கலாத்தியர் 2

2
அப்போஸ்தலர்களால் பவுல் ஏற்றுக்கொள்ளப்படுதல்
1பதினான்கு வருடங்களுக்குப் பின்பு தீத்துவையும் அழைத்துக்கொண்டு, பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். 2நான் அதுவரை செய்த ஊழியமும் செய்து வருகின்ற ஊழியமும் எவ்விதத்திலும் பயனற்றதாய் போய்விடக் கூடாது என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட இறைவனின் வெளிப்பாட்டைப் பின்பற்றி அங்கு சென்றேன். யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கின்ற நற்செய்தியைக் குறித்து அங்கிருந்தவர்களுக்கு, அதிலும் குறிப்பாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களுக்கு மாத்திரம் தனிப்பட்ட விதத்திலும் எடுத்துரைத்தேன். 3அவ்வேளையில் என்னுடன் இருந்தவன் தீத்து. அவன் ஒரு கிரேக்கன். அப்படி இருந்தும் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி அவனையாகிலும் எவருமே கட்டாயப்படுத்தவில்லையே. 4ஆனாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் அனுபவித்த சுதந்திரத்தை உளவு பார்த்து, எங்களை அடிமைப்படுத்தும் நோக்கத்துக்காக இரகசியமாய் சபையில் புகுந்திருந்த போலிச் சகோதரர்கள் இதைப்பற்றி குறை கூறினார்கள். 5ஆனால் நற்செய்தியின் உண்மை உங்களுக்காக காக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்குச் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.
6அத்தோடு, அங்கு முக்கியமானவர்களாக கருதப்பட்டவர்களும் என்னுடைய செய்தியுடன் வேறு எதையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளவில்லை. (இவர்கள் முன்பு எப்படிப்பட்டவர்களாய் இருந்திருந்தாலும் எனக்குப் பரவாயில்லை, இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல) 7விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு#2:7 விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு என்பது யூதர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் பணி பேதுருவுக்கு ஒப்படைக்கப்பட்டது போல, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு#2:7 விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு என்பது யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டதை சபையின் தலைவர்கள் கண்டார்கள். 8ஏனெனில் விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு#2:8 விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு என்பது யூதர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து பேதுருவின் மூலமாக செயலாற்றிய இறைவனே, யூதரல்லாதவர்களுக்கு#2:8 யூதரல்லாதவர்களுக்கு – கிரேக்க மொழியில் மற்ற இனத்தவர்கள் அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து என் மூலமாகவும் செயலாற்றினார். 9திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும்#2:9 கேபாவும் – இது பேதுருவை குறிக்கிறது. 11, 14 ஆகிய வசனங்களிலும் பேதுருவையே இது குறிக்கிறது., யோவானும் இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையைக் கண்டார்கள். ஆகவே, விருத்தசேதனம் பெறாதவர்கள் மத்தியில் நானும் பர்னபாவும் சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்றும், விருத்தசேதனம் பெற்றவர்கள் மத்தியில் அவர்கள் ஊழியம் செய்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டு, எங்களையும் தங்களுடன் இணை ஊழியர்களாக வலதுகை கொடுத்து ஏற்றுக்கொண்டார்கள். 10வறுமையிலுள்ளவர்களை நினைவில்கொள்ள வேண்டும் என்று மட்டும் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதுவோ நானும் செய்வதற்கு ஆவலுடன் இருந்த ஒன்றல்லவா!
பவுல் கேபாவை எதிர்த்தல்
11ஆனாலும் அந்தியோகியா பட்டணத்திற்கு கேபா வந்திருந்தபோது, அவன் செய்த குற்றத்திற்காக நான் நேரடியாகவே அவனை எதிர்த்தேன். 12யாக்கோபிடம் இருந்து சிலர் வருவதற்கு முன்பு அவன் யூதரல்லாத மக்களோடு சேர்ந்து உணவு உண்டான். ஆனால் அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதன குழுவுக்கு பயந்து யூதரல்லாத மக்களை விட்டு விலகியிருந்தான். 13இவ்விதமாக மற்ற யூதர்களும் கேபாவுடன் சேர்ந்து பாசாங்கு#2:13 பாசாங்கு – போலி வேடம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். செய்தார்கள். இவர்களது பாசாங்கை பின்பற்றியதால் பர்னபாவும் தவறான வழியில் இழுத்து செல்லப்பட்டான்.
14நற்செய்தியில் உள்ள உண்மையின் பாதையில் அவர்கள் செல்லாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதனாயிருந்தும் யூதனைப் போல் வாழாது, யூதரல்லாதவரைப் போல் வாழ்கின்றவன் அல்லவா? அப்படியிருக்க, யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, நீ யூதரல்லாத மக்களை எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.
15“நாங்களோ யூதரல்லாத#2:15 யூதரல்லாத என்பது மற்றைய இனத்தவர்கள் பாவ மக்களாய் இராமல், பிறப்பால் யூதர்களாய் இருக்கின்றோம். 16அப்படியிருந்தும், நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை, மாறாக கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாகவே நீதிமானாக்கப்படுகிறான் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, நாமும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் அன்றி, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக நீதிமான்கள் ஆக்கப்படும்படி கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் ஒருவனும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களைக் கைக்கொள்வதனால் நீதிமானாக்கப்படுவதில்லை.
17“கிறிஸ்துவில் நீதிமான்கள் ஆக்கப்பட வேண்டுமென்று நாடுகின்ற நாமும்கூட மற்றவர்களைப் போலவே பாவிகளாய் காணப்படுகின்றோம் என்றால், கிறிஸ்துவே அந்தப் பாவத்துக்குத் துணை ஊழியரானார் எனலாமா? ஒருபோதும் இல்லை! 18மாறாக, நான் அழித்துப் போட்டதை மீண்டும் நானே கட்ட முயற்சி செய்வேனாயின்,#2:18 விசுவாசத்தின் மூலமாய் நீதிமான்கள் ஆக்கப்படுகிறோம் என்பதை ஏற்றுக்கொண்டு, புறந்தள்ளிய நீதிச்சட்டத்தைத் திரும்பவும் கைக்கொள்ள முயற்சிப்பது. நான் நீதிச்சட்டத்தை மீறுகின்றவன் என்பதையே அது காட்டும்.
19“நான் இறைவனுக்கென்று வாழும்படி நீதிச்சட்டத்தின் மூலமாக நீதிச்சட்டத்திற்கு இறந்தவனானேன். 20நான் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டு மரணித்துவிட்டவன். இனிமேல் உயிர் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் உயிர் வாழ்கின்றார். இப்போது இந்த உடலில் நான் வாழ்கின்ற வாழ்வானது, இறைவனுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தினால் வாழும் வாழ்வாகும். அவரே என்னை நேசித்து எனக்காகத் தம்மையே கொடுத்தவர். 21இறைவனுடைய கிருபையை நான் பயனற்ற ஒன்றாக மாற்றப் போவதில்லை. ஏனெனில் நீதிச்சட்டத்தின் மூலமாய் ஒருவன் நீதிமானாக்கப்பட முடியுமானால் கிறிஸ்து மரணித்தது வீணானதாய் இருக்கும் அல்லவா!”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கலாத்தியர் 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்