மேலும், நாங்கள் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், இறைவனின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாக அன்றி இறைவனுடைய வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். உள்ளபடியே அது இறைவனுடைய வார்த்தையே. உண்மையில் அதுவே விசுவாசிக்கின்றவர்களாகிய உங்களுக்குள்ளே வல்லமையுடன் செயலாற்றுகிறது.