உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்மாதிரி
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் யார் என்பது பற்றியது.
நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் அந்த கேள்வியை நிறைய கேட்டிருக்கலாம், குறிப்பாக கல்லூரிக்கு எங்கு செல்ல வேண்டும் அல்லது எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது போன்ற ஒரு முக்கிய வாழ்க்கை முடிவை நீங்கள் எதிர்கொள்ளும் போது.
இது ஒரு மதத் தலைவர் வேதாகமத்தில் இயேசுவிடம் கேட்ட கேள்வி: “போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். ” (மத்தேயு 22:36)
அடுத்த வசனத்தில், இயேசுவின் பதிலைக் காண்கிறோம்: “' உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;இது முதல் மற்றும் மிகப்பெரிய கட்டளை. இது போலவே இரண்டாவது பிரமாணமும் சமமாகக முக்கியமானது : ‘உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.’ ”(மத்தேயு 22: 37-39)
நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, இந்த இரண்டு விஷயங்களிலிருந்தும் தொடங்கலாம் என்று இயேசு சொன்னார்:
1.) தேவனை நேசிக்கவும்.
2.) மற்றவர்களை நேசிக்கவும்.
நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், அது மிகச் சிறந்ததாகத் தெரிகிறது என்று, ஆனால் கல்லூரிக்கு எங்கு செல்வது அல்லது எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு எப்படித் தெரியும்?
இது ஒரு நியாயமான கேள்வி. இங்கே ஒரு நல்ல செய்தி: நீங்கள் இயேசுவைப் பின்தொடர்கிறீர்கள், தெய்வீக மனிதர்களுடன் உங்கள் வாழ்க்கை சுற்றி வருகிறது என்றால், உங்கள் முடிவுகளை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் உதவுவார்.
சமமான நல்ல இரண்டு கல்லூரிகளுக்கு இடையில் நீங்கள் குழம்பி இருக்கலாம், நீங்கள் எந்த கல்லூரிக்கு செல்ல தேவன் விரும்புகிறார் என்று நீங்கள் ஆச்சர்யப்படுகிரிரீர்களா. தேவனை நேசித்தல், மக்களை நேசித்தல் ஆகிய இரண்டு மிகப் பெரிய கட்டளைகளைப் பற்றி இயேசு முன்பு கூறியதைப் பார்ப்போம். இரு கல்லூரிகளிலும் தேவனை நேசிக்கவும் மற்றவர்களை நேசிக்கவும் முடியுமா? பதில் ஆம் எனில், நீங்கள் எதை தேர்வு செய்தாலும் அது ஒரு பொருட்டு அல்ல. தேவன் உங்களை இரு இடங்களிலும் பயன்படுத்தலாம்.
உங்கள் எதிர்கால முடிவுகளுக்கு வரும்போது, தேவன் எப்போதும் “ஆம்” அல்லது “இல்லை” பதில்களை நமக்கு தருவதில்லை. இது குழப்பமானதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் உணரும்போது நிறைய சுதந்திரம் இருக்கிறது உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் யார் ஆகிறீர்கள் என்பதுதான்.
இதன் பொருள் என்னவென்றால், நம்முடைய எல்லா முடிவுகளையும் நாம் சொந்தமாக எடுத்துக்கொண்டு, நாம் விரும்பின படி வாழ்கிறோமா? நிச்சயமாக இல்லை! தேவனின் விருப்பத்தை நாம் எப்போதும் அறிந்திருக்க மாட்டோம், ஆனால் நாம் எப்போதும் தேவனின் வழிகளில் நடக்க முடியும். அதற்கு என்ன பொருள்? இதன் பொருள் என்னவென்றால், நம் வாழ்க்கைக்கு அடுத்தது என்னவென்று நமக்குத் தெரியாவிட்டாலும், இப்போதே தேவன் நம்மை அழைத்ததை குறித்து தொடர்ந்து நாம் அவருக்கு கீழ்படிந்து அவரது கற்பனைகளை கடைப்பிடிக்கலாம். அதாவது அவரைப் பின்தொடர்வது, ஒருமைப்பாட்டுடன் வாழ்வது, நம் பெற்றோர்களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிதல், மதித்தல், தேவன் நம் வாழ்வில் வைக்கும் ஒவ்வொரு நபரையும் நேசித்தல்.
கருத்து: நாம் கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, அவர் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு ஞானத்தை அளிக்கிறார். (1 கொரிந்தியர் 2: 12-13) அவர் நம் எண்ணங்களை புதுப்பிக்கிறார் (ரோமர் 12: 2), சரியான விஷயங்களில் கவனம் செலுத்த நமக்கு உதவுகிறார். ஞானமுள்ளவர்களுடன் நாம் சுற்றி வரும்போது (நீதிமொழிகள் 13:20), சரியான முடிவுகளையும் எடுக்க அவர்கள் நமக்கு உதவுவார்கள். நாம் ஞானத்தைக் காணக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்று ஜெபத்தின் மூலம். உண்மையில், யாக்கோபு 1: 5 கூறுகிறது, நாம் தேவனின் ஞானத்தைக் கேட்டால், அவர் அதை நமக்குக் கொடுப்பார்!
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரின் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், நாம் நேர்மையாக இருந்தால், நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் மற்றும் நம்மைக் குறித்த அவரின் யோசனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த 6 நாள் வேதாகம திட்டத்தில், நம்மைக் குறித்த தேவனின் திட்டம் நாம் அடிக்கடி நினைப்பது போல் சிக்கலானது அல்ல, அது நாம் கற்பனை செய்வதை விட மிகச் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
More