பிடிவாதம் - லிசா பெவரேவுடன்மாதிரி
நாம் தேவனின் அன்பைப் பெறும்போது, நாமும் அன்பைக் கொடுப்பதுவே மிகவும் இயல்பான மற்றும் அவசியமான பதில்செயலாகும். நாம் அச்சமின்றி, வெற்றிக்களிப்புடன், சதாகாலமும் அன்புகூற வேண்டும். ஒருவர் நேசிக்கப்படுகிறார் என்பதற்கான உண்மையான சான்று அவர்கள் நன்றாக நேசிக்கிறவர்களாக இருப்பதுவே.
தேவனிடத்தில் அன்பில்லை; அவரே அன்பு. அன்பே அவருடைய இயல்பு. அவர் அன்பாகவே இருப்பதினால், அவர் உங்களில் அன்புகூறுவதை நீங்கள் தடைசெய்ய முடியாது. அவருடைய அன்பு வெல்லமுடியாதது, மற்றும் அசைக்கமுடியதது, அது உங்கள் வாழவின் ஏற்ற இறக்கங்களினால் அசையாதது.
ஆனால் தேவன் எல்லோரையும் நேசிப்பதால், அவரால் எல்லாவற்றையும் நேசிக்க முடியாது. தேவன் அன்பில் பிடிவாதமாக இருப்பதினால், வெறுப்பிலும் பிடிவாதமாக இருக்கிறார்.
முதலில் பார்ப்பதற்கு இது முரண்பாடு போல் தோன்றலாம், ஆனால் அது ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம் அன்பை வழிபாட்டுப் பொருளாக்கியிருப்பதால் மட்டுமே. தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும், ஆனால் தேவனை நேசிக்கும் எண்ணத்தை நாம் உருவாக்கியிருக்கிறோமா?
உண்மை எதுவெனில், அன்பை நாசம்செய்யும் செயல்களை தேவன் வெறுக்கிறார். தாம் நேசிக்கிறவர்களை சீர்குலைக்கும் காரியங்களை அவர் வெறுக்கிறார். எனவேதான் நம்முடைய அடையாளத்தைத் திரிக்கும் செயல்களையும் தேவன் வெறுக்கிறார்.
வேதமும் கூட தேவன் வெறுக்கிற காரியங்களாக இவைகளைக் கூறுகிறது: நீதியையும், சத்தியத்தையும் விட்டுக்கொடுக்கும் எல்லா காரியங்கள், விதவைகள், மற்றும் திக்கற்றவர்கள் ஒடுக்கப்படுதல், முதியோர்கள் துன்புறுத்தப்படுதல் மற்றும் குடும்பம் புறக்கணிக்கப்படுதல், அவருடைய மேன்மையைப் புரட்டுதல், அவருடைய ஈவுகளைத் துஷ்பிரயோகம் செய்தல், அன்பை சுயநலத்திற்கேதுவாக புரட்டுதல் மற்றும் நண்பர்கள் எதிரிகளாகுதல், அவருடைய சாயலை மாற்றும் மற்றும் நம்முடைய சாயலைக் கெடுக்கும் காரியங்கள், தீமையை நன்மை என்று சொல்லுதல், குற்றமற்றவர்கள் கொல்லப்படுதல், ஆணவம் மற்றும் பெருமையினால் நாம் அவமானப்படுதல் போன்றவைகள். சுருக்கமாக சொல்வதானால், அன்பை இழிவுபடுத்தும் எந்த காரியமும் நம்மையும் இழிவுபடுத்தும் என்பதால் அன்பை தரம்தாழ்த்தும் எல்லாக் காரியங்களையும் தேவன் வெறுக்கிறார்.
“எல்லாவற்றையும் விரும்பினால்" நாம் உண்மையான அன்புள்ளவர்களாயிருக்க முடியாது. தேவன் அன்பு, வெறுப்பு இரண்டிலும் பிடிவாதமுள்ளவராயிருக்கிறார், ஆகையால் நாம் தேவன் எதை நேசிக்கிறாரோ அதை நேசிக்கவும், எதை வெறுக்கிறாரோ அதை வெறுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தேவனை நேசிப்பதைக் குறித்து நம்முடைய கலாச்சாரம் உண்டுபண்ணி வைத்திருக்கிற சில வழிமுறைகள் என்ன? தேவன் எல்லோரையும் நேசிக்கிறார், ஆனால் எல்லாவற்றையும் அல்ல. இந்த உண்மையை உங்கள் வாழ்வில் எப்படி செயல்படுத்துவீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் - அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும்.
More