பிடிவாதம் - லிசா பெவரேவுடன்மாதிரி
![Adamant With Lisa Bevere](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11418%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவன் உங்கள் மீது 'பிடிவாதமாக' இருக்கிறார். நீங்கள் அதை உணர்கிறீர்களா என்பது அவருக்கு முக்கியமல்ல. ஆனால், உடைக்கப்பட முடியாத கிறிஸ்துவின் செயலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள். அவர் உங்களை குறித்து அறிக்கையிடும் சில காரியங்களை இன்று நாம் காண்போம்.
நீங்கள் தேவனுடைய பிடிவாதமாய் இருக்கிறீர்கள் - உறுதியான ஆனாலும் தெளிவாய் தெரிகின்ற பளிங்கை போல இருக்கிறீர்கள் - உங்கள் மூலமாக பிறரும் கிறிஸ்துவை பார்ப்பதற்கு ஏதுவாக!
நீங்கள் தேவனுடைய பிடிவாதமாய் இருக்கிறீர்கள் - கிறிஸ்துவின் ஆவியானவர் உங்களுக்குள் அசைவாடுவதால் நீங்கள் அசைக்கப்படுவதில்லை.
நீங்கள் தேவனுடைய பிடிவாதமாய் இருக்கிறீர்கள் - உங்கள் ஆவி அனலுள்ளதாய் இருக்கிறது!
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நமக்கு ஞானஸ்நானம் கொடுக்கவே இயேசு இந்த வந்தார். நாம் அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டிய ஞானஸ்நானமும் அதுவே. நாம் மறுபடியும் பிறந்தபொழுது ஜீவனற்று இருந்த நம் இருதயங்கள் அவருடைய நித்திய அன்பால் ஜுவாலையாய் உயிர்பிக்கப்பட்டதே!
உங்கள் ஆவியின் ரூபம் உங்களுக்கு தெரியாது. சில நேரம் நீங்கள் பேசுவது சாதாரண வார்த்தைகள் போல தோன்றலாம். ஆனால் ஆவியில் அவைகள் அக்கினி ஜுவாலைகள். சத்துரு ஜனங்களை கட்டி வைத்திருக்கும் பொய்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் சத்தியமாகிய வெளிச்சத்தின் வார்த்தைகளை நீங்கள் பேசுகிறீர்கள். கட்டுகளை முறித்து போடும் அக்கினி வார்த்தைகள் உங்கள் நாவிலே. தொடர்ந்து நீங்கள் சத்தியத்தில் நிலைநிற்கவேண்டும்.
உங்கள் வாழ்க்கை மீது தேவன் அளித்திருக்கும் அன்பளிப்பு, அக்கினியை போல இருக்கும் அவருடைய ஆவி. அது ஒருபோதும் அணைந்துபோக அனுமதியாதேயுங்கள். கங்குகளை ஊதி அனல் மூட்டுவது போல ஆவியின் அனலை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் பட்சித்து எரியும் அந்த அக்கினி மற்றவர்களுக்கும் தேவை - அவர்களும் உங்களிடம் இருந்து சத்தியமாகிய வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள! நீங்கள் தேவ குணங்களுடன் அவருக்குள் மறுபடியும் பிறந்த தேவ பிள்ளைகள்.
தேவ வார்த்தைகளை பெற்றும் நீங்கள் இருக்கிறவண்ணமாகவே இருக்கப்போவதில்லை. உங்களை குறித்து தேவனுக்கு உயர்ந்த நோக்கம் உண்டு. இந்த வெளிச்சத்திலேயே உங்கள் வாழ்வின் மீது நீங்கள் நல்ல விசுவாச வார்த்தைகளை பேசவேண்டும்.
இந்த தியான திட்டம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்றால், இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள எங்களுடைய புதிய புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள் Adamant: Finding Truth in a Universe of Opinions.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Adamant With Lisa Bevere](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11418%2F1280x720.jpg&w=3840&q=75)
உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் - அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும்.
More