இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை இறைவன் அவனுக்குச் சேர்ப்பார். யாராவது இந்த இறைவாக்குப் புத்தகத்தின் வார்த்தைகளில் இருந்து எதையாவது நீக்கிவிட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிவிடுவார்.