1
கலாத்தியர் 3:13
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“மரத்திலே தொங்க விடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கின்றபடியே கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நீதிச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார்.
ஒப்பீடு
கலாத்தியர் 3:13 ஆராயுங்கள்
2
கலாத்தியர் 3:28
உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ, அடிமை அல்லாதவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வேற்றுமை இல்லாதபடி நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருக்கின்றீர்கள்.
கலாத்தியர் 3:28 ஆராயுங்கள்
3
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்கின்றீர்களா? அப்படியானால் ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குறுதியின்படி சொத்துரிமை உடையவர்களாகவும் இருக்கின்றீர்கள்.
கலாத்தியர் 3:29 ஆராயுங்கள்
4
கலாத்தியர் 3:14
அதன்படி, ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவன் வாக்குறுதியளித்த பரிசுத்த ஆவியானவரை விசுவாசத்தின் மூலமாக நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே அப்படிச் செய்தார்.
கலாத்தியர் 3:14 ஆராயுங்கள்
5
கலாத்தியர் 3:11
“நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்று எழுதியிருக்கின்றபடி, நீதிச்சட்டத்தால் இறைவனுக்கு முன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.
கலாத்தியர் 3:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்