விதைக்கிறவனுக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் கொடுக்கின்ற இறைவன், உங்களுக்கு விதையை கொடுத்து அதை பெருகச் செய்து, உங்கள் நீதியின் அறுவடையையும் பெருகச் செய்வார். நீங்கள் எல்லாவிதத்திலும் தாராளமாய்க் கொடுக்கின்றவர்களாகும்படி அவர் உங்களை எல்லாவற்றிலும் வளமுள்ளவராக்குவார். அதன்படி, எங்கள் மூலமாக செய்யப்படும் உங்களது தாராள செயலானது, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்த ஏதுவாக அமையும்.