வாக்கு பண்ணப்பட்டவர்மாதிரி
உதிக்கும் சூரியன்
ஒவ்வொரு காலைப்பொழுதிலும், பூமியிலே பொழுது விடியும்போது, தனது வெளிச்சத்தால் இருளை சூரியன் விரட்டி அடிக்கிறது. அனைத்து நாடுகளும் கண்டங்களும் இந்த தருணத்தை அனுபவிக்கின்றன! இமைப்பொழுதிலே இரவு முடிந்து, புதிய வாய்ப்பு களையும் நம்பிக்கைகளையும் கொண்ட காலை துவங்குகிறது
லூக்கா 1-இல், தேவனுடைய இரக்கத்தைக் குறித்தும், விரைவில் வரப்போகிற இரட்சிப்பைக் குறித்தும் சகரியா இந்த தீர்க்கதரிசன பாடல் மூலமாக தேவனை துதித்துப் பாடினான், தேவன் தங்களின் முற்பிதாக்களின் காலத்தில் கொடுத்த வாக்குத்தங் களை நினைவுகூர்ந்து, நம்மை விடுவிக்கவும் இரட்சிக்கவும் ஒரு வழியை அவர் உண்மையுள்ள வராக இருந்து ஏற்படுத்தியதற்காக, அவரை உயர்த்தும்படியாக அப்பாடலின் வரிகள் அமைந்துள்ளன.
சகரியா மற்றும் எலிசபெத் ஜெபித்து விசுவாசித்ததால் பிறந்த அவர்களின் மகனாகிய யோவான்தான் இயேசு வுக்காக வழியை ஆயத்தம் செய்வான். தேவனுடைய இரக்கம் ஊற்றப்பட்டதினால், அங்கே நம்பிக்கை இருந்தது! மன்னிப்பு சாத்தியமாகி இரட்சிப்பு வந்தது.
இரவின் முடிவாகிய, விடியலை குறிப்பிட்டு காட்டி அந்தப்பாடல் முடிவடைகிறது. சகரியா கூறியதாவது, "அந்தகாரத்திலும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்," ,அவ்விரக்கத்தினாலே உன்னதத்தி லிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்தி ருக்கிறது என்றான்." (லூக்கா 1:78-79)
தேவன் இந்த உலகத்திற்காக ஒரு இரக்கத்தின் செய்தியை வைத்திருக்கிறார்; அதுவே சுவிசேஷம் எனப்படும் நற்செய்தி! சூரிய உதயம் போல, இருளை அகற்றுவதற்காக இயேசு வருகிறார். உலகின் ஒலி விரைந்து வந்து, மரணத்தின் இருளை வெல்லப்போகிறது.
இயேசுவின் இந்த செயலால் இன்று நாம் பயமின்றி வாழ முடிகிறது, மற்றும் அவர் இதை நமக்காய் செய்த காரியத்தினால், உங்களின் வாழ்நாள் முழுவ தும் பரிசுத்ததோடும் நீதியோடும் அவரை சேவிக்க முடிகிறது (வச.74-75). அந்த ஒளி இருளை அகற்றி உங்களை விடுவித்திருக்கிறது. நாம் அனைவரும், "உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரிய மான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்போம்” (1 பேதுரு 2:9)
நீங்கள் பயத்தோடு வாழ்கிறீர்களா அல்லது விடுதலையோடு வாழ்கிறீர்களா? உங்களுடைய கவனம் எதில் இருக்கிறது என்றும், அதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும் என்றும் தேவன் உங்களுக்கு என்ன காண்பிக்கிறார்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின் வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள் அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/