவனமாகப் பாருங்கள். ஏனெனில் அவர் பதிலுக்காகவே நாம் காத்திருக்கிறோம். இப்போது அதுவே நமது தேவை.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை முழுமையாக நம்புகிறேன். இந்த வலி மிகுந்த சூழலைச் சமாளிக்க உம்மால் தான் கூடும். நீர் அன்புள்ளவர். நீர் ஞானமுள்ளவர். நீர் நல்லவர். நீர் என்னை நேசிக்கிறவர். நான் என்னை அறிந்ததைவிட, நீர் என்னை நன்கு அறிந்தவர். நீர் எனக்குச் சிறந்ததை அளிக்க விரும்புபவர். எனவே, நான் உம்மை நம்புகிறேன். உமது தீர்வுகளை ஏற்றுக் கொள்கிறேன். உமது வழிகளை நம்புகிறேன். நான் இப்போது அதைக் கேட்கிறேன். ஆகவே, உம்மை நான் காண உதவுங்கள். உமது வழிகளைப் பார்க்க எனக்கு உதவுங்கள். எனது மனம் உமக்கு எப்போதும் திறந்திருக்க அருள் புரியுங்கள்...
ரஷ் பாட்கஸ்ட் கேட்டு அனுபவிக்கவும் - நவீன வாழ்வில் தூய ஆவியானவரை சந்தித்தல்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே - அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், நமது எவ்விதமான போராட்டத்தின் சக்தியைவிட, அவர் வல்லமை மிக்கவர். நீங்கள் இந்த நான்கு - நாட்கள் தியானத் திட்டத்தில் இணைவதன் வழியாக, கர்த்தருடன் உறவாடுவது, அவரது சப்தத்தை, பிரசன்னத்தை உணர்வது எங்கனம் எனக் கற்றுக் கொள்ளலாம் - இத்தகைய அனுபவத்தைக் கண்டடைந்த சகோதர, சகோதரிகளுடன் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்.| நவீன வாழ்வியலில் தூயாவியானவர்.
More