கலாத்தியர் 2இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

“நாங்களோ யூதரல்லாத பாவ மக்களாய் இராமல், பிறப்பால் யூதர்களாய் இருக்கின்றோம். அப்படியிருந்தும், நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை, மாறாக கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாகவே நீதிமானாக்கப்படுகிறான் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, நாமும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் அன்றி, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக நீதிமான்கள் ஆக்கப்படும்படி கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் ஒருவனும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களைக் கைக்கொள்வதனால் நீதிமானாக்கப்படுவதில்லை.