கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல்மாதிரி
அசைவாடும் காற்று (அமைதியை அளிக்கிறது)
நமக்குள் வாசம் செய்யும் தூய ஆவியானவர், உனக்குச் சொல்ல விரும்பிய செய்தி இதுதான்.
நீ நீண்ட காலமாகவே எனது குரலைக் கேட்டு வருகிறாய். நான் தான் பேசுகிறேன் என்பதை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே, எனது குரல் உனக்குப் பரிச்சயமாகி விட்டது. நீ கலங்கித் தவித்த நேரங்களில், இந்தக் குரல் உனக்கு ஆறுதல் அளித்தது. நீ கவலையிலிருந்த போது நம்பிக்கையின் குரலாக வெளிப்பட்டு, உன்னைப் பெலப்படுத்தியது. எனது வார்த்தைகள் உனது காயங்களுக்கு நல்மருந்து, இவை வெறும் வார்த்தைகள் அல்ல - எனது பிரசன்னம். உனக்குள் ஒரு அங்கம். அன்பே, உனது முகத்தை வருடிச் செல்லும் காற்றைக் கவனிக்காமல் இருப்பாயா? உனது உடலைத் தழுவிச் செல்லும் தென்றலின் இனிமையை, உன்னால் உணராமல் இருக்க முடியுமா?
நான் அமைதியானவர்களின் குரல். பாடி துதிப்பவர்களின் குரலும் நானே. மென்மையானவர்களின் குரல் நான். புயலின் குரலும் நானே. சோர்ந்து களைத்தவர்களைத் தூக்கி விடுகிறேன். என் முகத்தை நோக்கிப் பார்த்து முன் செல்பவர்களைத் தாங்குகிறேன். அவர்கள் நடக்கும்போது, கைகள் தளர்வதில்லை. கால்கள் தள்ளாடுவதில்லை. உயரத்தில் ஏறி உறுதியாக நிற்கிறார்கள்.
ஒன்றைப் புரிந்து கொள். இந்த வாழ்க்கை உனது இருதயத்திற்கு அழிவைக் கொண்டுவரும் வாழ்க்கை அல்ல. அதற்குச் சாத்தியமில்லை. இருள் அழிவைப் பரப்பும் போது, பயம், வலி, வேதனை, கண்ணீர், பேரழிவையும் கொண்டு வருகிறது. அமைதியும் சமாதானமும் இன்னும் வரவில்லை. அதை என் குமாரன் கொண்டு வருவார். அசைவாடும் காற்று நிலத்தை மூடுகிறது. ஏன் தெரியுமா? அமைதியைக் கொண்டுவரத் தைரியத்தை விடவும், தன்னம்பிக்கையை விடவும், கடின உழைப்பை விடவும் அசைவாடும் காற்று இறங்கி அருள்புரிய வேண்டும். அசைவாடும் காற்று - நீ உணர்ந்து பின்பற்றும் அது; தன்னுடன் அமைதியை அருளும் கிருபைகளைத் சுமந்து வருகிறது. அன்பு மகளே, அருமை மகனே, உனக்கு என்னைத் தெரியும். நீ அமைதியைக் கொண்டுவர முடியும் - உனக்குள்ளாக, உன்னைச் சுற்றி வாழ்பவர்களுக்கு, இந்த உலகத்திற்கு ஏனெனில், நீ நிச்சயமாகப் பார்க்கக் கூடிய எல்லாவற்றையும்விட உண்மையை நேசித்து, அதற்குப் பதில் அளிப்பதால்.
நீ அசைவாடும் காற்றை உணர்ந்தவர். என் ஆவி உனது சுவாசமாக இருப்பதை அறிந்தவர். நான் உதவி செய்பவர், எல்லாவற்றிற்கும் சிறந்த வழிகாட்டி என என்னைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறாய். ஆனாலும், இன்னும் என்னைக் குறித்துத் தெளிவாக நீ அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவிட விரும்புகிறேன். என் மீதான உனது விருப்பத்தை அதிகரிக்க விரும்புகிறேன். ஆனால் அது உன் கையில் தான் இருக்கிறது. எனது அன்பில் இன்னும் அதிக ஆழமாக வேரூன்றி வளர நீ ஆசைப்படுவாயாக என உனக்கு ஆலோசனை அளிக்கிறேன். காற்று திசை மாறுகிறது, ஆனால் அது உன்னை விட்டு விலகுவதில்லை. நீ அர்ப்பணித்தால், அது உன்னைத் தூக்கிச் சுமந்து செல்லும்.
இப்போதும், நீ செய்ய வேண்டிய காரியம் ஒன்று உள்ளது. நான் யார் என்பதை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தக்கூடிய, அந்த ஆழமான, நுட்பமான இடத்தை நோக்கி முன் செல்வதற்கு, நீ முன்வர வேண்டும். உனக்குத் தெரிகிறதா? நாம் இருவரும் சேர்ந்தே இருக்கிறோம். நீ இங்கே இருக்கிறாய், என்னோடு இருக்கிறாய், உன் ஆன்மா, எனது ஆவிக்குள்ளாக, உயிர்ப்புடன், உனக்குள்ளாக இருக்கிறது. நீ வளர்ச்சி அடைகிறாய். என் மீதான உனது அன்பு, நம்பிக்கை, உறுதி வளர்ந்து பெருகுகிறது. எனது குரலைக் கேட்பதே உனது விருப்பமானது. என்னை அடைவதே உனது ஆசை. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கைகளைக் கூப்பித் தொழுது, இதயத்தை அர்ப்பணித்து என்னை நோக்கி மேலும் மேலும் அடியெடுத்து வருகிறாய். தேவசமூகத்தை நோக்கி ஏறி, நடந்து, சரண்டைந்து, உனது முகத்தை வருடும் காற்றை, அதன் மெல்லிய கிசுகிசுக்கும் சப்தத்தை உனது ஆன்மாவால் கேட்டு உணரமுடிகிறது.
என்னை நீ அறிவாய். என்னை உனக்குத் தெரியும். நீ இன்னும் அதிகமாக என்னைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
பயிற்சி
நாம் அமைதி சிறிதளவாவது வாழ்வில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம் இல்லையா? அது உண்மை தானே.
இந்தக் காலத்தில், அமைதியான வாழ்க்கை அமைவது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்வில், வேகமாக இயங்கும் இயந்திர உலகில் அமைதி அரிது தான்.
அமைதியைக் குறித்து சில உண்மைகள்... நாம் அதைத் தேடி அடைய முடியாது. சுயமாக உழைத்துப் பெறவும் முடியாது. நமக்குத் தேவைப்படும் அமைதி கிடைப்பதும் இல்லை. உள்ளத்தில் உண்மையான அமைதி இல்லை. அமைதியை அடைவதைக் குறித்து, சுய முன்னேற்றப் புத்தகங்களில் எத்தனை விதமாக எழுதப்பட்டிருந்தாலும், அத்தனையையும் முயன்று கடைப்பிடித்தாலும் அமைதி கிடைக்காது.
எனவே, பாரம்பரிய வழியைத் துறந்து, புதிய பாதையில் பயணிப்போம்.
நாம் சமாதானத்தைத் தேடுவதைவிட.... அதற்குப் பதிலாக.... கர்த்தரை அதிகமாகத் தேடுவோம். கர்த்தரை அதிகமாக அறிந்து கொள்ள கற்றுக் கொள்வோம். அதனால், கர்த்தருடைய சமாதானம் நம்மை நிரப்பும். நமது பரபரப்பான வாழ்வின் மத்தியில் தேவசமாதானம்.
இன்று நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரை உணர்ந்து, அவரைத் தொழுது கொள்வதில் கவனம் செலுத்துவோம். கர்த்தரின் சுவாசத்தை அறிவோம்.
ஆக, எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. உனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
நாம் முன்னோக்கி நடக்கலாம் அல்லது இப்போது இருக்கும் இடத்திலேயே தங்கலாம். நுட்பமாக ஆழ்ந்து செல்லலாம், அல்லது பாதுகாப்பான இடத்திலேயே தங்கி விடலாம்.
அல்லது கட்டுப்பாட்டோடு இருக்க முயற்சிக்கும் வாயப்பை தெரிவு செய்யலாம்.
ஒவ்வொரு நிலையிலும், நீங்கள் ஏதோ ஒரு வாய்ப்பை தெரிவு செய்கிறீர்கள்.... அவரோடு இருக்க வேண்டும்... நீங்கள் அவரோடு வாழ வேண்டும்... இல்லையா?
சில நிமிடங்கள் அமைதி காக்கவும். உங்கள் இதயத்தையும், மனதையும் கர்த்தரை நோக்கித் திருப்புங்கள். அவர் இப்போது உங்களிடம் பேசுவது, நீங்கள் எதிர்பார்ப்பது போல இல்லாமல் இருக்கலாம்... ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஆச்சரியமானவர். இப்போதும்... எப்போதும், இது ஒரு துவக்கம் மட்டுமே...
நீங்கள் அர்ப்பணித்தால், அசைவாடும் காற்று உங்களை ஏந்தி, சுமந்து செல்லும்.
ஆம், ஆண்டவராகிய இயேசுவே, வாரும்...
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே - அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், நமது எவ்விதமான போராட்டத்தின் சக்தியைவிட, அவர் வல்லமை மிக்கவர். நீங்கள் இந்த நான்கு - நாட்கள் தியானத் திட்டத்தில் இணைவதன் வழியாக, கர்த்தருடன் உறவாடுவது, அவரது சப்தத்தை, பிரசன்னத்தை உணர்வது எங்கனம் எனக் கற்றுக் கொள்ளலாம் - இத்தகைய அனுபவத்தைக் கண்டடைந்த சகோதர, சகோதரிகளுடன் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்.| நவீன வாழ்வியலில் தூயாவியானவர்.
More