உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்மாதிரி
தேவனுடைய திட்டத்தை நாம் காணமுடியவில்லை என்றால் என்ன நடக்கும்?
பழைய ஏற்பாட்டில், எரேமியா பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களுக்குத் தேவனிடமிருந்து வரும் செய்தியைத் அறிவிக்கும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். நிச்சயமாகவே இது அவர்கள் இருக்க விரும்பின இடமல்ல. இது தேவதிட்டமுமல்ல. உடனடியாக அவர்களை மீட்பதற்குப் பதிலாக, தேவன் “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருங்கள” (எரே 29:5) மற்றும் “நான் உங்களைச் சிறைப்பட்டுப் போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி ...” (எரே 29:7) என்றும் சொல்கிறார்.
சில வசனங்களுக்குப் பிறகு, தேவன், … “பாபிலோனில் எழுபது வருடங்கள்நிறைவேறினபின்பு நான் உங்களை சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப்பண்ணும் படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்.” என்று சொல்கிறார். எரே 29:10 (முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது)
எழுபது வருடங்கள்! நம்மில் அநேகருக்கு ஏதாவது ஒன்றிற்காக 70 வினாடிகள் காத்திருக்கப் போதுமான பொறுமை இருப்பதில்லை, பிறகு எப்படி 70 வருடங்கள் பொறுத்திருப்பது.
இவையெல்லாம்தான் அடுத்து வருகின்ற நீங்கள் முன்பே கேட்டிருக்க வாய்ப்புள்ள வசனத்தின் சூழமைவாகும்: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்கிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” எரே 29:11
தேவனுடைய திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய மூன்று காரியங்கள் இவைகளே:
1.) நல்ல திட்டங்கள் கொஞ்சகாலம் எடுக்கலாம். தேவன் இஸ்ரவேலர்களிடம் அவர்கள் சிறையிருப்பில் 70 வருடங்கள் இருப்பார்கள் என்று சொன்னார். இந்த செய்தியைக் கேட்கும் பலர் அந்த வாக்குத்தத்தத்தின் மறுமுனையைப் பார்க்கவே முடியாமல் போகலாம். சிலசமயங்களில், இது தேவனுக்கு தம்முடைய திட்டத்தை உங்களிடம் வெளிப்படுத்த நீண்ட காலம் எடுக்கும் என்பதைப்போல் எண்ண வைக்கும். உண்மை என்னவென்றால், உங்கள் வாழ்க்கைக்கான தேவதிட்டத்தின் முழுப்பயனையும் நீங்கள் பார்க்க முடியாமலேயே போகலாம்—ஆனால் நீங்கள் வருங்கால சந்ததிகளிடம் அறியாமலேயே தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள்!
2.) காத்தருக்கும் காலங்கள் வீணான காலங்களல்ல. தேவன் இஸ்ரவேலர்களை எழுபது வருடங்களும் ஒன்றுமே செய்யாமல் சும்மா காத்திருக்கும்படி சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் அவர்களை தாம் அனுப்பிய பட்டணத்தின் சமாதானம் மற்றும் சுகவாழ்விற்காக விண்ணப்பம் பண்ணும்படியாகச் சொன்னார். நீங்கள் இப்பொழுது எங்கேயிருந்தாலும், தேவன் உங்களை பயன்படுத்த முடியும்!தேவன் உங்கள் வாழ்க்கையில் இன்னமும் வரப்பண்ணாத ஒரு காலத்திற்காக காத்துக்கொண்டிருந்து தேவனுடைய ராஜ்யத்திற்காக இப்பொழுது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்.
3.) தேவனுடைய திட்டங்கள் நல்லவைகள். நீங்கள் இப்பொழுது எந்த காலத்தில் இருந்தாலும், எரே 29:11 சொல்லும் வாக்கு உண்மையாகப் பொருந்தும்: நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு மற்றும் நம்பிக்கைக்கான நல்லத்திட்டங்களை தேவன் உங்களுக்கு வைத்திருக்கிறார். எல்லாமே சரியாக செல்வது போல் இப்போது தோன்றாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவைக் குறித்து தொடர்ந்து தேவனிடத்தில் நம்பிக்கையள்ளவர்களாய் இருப்பீர்களானால், அதன் மறுமுனையில் நன்மையைக் காண்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரின் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், நாம் நேர்மையாக இருந்தால், நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் மற்றும் நம்மைக் குறித்த அவரின் யோசனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த 6 நாள் வேதாகம திட்டத்தில், நம்மைக் குறித்த தேவனின் திட்டம் நாம் அடிக்கடி நினைப்பது போல் சிக்கலானது அல்ல, அது நாம் கற்பனை செய்வதை விட மிகச் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
More