YouVersion Logo
Search Icon

The Chosen - தமிழில் (பாகம் 2)Sample

The Chosen - தமிழில் (பாகம் 2)

DAY 1 OF 5

மேசியா நானே

நான் சிறுவனாக இருந்த நாள் முதல், மேசியாவின் வருகையை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆம், எப்போது மேசியா இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக வந்து ரோமர்களின் சர்வாதிகாரத்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவிப்பார் என்று நான் கனவுகள் கண்டதுண்டு.

யோவான் ஸ்நானகன் அவருடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, ​​நான் அவருடைய சீடர்களில் ஒருவனாக மாறினேன், நான் அவரைப் பல வருடங்களாக பின்பற்றினேன். நாங்கள் எல்லாவிதமான பாடுகளை சந்தித்தபோதும், ஒவ்வொரு நாளும் நான் மேசியா வருவதை காணப்போகும் நாளை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்ற உறுதியால் என் உள்ளத்திற்குள் மகிழ்ந்தேன்.

என் சகோதரன் சீமோன் கூட மேசியா வெளிப்படும் நாளுக்காக காத்திருந்தான், ஆனால் அவன் ஏற்கனவே உங்களிடம் கூறியது போல், அவனது விசுவாசம் படிப்படியாக தணிந்தது… நானும் மிகவும் சிரமப்பட்டேன். உண்மையில், நானும் கணிசமான கடனில் இருந்தேன், காரணம் மீன்பிடித்தல் தொழில் சமீப காலமாக சரியாக நடக்கவில்லை, ஆனாலும் நான் என் விசுவாசத்தில் உறுதியாக இருந்தேன்.

இயேசுவைப் பார்த்த அந்த நாள் காலை வேளை எனக்கு நினைவிருக்கிறது. நான் யோவான் ஸ்நானகனுடன் இருந்தேன், அவர் இயேசுவை சுட்டிக்காட்டி, "இதோ தேவ ஆட்டுக்குட்டி" (யோவான்1:35-42) என்றார். என்னால் என் உள் உணர்வை எதிர்க்க முடியவில்லை: நான் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. என் இதயம் துடித்தது, ஏனென்றால் எனக்குள் ஆழமாக, நான் உறுதியாக நம்பினேன்: இயேசு தான் மேசியா!

நான் சீமோனிடம் சொல்ல ஓடினேன், ஆனால் அவன் இதை எதிர்கொண்ட விதம் நான் எதிர்பார்த்தது போல் இல்லை. அவனுடைய விசுவாசம் எல்லா நேரத்திலும் குறைவாகவே இருந்தது, அவனுடைய பிரச்சினைகள் அவன் தெளிவாகச் சிந்திக்கத் தடையாக இருந்தன. அதே இரவில் நாங்கள் மீன்பிடிக்கச் சென்றோம், காலையில் நாங்கள் கடற்கரையில் இயேசுவைச் சந்தித்தபோது, ​​கடற்கரையில் அவரைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது! ஏதோ நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும், அவர்தான் மேசியா என்று பேதுருவுக்குச் சொல்லி, இயேசுவின் எல்லா அறிவுரைகளையும் பின்பற்றும்படி என் சகோதரனை நம்பிக்கையுறச் செய்தேன்…

அதிசயமான அந்த மீன்கள் அகப்பட்ட அனுபவம் நம்பமுடியாத ஒன்று தான். நான் ஒரு அற்புதமான அதிசயத்தைக் கண்டேன், என் கடன்களும் இப்போது அடைக்கப்பட்டன என்பதை நினைத்து என் இதயம் மகிழ்ச்சியில் மூழ்கியது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், என் சகோதரன் இயேசுவிடம் மண்டியிட்டு, விசுவாசம் புதுப்பிக்கப்பட்டு, இயேசுவைப் பின்பற்றத் தயாராக இருப்பதைப் பார்த்த அந்த நிகழ்வு‌தான்.

நான் நம்பியது உண்மை: இயேசுவே மேசியா. நான் இப்போது உலகத்தின் பாவத்தைப் போக்குகிறவரின் சீடனாக இருக்கிறேன்.

என் பெயர் அந்திரேயா, சீமோனின் சகோதரன், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பான நண்பரே, நீ நீண்ட காலமாக இயேசுவைப் பின்தொடர்ந்திருக்கலாம், அவர் கர்த்தர் என்பதை நீ அறிந்திருப்பதால் நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை உன் நம்பிக்கை தணிந்திருக்கலாம், மேலும் உன் இதயத்தில் ஆழமான சந்தேகங்கள் இருக்கலாம். எப்படியிருந்தாலும், ஆண்டவர் இன்று உன் வாழ்க்கையில் ஒரு அதிசயத்தை செய்வார் என்றும், அவர் உன் விசுவாசத்தை இன்னும் துரிதப்படுத்தி புதுப்பிக்க வேண்டும் என்றும் நான் உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்: "பிதாவே, என் அன்பு நண்பருக்காக/தோழிக்காக நான் ஜெபிக்கிறேன், முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று அவருடைய/அவளுடைய விசுவாசம் புத்துயிர் பெறுவதாக. உமது பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக அவன்/அவள் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன். ஆமென்!"

நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

Scripture

Day 2

About this Plan

The Chosen - தமிழில் (பாகம் 2)

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch

More