வாக்கு பண்ணப்பட்டவர்மாதிரி

வாக்கு பண்ணப்பட்டவர்

5 ல் 2 நாள்

வாக்குதத்தத்தை நிறைவேற்றுபவரை துதித்தல்

எவரேனும் ஒருவர் உங்களுக்கு ஒரு   வாக்கு கொடுத்துவிட்டு, தாங்கள்   கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? வாக்கு கொடுக்கும் நபர், கொடுத்த வாக்கின் படி   நடந்தால்தான் அது ஒரு உண்மையான வாக்காக கருத்தப்படும்.

சகரியாவினிடத்தில்   அனுப்பியதுபோலவே, அற்புத   குழந்தையைக் குறித்த வாக்கை அறிவிக்கும்படி காபிரியேல் தூதனை தேவன் மரியாளிடம்   அனுப்பி னார். இது மரியாளின் மன்றாட்டுக்குக் கிடைத்த பதில் அல்ல, தேவன் தம்முடைய வார்த்தையை நிறை வேற்றும்படி அப்படி செய்தார். 

"ஆதலால் ஆண்டவர்   தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை   கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." ஏசாயா 7:14

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட   வாக்குறுதிகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் பிறப்பில் நிறைவேறின. ஆதியாகமத்தில் சொல்லப் பட்டவைகள் மரியாளின் வாழ்க்கையில் உண்மை யாயின. தேவன் உண்மையுள்ளவராக இருப்பதினால், தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களை அவர் நிறை வேற்றினார். மரியாளுக்கு அதிசயமாக பிறந்த குழந்தை தேவ மைந்தனாகவே இருந்தார்!

தேவனால் தனக்கு   அளிக்கப்பட்ட கிருபைக்கு மரியாள் விசுவாசத்தையும் ஸ்தோத்திரங்களையும் வெளிப்படுத்தினாள். காபிரியேலுக்கு அவள் அளித்த   பதிலில் விசுவாசத்தையும். "அதற்கு மரியாள்: இதோ,   நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். (லூக்கா 1:38) எலிசபெத்துடன் சேர்ந்து   களிகூர்ந்து பாடின பாடலில்   ஸ்தோத்திரங்களையும் வெளிப்படுத்தினாள்.

மரியாளின் பாடலிலே தேவனுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் குணாதிசயங்களை கவனித்துப்பாருங்கள். அவர் இரக்கமுள்ளவர் (வச.50, 54) மற்றும் பராக்கிர முள்ளவர் (வச. 51). தேவன் தாழ்மையானவர்களை உயர்த்துகிறவர் (வச.52) மற்றும் பசியுள்ளவர்களை நிரப்புகிறவர் (வச.53).  தேவன் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் அளித்த வாக்குத்தத்ததை நினைவுகூர்ந்து அதை மரியாளின் மூலமாக தந்த இரட்சிப்பின் வழியால் நிறைவேற்றி னார். நமக்கு ஒரு இரட்சகரை அனுப்பினார், அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவனுடைய   வார்த்தைக்கும் வாக்குத்தத்தத்திற்கும் உங்களின் பதில் எப்படி இருக்கும்? நீங்கள் சந்தேகப் படுவீர்களா அல்லது அதனை விசுவாசித்து துதி செலுத்துவீர்களா?

இன்றைய ஜெபம்:

கர்த்தாவே நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்காக உமக்கு நன்றி. நீர்   உண்மையுள்ளவராய் இருப்பதி னால், நீர் சொன்ன வார்த்தைகள் யாவும் நிறை வேற்றுவீர். உமது குணாதிசயங்களை காணவும்,    உம்மை நம்பவும் உம்மைத் துதிக்கவும்   எனக்கு விசுவாசத்தைத் தாரும். ஆமென்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

வாக்கு பண்ணப்பட்டவர்

உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக   அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின்   வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள்   அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி   அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று   நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள்   பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள் 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/