ரோமர் 10

10
1பிரியமானவர்களே, இஸ்ரயேலர் மீட்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய இருதயத்தின் ஆசையும் நான் இறைவனிடம் ஏறெடுக்கும் மன்றாடுதலுமாய் இருக்கின்றது. 2இறைவனைக் குறித்த வைராக்கியம் அவர்களுக்கு இருந்தாலும், அது அவர்கள் உண்மையை உறுதியாகப் புரிந்து கொண்டதால் வந்த ஒன்றல்ல. 3ஏனெனில், இறைவனின் நீதிமானாக்கும் முறைமையை அவர்கள் புரிந்துணர்ந்துகொள்ளாதவர்களாக, தாங்களே தங்களை நீதிமானாக்கிக்கொள்ள முயற்சிப்பதால், அவர்கள் இறைவனின் நீதிமானாக்கும் முறைமைக்குக் கட்டுப்படாதவர்களாக இருக்கின்றார்கள். 4ஏனென்றால் விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நீதிமானாகும்படி, கிறிஸ்துவே நீதிச்சட்டத்தின் முடிவு.
5நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்து நீதிமானாக்கப்படுவதைக் குறித்து மோசே இப்படிச் சொல்கிறார்: “ஒருவர் நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்தால், சட்டம் அவருக்கு வாழ்வளிக்கும்.”#10:5 லேவி. 18:5 6ஆனால் விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுவதைக் குறித்தோ வேதவசனத்தில் இவ்விதமாய் சொல்லப்படுகிறது: “யார் பரலோகத்துக்கு ஏறிச் செல்வார்?”#10:6 உபா. 30:12 (அதாவது கிறிஸ்துவைக் கீழே அழைத்து வருவதற்காக) என்று உன் இருதயத்தில் யோசிக்காதே. 7அல்லது, “யார் பாதாளத்துக்குள்ளே இறங்கிச் செல்வார்?”#10:7 உபா. 30:13 (அதாவது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி மேலே அழைத்து வருவதற்காக) என்றும் யோசிக்காதே. 8வேதவசனம் உண்மையில் என்ன சொல்கின்றது? “இறைவனின் வார்த்தை உன் அருகே உள்ளது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கின்றது”#10:8 உபா. 30:14 என்கிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசங்கிக்கிறோம். 9அதாவது, “இயேசுவே ஆண்டவர்” என்று உங்கள் வாயினால் அறிவித்து, இறைவன் அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் நீங்கள் மீட்கப் படுவீர்கள். 10உங்கள் இருதயத்தில் விசுவாசித்து நீதிமானாக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் ஒப்புக்கொண்டு அறிவித்து மீட்கப்படுகிறீர்கள். 11“அவர்மீது விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை”#10:11 ஏசா. 28:16 என வேதவசனம் சொல்கின்றது. 12ஏனெனில் யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஒரே இறைவனே எல்லோருக்கும் இறைவனாய் இருக்கின்றபடியால் அவரை அழைக்கின்ற அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தாராளமாக வழங்குகிறார். 13அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற#10:13 கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற – கர்த்தரை அறிந்து அழைக்கின்றவர்கள். யாவரும் மீட்கப்படுவார்கள்”#10:13 யோவே. 2:32 என்று எழுதியிருக்கிறது.
14ஆனால் தாங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவரிடம் தம்மை மீட்குமாறு அவர்கள் அழைப்பு விடுக்கக் கூடுமோ? இதுவரை அவரைப்பற்றி கேள்விப்படவே இல்லையெனில், எப்படி அவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்? எவராவது அவர்களுக்கு செய்தியை பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் அதைக் கேள்விப்படுவதும் எப்படி? 15பிரசங்கிப்பவர்கள் அனுப்பப்படாவிட்டால், அவர்கள் எப்படி பிரசங்கிப்பார்கள்? அதனாலேயே, “நற்செய்தியைக் கொண்டுவருகின்றவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை”#10:15 ஏசா. 52:7இந்த வேதப் பகுதியின் பின்னணியில் “நற்செய்தியைக் கொண்டுவருகின்றவர்களுடைய பாதங்களானது, ஏற்ற சரியான நேரத்தில் செயல்படும்” என்றும் இந்த வசனத்தை அர்த்தம்கொள்ளலாம். என்று எழுதப்பட்டிருக்கிறது.
16ஆனால் கேட்டவர்கள் எல்லோரும்#10:16 எல்லோரும் என்பது எல்லா இஸ்ரயேலரும் நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவேதான் ஏசாயா, “கர்த்தாவே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?”#10:16 ஏசா. 53:1 என்றார். 17எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வருகின்றது. அவர்கள் கேட்டது பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக வருகின்றது. 18அப்படியானால் இஸ்ரயேலர் நற்செய்தியைக் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கின்றேன்? ஆம், நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனென்றால் வேதவசனம் இறைவனின் செய்தியைப்பற்றி,
“செய்தியை கொண்டுவருகின்றவர்களின்#10:18 செய்தியை கொண்டுவருகின்றவர்களின் – கிரேக்க மொழியில் அவர்களின் குரல் பூமி எங்கும் சென்றது.
அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் சென்றன”#10:18 சங். 19:4
என்கிறது. 19இஸ்ரயேலர்கள் அதை புரிந்துகொள்ளவில்லையா? என நான் கேட்கின்றேன்.
“ஒரு இனமாகக் கருதப்படாதவர்களைக்கொண்டு, நான் உங்களுக்கு எரிச்சலூட்டுவேன்;
புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு இனத்தைக்கொண்டு, நான் உங்களுக்குக் கோபமூட்டுவேன்”#10:19 உபா. 32:21
என்று இறைவன் மோசேயின் ஊடாகச் சொல்கின்றார்.
20“என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள்.
என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்”#10:20 ஏசா. 65:1
என இறைவன் சொன்னதை ஏசாயா துணிவுடன் சொல்கின்றார். 21ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ,
“கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி,
நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்”#10:21 ஏசா. 65:2
என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 10: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 10 க்கான வீடியோ