பிடிவாதம் - லிசா பெவரேவுடன்மாதிரி
நீங்கள் புகழ் பெற்றிருக்க விரும்புகிறீர்களா? அல்லது பிறர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா?
இவை இரண்டுமே ஒன்று போலவே தெரியும், ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. புகழ் பெற்றிருக்க வேண்டுமானால் நீங்கள் கூட்டத்தோடு பயணிக்க வேண்டும். அவர்கள் கேட்க விரும்புவதை பேச வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் பெருங்கூட்டத்தை எதிர்த்து சத்தியத்திற்காக நிற்கவேண்டும்.
உண்மையில், சத்தியம் என்பது ஒரு காரியம் அல்ல. அது ஒரு நபர். ஆம்! இயேசு தாமே சத்தியம் என்று நமக்கு அவரை வெளிப்படுத்திருக்கிறார். அவருடைய வார்த்தைகளையும் சத்தியம் என்று சொல்லியிருக்கிறார். இந்த உலகம் சத்தியம் என்ற வார்த்தையை ஏற்ற இறக்கமுள்ள ஒரு காரியமாகவே புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. ஆனால், இயேசுவே சத்தியம். அந்த சத்தியத்திற்கு மாற்றமில்லை. பலவித கருத்துக்கள் நிறைந்த இந்த உலகத்தில் சரியான சத்தியத்தில் நம் வாழ்வை கட்டுவதற்கு சத்தியமாகிய இயேசு நம்மை வழிநடத்துவாராக.
பலவித கருத்துக்கள் மத்தியில் சத்தியத்தை வேறுபடுத்தி புரிந்துகொள்வது கடினமே! ஆனாலும் அவசியமே! உலகம் கூறும் கருத்துக்கள் ஒருவரை குழப்பத்தில் ஆழ்த்தும். சத்தியம் கொடுக்கும் நிலையான தடுமாற்றமில்லாத வாழ்வே இன்றைய தேவை. அப்படிப்பட்ட வேத சத்தியத்தின் சத்தத்தை தவிர்த்து நம்மை கலங்கடிக்க நினைக்கும் அனைத்து தேவையற்ற சத்தங்களுக்கும் நம் செவியை முடிகொள்வோம்.
கருத்துக்களை பகிர்வதோ, மாற்றுவதோ எளிது தான். ஆனால் அவைகளை பின்பற்றுவதால் நம்மை சுற்றிலும் (ஏன்? நம் கவனக்குறைவால் பிறருக்கும் கூட) ஏற்படும் குழப்பங்களை சரிசெய்வது மிக மிக கடினம். நமது வாழ்வையும் மட்டுமின்றி பிறர் வாழ்வையும் கெடுத்துவிடும். ஆகவே தன ஆகவே தான் நம் வாயின் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் குழப்புவதற்கு அல்ல, குழப்பங்களை தீர்ப்பதற்கே அழைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துபோக கூடாது.
இன்றைய தினம் உங்கள் முன் சவாலான ஒரு காரியத்தை வைக்கிறேன். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் யோசித்து, தேவைப்பட்டால் சில திருத்தங்களுடனே வெளியில் விடுங்கள். நீங்கள் கேட்கும், பேசும், பகிரும் எந்த வார்த்தைகளையும் யோசித்தே உபயோகியுங்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், சபையின் பிரச்சனைகளை பகிங்கரமாக பொது இடங்களில் பேசாதீர். அதே நேரத்தில் நீங்கள் மௌனமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. குடும்ப பிரச்சனைகளை அந்த அந்த குடும்பங்களோடு பேசுங்கள். பிரச்சனைகளோடு சம்பந்தப்படாத நபர்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்டு அதன் மூலம் அவர்களை சம்மந்தப்படுத்திருங்கள். அது பிரச்சனைகளை பெரிதாக்குமே தவிர தீர்க்காது.
பிரச்சனைகளுக்கு அமைதி காப்பதும் ஆதரவளிக்காததும் எப்படி சாத்தியம்? பிரச்சனைகளின் பகுதியாக இணையாமல் தீர்வின் பகுதியாக மாறுவது என்றால் என்ன?
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் - அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும்.
More