The Chosen - தமிழில் (பாகம் 2)Sample
எனக்கு சித்தமுண்டு!
கெட்ட செய்திகளால் உங்கள் உலகம் எப்போதாவது வீழ்ச்சியடைந்துள்ளதா? என் தோலில் வெள்ளைப் புள்ளி தோன்றியதைக் கண்டதும் அதுதான் எனக்கு நேர்ந்தது. என் காலத்தின் மிகவும் பயங்கரமான நோயான தொழுநோயினால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன்.
அந்த நிமிடத்திலிருந்து, நான் ஒரு தொற்று நோயாளி ஆனேன். அனைவரின் பார்வையிலிருந்தும் நான் ஓரங்கட்டப்பட்டேன். என் உடலில் நோயின் விளைவுகள் பயங்கரமாக இருந்தது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, மிகவும் மோசமான விஷயம் இது இல்லை. சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதே என்னைப் பொறுத்தவரை, மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.
நான் செய்த பாவங்களால் ஆண்டவரால் சபிக்கப்பட்டேன் என்று பெரும்பாலான மக்கள் நம்பினர், என்னை விட்டு விலகினர். நான் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டேன், என்னை மிகவும் நேசிப்பவர்கள் கூட தொட்டால் நோய் ஒட்டிக் கொள்ளும் என்னும் பயத்தில் என்னை யாரும் தொடவில்லை... நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் யாரும் என்னைக் காண வரமுடியாது.
எனக்கு வீடு இல்லை, உண்ண விரும்பியும் உணவு எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு இது மிகவும் பாரமாக இருந்தது: நான் இந்த கனவில் இருந்து எழுந்திருக்க விரும்பினேன், நோய் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப விரும்பினேன்.
ஒரு நாள், என் மனதில் ஒரு சிறிய நம்பிக்கை துளிர்விட்டது. கானாவூரில் நடந்த திருமணத்தில் வேலைக்காரிகளில் ஒருவராக இருந்த என் சகோதரி என்னிடம் சொன்னாள், “நாசரேத்திலிருந்து இயேசு என்னும் பேர் கொண்ட ஒருவர் இதுவரை நான் கண்டிராத அற்புதத்தை செய்தார்: அவர் சுத்திகரிப்பு ஜாடிகளில் இருந்த தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார்” என்று. அவளே அந்த ஜாடிகளில் தண்ணீரை நிரப்பியிருந்தாள்! விருந்தின் அதிபதி கூட அவர் ருசித்ததிலேயே அதுவே சிறந்த திராட்சை ரசம் என்று கூறினார்.
இயேசு அந்தப் பகுதியில் இருந்தபோதே நான் அவரைக் கண்டுபிடித்தாகவேண்டும். நான் சிலரிடம் கேட்டேன், இறுதியாக நான் அவரைக் கண்டுபிடித்தேன். அவருடைய சீடர்கள் என்னை அச்சுறுத்தி, நான் அருகில் வரக்கூடாது என்றனர், ஆனால் இயேசுவோ அவர்களை அமைதிப்படுத்தி என்னருகில் வந்தார்.
தொழுநோயாளிக்கு மிகவும் ஆபத்தான ஒன்றை நான் செய்தேன்: நான் முழங்காலில் நின்றேன். இயேசு மட்டுமே என் நம்பிக்கை, எனவே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து சரணடைய வேண்டிய நேரம் இது. நான் அவரிடம் மன்றாடினேன், “ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் (மத்தேயு 8:2-4). நீர் விரும்பினால் மட்டுமே... நாம் உம்மிடம் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.”
அவரது மென்மையான கண்கள் என் மீது பதிந்தபடி, அவர் என் தோளில் கையை வைத்தபடி,"எனக்கு சித்தமுண்டு" என்றார். யாரும் என்னைத் தொடாமல் அதிக நாட்கள் கடந்து போயிருந்தது! ஆண்டவரின் அன்பும் வல்லமையும் என் உடலில் பாய்வதை உணர்ந்த நான் அழ ஆரம்பித்தேன். என் காயங்கள் அனைத்தும் மூட ஆரம்பித்தன, சில நொடிகளில், தொழுநோய் நீங்கியது, என் தோல் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பியது. இயேசு என்னைக் குணப்படுத்தினார்!
அந்த நாள் என் வாழ்க்கை மீட்கப்பட்டது, அதற்கும் மேலாக, ஜீவனின் அதிபதியை கண்டறிந்தேன்.
இயேசு என்னைத் தெரிந்துகொண்டதால், நான் இனிமேலும் ஒரு தொழுநோயாளி அல்ல!
குறிப்பு: அன்பான நண்பரே, நீ அனுபவிக்கும் சூழ்நிலையையும் உன் வலிகள் மற்றும் தேவைகளையும் இயேசு நன்கு அறிவார். அவர் இன்று உன் கோரிக்கைகளைக் கேட்டு அவற்றிற்கு பின்வருமாறு பெரிய பதில்களை அளிக்க விரும்புகிறார் "நான் தயாராக இருக்கிறேன்", "நான் உன்னை குணப்படுத்த தயாராக இருக்கிறேன்”, "நான் உன்னை வழிநடத்த விரும்புகிறேன்”, "நான் உன்னை ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறேன்" என்பதாக... வரும் நாட்கள் அனைத்திலும் உன் இருதயத்தை அவர் முன் ஊற்றி விடு. அவருடைய வல்லமை மற்றும் அன்பினால் நீ தொடப்படுவாய்.
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
Scripture
About this Plan
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More