உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்மாதிரி
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டத்தை எவ்வாறு கண்டறிவது?
நீங்கள் எப்பொழுதாவது ஓட்டப்பந்தயத்தில் ஓடியிருப்பீர்களானால் சரியான வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். நீங்கள் மிகவும் மெதுவாகச்சென்றால், எளிதாக பின்தங்கி விடுவீர்கள், மற்றவர்கள் உங்களை முந்தி விடுவார்கள். நீங்கள மிகவும் வேகமாக சென்றால், எப்படியும், நீங்கள் விரைவில் களைப்டைந்து விடுவீர்கள், ஓட்டத்தை முடிப்பதற்குக்கூட பெலனில்லாமல் போய்விடும்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது சரியான வேகத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை என்று வரும்போது, நமக்கான வேகத்தை நிர்ணயிக்க ஒருவர் இருக்கிறார்.
கலா 5:25 சொல்கிறது, “நாம் ஆவியிலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” என்று.
நாம் ஆவிக்கேற்றபடி நடக்கிறோமென்றால், பரிசுத்த ஆவியானவர் நமக்கான வேகத்தை நிர்ணயிக்கிறார் என்பதே அதன் அர்த்தமாகும். நாம் பின்தங்கவோ அல்லது முன்கூட்டி ஓடவோ முடியாது—சரியான வேகத்தில் செல்லவேண்டும்.
நாம் ஆவியானவரோடு நடக்கும்போது, நம்முடைய இலட்சியங்களுக்குள்ளாக கடந்துசெல்ல, அவர் நமக்கு ஞானத்தையும், உணர்வையும் தருகிறார். நீதி 3:6 சொல்கிறது, நம்முடைய வழிகளிலெல்லாம் நாம் அவரை நினைத்துக் கொள்ளும்போது, அவர் நம்முடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்று.
சரி, இவைகளெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் எப்படி உண்மையிலேயே ஆவிக்கேற்றபடி நடப்பது?
அதற்கான மூன்று வழிகள் இங்கே இருக்கின்றன:
1.) தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாகத் தேடுங்கள். வேதாகம செயலியில் இந்த வேதாகமத் திட்டத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பதால், நீங்கள் இதை ஏற்கனவே செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்! தேவனுடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்கும்படியான வெவ்வேறு விதமான வேதவாசிப்புத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன, மேலும் உங்களுக்கு உத்தரவாதம் தேவைப்பட்டால், உங்களுடைய சிறு குழுவோடு இணைந்துகூட நீங்கள் இவைகளைச் செய்யலாம்!
2.) தவறாமல் ஜெபியுங்கள். ஜெபம் என்ற எண்ணம் உங்களைப் பயமுறுத்தாதிருப்பதாக. ஜெபம் என்பது வெறுமனே தேவனோடு பேசுவதும், அவர் சொல்வதைக் கேட்பதுமேயாகும். நீங்கள் எளிதாக கவனம் சிதறுபவர்களாக இருப்பின் (நம் எல்லோரையும் போல), உங்கள் அலைபேசியிலுள்ள "குறிப்புகள்" செயலியைத் திறந்து, நீங்கள் எதைக் குறித்து ஜெபிக்க விரும்புகிறீர்களோ அதை எழுதி வைத்துக்கொள்வது உதவியாயிருக்கும்.
3.) சமுதாயத்தோடு இணைந்திருங்கள். ஆவிக்கேற்றபடி நடப்பது என்பது ஒரேமனமுள்ள, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற மற்றவர்களோடு சேர்ந்திருப்பதுவேயாகும். இதை செய்வதற்கு மிகச்சிறந்த வழி எதுவென்றால், உங்கள் சிறு குழுவோடு இசைந்திருப்பதும், ஆலயத்திற்கு ஒழுங்காக செல்வதுமேயாகும். சபையில் ஏதாவதொரு ஊழியம் செய்ய ஆரம்பிப்பது இன்னும் சிறந்ததாகும். நீங்கள் புதிய ஆட்களை சந்திப்பீர்கள், மேலும், மற்ற கிறிஸ்தவர்களோடு ஆழமான நட்பை வளர்த்துக்கொள்வீர்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரின் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், நாம் நேர்மையாக இருந்தால், நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் மற்றும் நம்மைக் குறித்த அவரின் யோசனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த 6 நாள் வேதாகம திட்டத்தில், நம்மைக் குறித்த தேவனின் திட்டம் நாம் அடிக்கடி நினைப்பது போல் சிக்கலானது அல்ல, அது நாம் கற்பனை செய்வதை விட மிகச் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
More