நாங்கள் எங்களுடைய மன்றாடுதல்களில் உங்களை நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்துகிறோம். விசுவாசத்தினால் வரும் உங்கள் செயலையும், அன்பினால் உண்டான உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உருவான உங்கள் சகிப்புத் தன்மையையும் நமது இறைவனும் பிதாவுமாயிருக்கின்றவருக்கு முன்பாக நாங்கள் எப்போதும் நினைவுகூருகிறோம்.