கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல்மாதிரி

Recognizing God's Voice // Learn to Encounter Him

4 ல் 3 நாள்

கற்பனையில் ஓர் ஆழ்ந்த பயணம்

நமக்குள் வசிக்கும் தூய ஆவியானவர், உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்.

நான் உன்னிடம் வருவது தாமதமாக இருக்கப் போவதில்லை. அது மென்மையாகவும் இருக்காது - நிச்சயமாக, நீ எதிர்பார்க்கும் விதத்திலும் இருக்கப் போவதில்லை. கொஞ்சம் கவணி, என்னைக் குறித்துச் சொல்வதற்கு ஏராளமான காரியங்கள் உள்ளன, அவற்றை உனக்கு நான் காண்பிக்க விரும்புகிறேன். நான் உன்னை அழைத்துச் செல்ல விரும்பும் இடம் மிக ஆழமானது. நான் உனக்கு வெளிப்படுத்திக் காண்பிக்க விரும்பும் சில விஷயங்கள் உள்ளன - ஆனால், நீ பார்க்க வேண்டும் என நான் காண்பிக்க விரும்புபவற்றை, உனது அகக் கண்களால் பார்க்க முடியாது. நீ அனுமதித்தால், உனது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, அதை வெளிப்படுத்துவேன்.

நினைவில் கொள். முதலாவது நான் வெளிச்சத்தைப் படைக்கவில்லை, உன்னையே படைத்தேன். எனவே, இருளை கற்பனை செய்து பார், பின்னர் ஒளியைக் கற்பனை செய்... நீ இந்த உடல் வடிவத்தைப் பெறுவதற்கு முன்பாகவும் இருந்தாய். நான் உனக்குக் காண்பிக்க விரும்புவது; இருந்தது. இப்போதும் இருக்கிறது - அது எப்போதும் இருக்கும் - என்றாலும், அதன் உருவம் எப்படிப் பட்டதென்று இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த உலகப் பொருட்களை உனது உடலால், மனதால், உணர்வால் உன்னால் பார்க்க, தொட, அதை அனுபவிக்க முடியும். அது போல நான் உனக்கு அளிக்கும் எனது வெளிப்பாடுகளையும், உன்னால் மனதில் பார்க்க, அதன் வாசனையை நுகர, ருசித்து அனுபவிக்க முடியும். அந்த அனுபவங்களே, நான் யார் என்பதை இன்னும் அதிகமாக உனக்கு வெளிப்படுத்தும்.

ஆம். நீ என்னைக் குறித்து வாசிக்கலாம். உனது மனதில் எனது மெல்லிய குரலைக் கேட்க முடியும். ஆம், உனக்குக் கொடுக்கப்படும் ஞானத்தைப் பின்பற்றி ஜெபிக்கவும், சரியான பதிலை அளிக்கவும் உன்னால் முடியும். அந்த ஞானம் உனக்கு வேண்டுமாஇன்னும் அதிகமாக? நீ இதுவரை கற்பனை கூடச் செய்து பார்க்காததைக் காண விரும்புகிறாயா? நான் உனது மனதில் என்னை ஊற்ற விரும்புகிறாயா? அதன் வழியாகபுதியதொரு அனுபவம்இதுவரை நீ கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காதது அது? அதை நீ காண்பதற்கு உதவ விரும்புகிறேன்.ஆம், உதவிடநீ கற்பனை செய்ய ஆயத்தமா?

என் அன்பே, உனது விழிகளை மூடுவாயாக. நான் உன்னை அமைதிப்படுத்தட்டும். இதோ போகிறோம்.... இன்னும் ஆழ்ந்து. உன்னை இன்னும் ஆழமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். இதோ எனது கரம். அதை உணர முடிகிறதா? அதை நீ உணர்ந்து கொள்ள உதவுகிறேன். இப்போது பார். உனது கண்களால் அல்ல, இதயத்திலிருந்து. உனது மனதால் பார். உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவி செய்பவை வழியாக, உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இனி உனக்கில்லை. நான் ஓர் புதிய முன்னுதாரணம். என்னைக் குறித்த உனது நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், இவற்றை உடைத்து இன்னும் அகலமாக ஆக்குகிறேன்.

நான் நல்லவன் என நம்புகிறாயா? நான் எப்படிப் பட்டவன் என்பதை உனக்குக் காட்டுகிறேன். நான் வலிமை வாய்ந்தவன் என நீ நம்புகிறாயா? என்னால் என்ன செய்ய முடியும் எனக் கொஞ்சம் காட்டுகிறேன். நான் உனதருகில் இருந்து உன்னைக் குணப்படுத்துவேன் என நம்புகிறாய், எனது கரத்தில் ஏந்தி நிற்கும் சந்திரர்களை, நட்சத்திர திரள்களை, பிரபஞ்சங்களை உன்னால் எண்ணிப் பார்க்க இயலுமா? நான் உன்னை ஒரு சாகச நிகழ்வுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நாம் இருவர் மட்டுமே. நீ என்னை நம்ப வேண்டும். எந்த அவநம்பிக்கையையும், சந்தேகமும் கூடாது. உனது கண்களை மூடவும்.... இல்லை, வேண்டாம்... உனது கண்கள் திறந்திருந்தாலும் என்னால் செயலாற்ற முடியும்... வா, நாம் போகலாம்.

பயிற்சி

எனது நண்பரே, இப்போது ஒரு சாகச நிகழ்விற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.

உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

தூய ஆவியானவர், உங்கள் மனதில் ஊற்றப்படவேண்டும் என விரும்புகிறீர்களா, அதன் வழியாக நீங்கள் இதுவரை கற்பனை செய்திராத ஒரு புதிய அனுபவத்தை அடைய விரும்புகிறீர்களா? இதுவரை உங்கள் கண்களால் பார்க்காத முடியாத, கற்பனைக்கு அப்பாற்பட்டதைப் பார்ப்பதற்கு, அவர் உங்களுக்கு உதவ வேண்டுமா?

இது நிகழ வேண்டும் எனில், உங்களது மனதையும், இதயத்தையும் திறந்துதர நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் அனுபவித்திராத்தைப் பார்க்கவும், கேட்கவும், அனுபவிக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்... தூய ஆவியானவர், உங்களது மனதைத் திறப்பதற்கு அனுமதிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதிக அன்பு, அதிக ஆச்சரியம், அதிக அழகு, அதிக மகிழ்ச்சி, அதிக அமைதி, இன்னும் அதிக அதிகமாக?

நம் ஒவ்வொருவருக்கும் கொடுப்பதற்கு அவரிடம் ஏராளமாக இருக்கிறது... அதிகமாகக் கேட்பதற்கு, அறிந்து கொள்ள, அனுபவிக்க, அன்பு செலுத்த... நாம் அதைச் சுவைத்து இருக்கிறோம். சிறு துளியளவு பாரத்து வியந்திருக்கிறோம்... அவரது மகிமையை, அவரது அழகை, அவரது அன்பை இந்த உலக வாழ்வில். ஆனால் நமது அனுபவங்கள் வரையறைக்கு உட்பட்டது. நமது ஞானம் எல்லைக்கு உட்பட்டது. ஆயினும், நமது கர்த்தரது, வல்லமை, அன்பு, படைப்பாற்றல் வரையறைக்கு அடங்காதது. இந்த தருணத்தில் கர்த்தர் நம்மிடம் கேட்கிறார்; நமது கற்பனைத் திறனை அவரிடம் ஒப்படைக்க ஆயத்தமா?... இப்போதே அவர் யார் என்பதை நம் வாழ்வில் அனுபவிக்க விரும்பினால், இன்றிலிருந்து, இந்தக் கணத்திலிருந்து!

தூய ஆவியானவரே, நீர் எனது கண்களாக இருக்கவும். நீர் எனது செவிகளாக இருக்கவும். வாசனை நுகர்பவராக, சுவை உணர்பவராக, தொடுதலை அறிபவராக என்னுள் இருக்கவும். நான் உம்மை அதிகமாக நேசிக்கிறேன். உம்மைக் குறித்து எனக்குள் இருக்கும் தவறான நம்பிக்கைகளை நீங்கள் மாற்ற வேண்டும். நீங்கள் யார், உம்மால் என்ன செய்ய ஆகும் எனும் தெளிவை எனக்குத்தாரும். எனது இதயத்தை, மனதை, கற்பனையை விசாலாமாக்கி தாரும். அதனால், உம்மோடு நான் இருப்பதைப் பார்க்கவும், உணரவும், எனது மனக் கண்களால் அனுபவிக்கவும் இன்னும் அதிகமான காரியங்களையும் செய்ய முடியும்.

அன்பின் தந்தையே, எங்களை வியப்பிலும், கம்பீரத்திலும், அழகிலும், ஆழமாக வழி நடத்துங்கள். உமது மகத்துவம் நிறைந்த அன்பை அனுபவிக்க விரும்புகிறோம். இந்த அற்புதமான தருணங்களில், உம்மை எதிர்பார்த்து உற்சாகத்துடன் உமக்காகக் காத்திருக்கிறோம்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Recognizing God's Voice // Learn to Encounter Him

தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே - அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், நமது எவ்விதமான போராட்டத்தின் சக்தியைவிட, அவர் வல்லமை மிக்கவர். நீங்கள் இந்த நான்கு - நாட்கள் தியானத் திட்டத்தில் இணைவதன் வழியாக, கர்த்தருடன் உறவாடுவது, அவரது சப்தத்தை, பிரசன்னத்தை உணர்வது எங்கனம் எனக் கற்றுக் கொள்ளலாம் - இத்தகைய அனுபவத்தைக் கண்டடைந்த சகோதர, சகோதரிகளுடன் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்.| நவீன வாழ்வியலில் தூயாவியானவர்.

More

இந்தத் திட்டத்தை அளித்த "கேதர்" ஊழியங்களுக்கு (வளையம்/கம்பி) நன்றியை அறிவிக்க விரும்புகிறோம். மேலதிக தகவலுக்கு: https://rushpodcast.com/